யாருக்கு சொந்தம்

அங்காடித் தெருவில்

அனாதையாகக் கிடக்கிறது

ஐம்பது வெள்ளி

பார்த்தான் ஒருவன்

பறந்து எடுத்தான் வேறொருவன்

‘என் காசு’ என்றான் பார்த்தவன்

‘இல்லை அது என் காசு’ என்றான் எடுத்தவன்

அடாவடிப் பேச்சு

அடிதடியில் முடியலாம்

‘ஆளுக்குப் பாதியே

நியாயம்’ என்றான் இன்னொருவன்

‘முடியாது நீ

முடிந்ததைப் பார்’

எடுத்தவன் ஓடுகிறான்

பார்த்தவன் விரட்டுகிறான்

‘அம்மா… அம்மா…

அடிக்கா தீங்கம்மா….

சூடு வெக்காதீங்கம்மா…..

சம்பாரிச்சு குடுத்திர்றேம்மா….

அம்மா….அம்மா….’

தொலைத்த சிறுவன்

வீட்டில் துவைக்கப் படுகிறான்

அமீதாம்மாள்

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]தேடல்