ரியாத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா!

Spread the love

இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் இனியவன் இசாருத்தீன் எழுதிய ‘மழை நதி கடல்’ என்னும் கவிதை நூலின் வெளியீட்டு விழா, மழையோ நதியோ கடலோ வாய்த்திராத பாலைவன ரியாத் மாநகரில் டூலிப் இன் (Tulip inn) என்னும் நட்சத்திர விடுதியில் எழுத்துக்கூடம் அமைப்பினர் சார்பாக நடைபெற்றது.

சவூதி அரேபியாவிற்கான இலங்கை துணைத் தூதர் திருவாளர். எ. ஷபருல்லாஹ் கான் சிறப்பு விருந்தினராகவும் ரியாத்திலுள்ள இராணுவ மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திரு. எம்.எம். ஷஹீத் சிறப்புப் பேராளராகவும் கலந்து சிறப்பித்த இவ்விழாவுக்கு திரு. சுவாமிநாதன் தலைமைத் தாங்கினார். திரு. இம்தியாஸ் நூலாசிரியர் பற்றியொரு அறிமுக உரை அளித்தார்.

கவிஞர்கள் திரு. கே.வி.ராஜா, திருமதி.மலர்ச்செல்வி, திரு. ஜாஃபர் சாதிக், திரு.தங்கஸ்வாமி, திரு.வெற்றிவேல் , திரு.ஸ்கந்த ராஜா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். திரு.ஜவஹர் சவரிமுத்து முதல் நூற் பிரதியை வெளியிட இலங்கைத் துணைத் தூதர் பெற்றுக்கொண்டார்.

“தற்காலத்தில், தமிழில் கவிதைகளை விடவும் கவிஞர்களே அதிகம்” என்பதை நகைச்சுவையாய் குறிப்பிட்டாலும் ஆய்வுரை வழங்கிய கவிஞர் இப்னுஹம்துன் , கவிஞர் இசாருத்தீனின் நூலில் காணப்பெறும் கவிநயங்களை, நுட்பங்களை அழகுறச் சுட்டினார்.

மன்னர் சவூத் பல்கலைப் பேராசியர் மாசிலாமணி சிறந்ததொரு பாராட்டுரை அளித்தார்.

சிறப்பு விருந்தினர்களின் இயல்பான நகைச்சுவைப் பேச்சில் அரங்கம் குலுங்கியது. எழுத்துக்கூடப் பொறுப்பாளர் கவிமணி (இலக்கியர் ) ஷாஜஹான் நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

ஏற்புரை ஆற்றிய நூலாசிரியர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். திரு. அப்துல்மன்னான் நன்றியுரை நவின்றார்.

 

 

Series Navigationஎன்று வருமந்த ஆற்றல்?பதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு