மோதிடும் விரல்கள்

க.வெள்ளிங்கிரி

     

தாலிகட்டும் திருமணத்தில்

தன் பங்கும் வேண்டுமென,

வட்ட வாய் குடம் முழுதும்

வயிறு முட்ட குடித்த நீரில்,

வளையமாய் வார்க்கப்பட்டவன்

விளையாட்டாய் ஒளிந்து கொண்டான்!

தம்பதியின் தவிப்புடனே

மோதிடும் விரல்கள்

மோதிரம் தேடுது!

 

 

 

 

Series Navigationஆதலால் காதல்செய்வோம்…சோளக்கொல்லை பொம்மை