வருவேன் பிறகு!

-பா.சத்தியமோகன்
நெஞ்சில்
யாருமில்லாத போது நுழைகிறேன்
இருக்கின்ற சிலரும் உறக்கத்தில் இருக்கின்றனர்
காற்று இன்று அமைதியாய் இல்லை
எவருக்கும் அமைதி பற்றி தெரியவில்லை
நன்கு அறிய முடிகிறது
ஒருவன் சந்தேகிக்க
எனக்கு வரும் காற்றின் முன்நின்று அதையும் தடுக்கும்போட்டியில் உள்ளான்!
விலகி எழுந்துபோக நினைக்கிறேன்
இருக்கின்ற சிலரின் கால்கள்
உறக்கத்தில் மட்டுமே நடக்கப்பழகியுள்ளதையும் அறிகிறேன்
இதற்கு மேல் நான் எழுத எண்ணிய காகிதமும் குத்துகிறது
யாருமில்லாதபோது வருகிறேன் பிறகு!

*****

Series Navigationரூபம்தெல்காப்பியம் கூறும் தன்மைப் பன்மையில் வினையடிகள்