ருத்ராவின் குறும்பாக்கள்

Spread the love

ஏழுக‌ண்க‌ளையும் பொத்தி பொத்தி
இனிய ஓசைகளின் க‌ண்ணாமூச்சி.
நாத‌ஸ்வ‌ர‌ம்.

எழுப‌து தாண்டி ந‌ரைத்து விட்டது.
என்ன அர்த்தம் அது?
“மாங்க‌ல்ய‌ம் த‌ந்து நானே”

அர்ச்ச‌னை கேட்டு அலுத்து சிவ‌னும்
த‌ட்டு ஏந்தி வ‌ரிசையில் நின்றான்.
குருக்கள் கேட்டார்”என்ன‌ கோத்ர‌ம்?”

கால் வைத்து நடக்க‌ ம‌ன‌மில்லை.
ந‌சுங்கிப்போய்விடாதா இத‌ய‌ம்?
அவ‌ள் போட‌ கோல‌ம்.

ப‌வுர்ண‌மி
மூன்றாம் பிறைக‌ளை ருசி பார்த்த‌து.
அவ‌ள் ந‌க‌ம் க‌டித்தாள்.

==============================

============ருத்ரா
Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5ருத்ராவின் குறும்பாக்கள்