வலி

Spread the love

 

 

ஆர் வத்ஸலா

அம்மாவாக மட்டும்

இல்லாமல்

அப்பாவாகவும் இருக்க வேண்டிய

கட்டாயத்தால்

அழும் குழந்தையை

அம்மாவிடம் விட்டு விட்டு

வேறு ஊருக்குப் போய்

 

முதுகு போர்த்தி

‘பின்’ குத்தி

விலகா சேலையின்

வெளியே

வேண்டுமென்றே

தொங்க விட்ட

அர்த்தம் தொலைத்த

ஐம்பது பைசா மஞ்சள் கயிற்றில் தொங்கிய

கால் பவுன் மூலமும்

கடுகடுத்த முகத்தின் மூலமும்

சக ஊழியர்களுக்கு

பத்தினித் தனத்தை

பறை சாற்றிக் கொண்டு

பணியில் முழு கவனம் செலுத்திக் கொண்டு

இல்லாத

மனோதிடத்தை இருப்பதாக

காண்பித்துக் கொண்டு

இருந்தாலும்

 

பேருந்து நெரிசலில்

ஏதோ ஒரு மூலையில்

ஏதோ ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டு

எழும்

சுரீரென

அடிவயிற்றிலிருந்து

வலி

—–

Series Navigationவிரிசல்பாலைவன நகரத்திலிருந்து ஒட்டகங்களுக்காய் ஒரு குரல்