Posted in

வழிமேல் விழிவைத்து…….!

This entry is part 24 of 45 in the series 4 மார்ச் 2012

பவள சங்கரி.

உடலோடும் உணர்வோடும்
விளையாடுவதே
வாடிக்கையாகப் போய்விட்டது.

சூடுபட்ட பூனையானாலும்
சொரணை கெட்டுத்தான்
போய்விடுகிறது.

மடிமீதும் மார்மீதும்
கையணைப்பினுள்ளும்
தஞ்சம் புகுவதே
வாடிக்கை.ஆகிவிடுகிறது.

வெட்கமுமின்றி துக்கமுமின்றி
தேடித்திரிதலே அன்றாடப்
பிழைப்பாய் இருக்கிறது.

எவர் கொடுத்தாலும்
மறுக்க இயலாத
ஏழ்மையாகிவிடுகிறது.

உண்ணும்போதும்
உறங்கும் போதும் கூட
பிரிய மனம் மறுக்கிறது.

நம்மையே நையப்புடைத்தாலும்
விட்டு அகல முடியாமல்
தவிக்கிறது உள்ளம்.

ஓங்கி ஒலித்தாலும்
இதமாக வருடினாலும்
தாங்கிப் பிடிக்கிறது தன்னையே.

வண்ணங்களும் எண்ணங்களும்
வேறுவேறாய் ஆனாலும்
அகல மறுத்து
திண்ணமாய் இருக்கிறது.

காட்டாற்று வெள்ளத்தில்
அடித்துச் செல்லும்போது
தோணியாகி காத்துநிற்கிறாய்.

தத்துவங்களாய்ப் பேசி
கட்டாந்தரையையும்
கரும்புக் காடாக்கினாய்!

கவின்மிகு நடையினால்
கனிமொழி உரையினால்
பனிப்பொழிவாய் உறையச்செய்தாய்!

துணைநாடி துவண்டு
விழும் வேளையில்
தோள்கொடுத்து அணைக்கிறாய்.

கவிபாடி காத்து நிற்கையில்
மடிஏந்தி பூத்து நிற்கிறாய்.

விதியின் பாதையில்
வீழ்ந்து விடாமலிருக்க
விருட்சமாய் நீள்கிறாய்.

கள்ளத் தோணியானாலும்
கனிவாய் கொண்டுசேர்க்கிறாய்
கதைகள் பலபேசி.

ஊனின்றி உறக்கமின்றி
பித்தாக்கி பேதையாக்கி
என்ன செய்யப்போகிறாய் மேலும்?

உடன்கட்டை ஏறிவருவாயா
மறுபிறவியில் உடன்வருவாயா
கானல்நீராய் ஓடி ஒளிவாயா?
சொல்வாயா எம் புத்தகக் காதலனே?
***

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 2 புண்பட்ட பெருமைஅந்த முடிச்சு!

9 thoughts on “வழிமேல் விழிவைத்து…….!

  1. நல்ல கவிதை…….எதிர்பாராத காதலனாக புத்தகம்.

  2. பாதி ஒரு வகை. மறு பாதி வேறு வகை. இரண்டையும் தனித்தனியாக்கும்போது இரு பாக்களலாகும்.

    அதாவது, “திண்ணமாய் இருக்கிறது” என்று முடியும்வரை ஒரு பா. “காட்டாற்று வெள்ளத்திலிருந்து” இன்னொரு பா தொடங்குகிறது.. நடை மாறும்போது என் கவனமும் மாறுதிசைக்குப் போய் விடுகிறது.

    “திண்ணமாய இருக்கிறது” வரை இருந்த சிறப்பு அதன் பிறகு கொஞ்சம் குறையத்தான் செய்கிறது. ஏனெனில், முதற்பகுதியில் எல்லாம் இலைமறைகாயாக இருப்பது உணரப்படுகிறது. இரண்டாவதில் அது எவரை நோக்கி எனத் தெரிந்துவிடுவதால், சுவராசியம் குறைந்து போய்விடுகிறது. இலைமறை காயில் இருக்கும் இழுப்பு ஒரு தனி அலாதி !

    முதற்பா கொஞ்சம் செக்ஸி. இரு பாலாரில் அந்தரங்க விசயங்களை கொஞ்சம் எட்டிப்பார்த்தமாதிரி ஒரு குற்ற உணர்வு.

