ரோஜா ரோஜாவல்ல….


சந்தேகமும் எரிச்சலுமாய்ப்
பார்க்கிறான் பூச்செடி விற்பவன்…
மஞ்சள்,வெள்ளை,
சிவப்பு,மரூன்,ஆரஞ்சு ..
இன்னும் பெயர் சொல்லவியலா 
நிறச்சாயல்களில் 
எதையும் தேர்ந்தெடுக்காது 
எதையோ தேடும் 
என்னை அவனுக்குப் பிடிக்கவில்லை…
“மூணுநாள் கூட வாடாது,…”
“கையகலம் பூ….”
அவன் அறிமுக இணைப்புகளைக் 
கவனியாது ,
“நா கேட்டது ….லைட் ரோசுப்பா …
இவ்ளோ பெருசா பூக்காது…
மெல்லிசா…சட்டுன்னு உதிரும்…
அந்த வாசனையே இதுல இல்ல்லியே….”
வாரந்தோறும் 
நான் தரும் மறுப்புகளில் 
என் நினைவில் படிந்த 
ரோஜாவைத் தேடிக்கொண்டே இருக்கிறான் 
அவன்……
                           -உமாமோகன்.
Series Navigation2-ஜி அலைக் கற்றை ஊழலும் இந்திய ஜனநாயகமும்வேறோர் பரிமாணம்…