மேலும் மேலும் நசுங்குது சொம்பு!


 

ஊரைவிட்டு

விலக்கி வைத்தனர் என்னை

நீரைவிட்டு

நிலத்தி லிட்டனர் மீனை

 

ஊரினம் யாவரும்

ஓரின மாயினர்

எனக் கெதிராய்

காரண மாயிரம்

தோரண மாயின

 

சீர்திருத்தம் சொன்னவரை

பெரியார் என்றனர்

சிறுதிருத்தம் சொன்ன எனை

பிரிந்துபோ என்றனர்

 

பஞ்சாயத்தில்

புலிவேஷத்துடன்

பத்தாயத்து

எலிகள்…

படிப்பறிவு இன்றியே

ஒரு

பிடி பிடித்தன

 

பிஞ்சுகள் இருவர்

பிழை செய்தனர்

விடியோ விளையாட்டென

வாழ்க்கயை எண்ணினர்

வாழத் தலைப்பட்டு

வீடுகள் துறந்தனர்

 

ஓடிப் போனவரைத்

தேடிப் பிடித்தனர்

ஊர்கூடி யமர்ந்து

ஓயாது பேசினர்

 

 

 

சட்டமோ

சுய அறிவோ

இன்றி

தீவட்டித் தீர்ப்பு ஒன்றை

சொல்லிவைத்தனர்

 

பஞ்சாயத்துக்குப்

பணம் கட்டி

பாவம் தீர்க்கச் சொன்னனர்

 

பிள்ளைகள் தவறுக்கு

பெற்றோருக்குத் தணடனை

 

ஒழுக்கக் கோட்பாடுகளில்

ஊருக்குப் பொருப்பில்லையா

ஓடிப்போகாமல் தடுக்க

ஊர் என்ன செய்தது

 

தவற்றை

நிகழாமல்

திருத்தி

தடுக்கத்

தவறிய

பஞ்சாயத்துக்கு

என்ன தண்டனை

 

சொல்லி முடித்ததும்

என்னை

தள்ளி வைத்தனர்

 

மசால் வடையும்

மலாய் சாயாவும்

மினெரல் வாட்டரைக்

குடித்தும் கொப்பளித்தும்

கலைந்துச் சென்றது பஞ்சாயத்து

 

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 10நன்றி மறவா..!