மேலதிகாரிகள்

உறங்கத் தாமதமாகும்
ஒவ்வொரு இரவும்
சுமந்து வருகிறது
உழைப்பின் களைப்பை

அலுவலகம் உறிஞ்சிச்
சுவைத்த நேரத்தை
பார்களில் அமர்ந்து
பீராக உறிஞ்சியபடி

அதிக வேலை பற்றியும்
அதிகப்படியாயோ
குறைந்தோ கிடைத்த
போனஸ் பற்றியும்

கடுகடுத்த மேலதிகாரியை
கிண்டலடித்தபடியும்
சக ஊழியனை
ஜால்ராக்காரனாகவும்

ஐஸ்துண்டங்கள்
கரைய கரைய
மனதைக் கரைத்தபடி
வண்டியில் ஏறும்போது

தூக்கமற்று முறைக்கும்
மனைவி முகம் எதிர்கொள்ள
கரைந்த கவலையெல்லாம்
திரும்ப வயிற்றைக் கலக்கியபடி..

Series Navigationவிளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்அண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்