    உடலோடும் உணர்வோடும்
    விளையாடுவதே
    வாடிக்கையாகப் போய்விட்டது.

    சூடுபட்ட பூனையானாலும்
    சொரணை கெட்டுத்தான்
    போய்விடுகிறது.

    மடிமீதும் மார்மீதும்
    கையணைப்பினுள்ளும்
    தஞ்சம் புகுவதே
    வாடிக்கை.ஆகிவிடுகிறது.

    அடுத்த பாவில் கனவுக்காதலன் வருகிறான்.
    “உடன்கட்டை ஏறிவருவாயா?”
    அவனுக்கு ஏது உடன்கட்டை?
    இந்து மரபில் பெண்ணுக்குத்தானே? எனவே கருத்துப்பிழை விழுந்துவிடுகிறது.

    1. அன்பின் காவ்யா,

      தங்களின் ஆழ்ந்த வாசிப்பிற்கும், கருத்திற்கும் நன்றி.

      //“உடன்கட்டை ஏறிவருவாயா?”
      அவனுக்கு ஏது உடன்கட்டை?
      இந்து மரபில் பெண்ணுக்குத்தானே? எனவே கருத்துப்பிழை விழுந்துவிடுகிறது.//

      உடன்கட்டை ஏறும் வழக்கமெல்லாம் மலையேறி காலங்கள் பலவாகிவிட்ட போதிலும், இன்றும் ஒரு காதலிக்காக, ஒரு காதலனும், காதலனுக்காக காதலியும் உடன் உயிர் துறப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறதல்லவா… கவிதை என்பது சில நேரங்களில் அந்த நேரத்து உணர்வை தயக்கமின்றி பிரதிபலித்து விடுகிறது…

      நல்ல காதலிக்காக ஒரு காதலன் உடன்கட்டை ஏறி வரலாமே…

  3. Varigal arumai…Kavinayam arumai…Karuthukal arumai…puthagathai kaathalankkiya puthumai…KAATHALAIYUM KAAMATHAIYUM PATTUM PADAMALUM SOLLUM VITHAMUM INIMAI. MOTHATHIL ITHUTHAN THAMIZHIN INIMAI!

    1. I wish I were the poet to receive these opulent Johnsonian encomium. I am jealous of Ms Pavala Sankari !

      In English, there was a literary critic and his name – Samuel Johnson. Poets, after releasing their books of poems, waited with bated breath the critical views from Dr Johnson. Bated breath ? Yes, if his criticism is fair, the books would sell like hot cakes on Xmas eve! The publishers would order more copies. If it is adverse, the orders wd be withdrawn and the poets would not come out of their homes for fear of public shame.

      Our Thinnai Johnson is an antithesis of Dr Johnson. Dr Johnson was an Englishman; Thinnai Johnson is a Tamilian. The difference is tell tale !

      1. அன்பின் காவ்யா,

        நல்ல விமர்சனம் என்பது ஒரு படைப்பாளிக்கு அளிக்கும் மகுடம் அல்லவா. தவறுகளைக் கண்டறியும் நேரம், நம் கற்பனைச் சிறகும் கனிவாய் விரிந்து கதை பல பேசி நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுத்து விடும் அல்லவா… அந்த வகையில் தங்களைப் பார்த்து நானும் பொறாமை கொள்கிறேன். அத்துனை ஆழ்ந்த வாசிப்பனுபவம் ஒரு வரப்பிரசாதம். டாக்டர் ஜான்சன் அவர்களின் வாழ்த்துகளுக்கு மீண்டும் நன்றி.

        அன்புடன்

        பவள சங்கரி.

    2. அன்பின் திரு ஜான்சன்,

      நனி நன்றி. உண்மை ஐயா, நம் தமிழ் மொழியால் மட்டுமே, வார்த்தைகள் மூலம் உணர்வுகளை அப்படியே உள்ளது உள்ளபடி பிரதிபலிக்கச் செய்ய முடியும் அல்லவா… எத்துனை அழகான உள்ளார்ந்த கருத்து அளித்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

      அன்புடன்

      பவள சங்கரி.

Leave a Reply to Kavya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *