மௌனம்

சுரேஷ் ராஜகோபால் 

 

#

வார்த்தைகள் தடுமாறி  யாசிக்கிறது…

விமோசனம் தேடி  – ஆழமான

நிலையிலிருந்த அந்த

மெளனத்திடம்.

 

மௌனமோ மேலும்

திடம் கொண்டு

மௌனத்தையே

கடை பிடிக்கிறது.

 

சலசலப்புக்கு அஞ்சாத நிலையே

சாஸ்வதம் என்றே

தளர்விலா நிலையெடுத்தது பிறகும்

மௌனமோ தன்னிலை மாறவில்லை ! 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 258 ஆம் இதழ்