வாங்க  கதைக்கலாம்…

 

                                                                          

ச. சிவபிரகாஷ்

 

கதை…

இது  கதையுமல்ல,

காலம்,

களவு  செய்த  சேதி.

 

பள்ளியில்  தொடங்கிய,

கதைக்களம்,

பல சுற்று  தரித்து,

பக்குவம்  வந்தேமைந்தலில்,

கதைக்கிறேன்.

 

காகிதத்தையும்,

கணக்கையும்,கையில் வைத்து,

கதைத்து கொண்டிருந்தவர் – பலர்.

 

அறிவியலிலும்,

பூகோளத்திலும்,

புதைந்து,

கதைத்து கொண்டிருந்தவர் – சிலர்.

 

எனக்கு,

அஞ்ஞானமுமில்லை,

அறிவேதுமில்லை.

 

ஆதலால்…

 

எம். ஜி.ஆருக்கும்,  சிவாஜிக்கும்,

பிறகு  வந்த,

தலைமுறை  என்பதால்,

ரஜினி,  கமல்  பற்றியே,

கதைத்து கொண்டிருந்தவர்களில்,

நானே…

முதன்மையானவன்.

 

அஞ்ஞானம்  தேறாதும்,

மெய்ஞானம்  தோற்கவில்லை,

வாங்க  கதைக்கலாம்.

 

வீட்டு

திண்ணை  பேச்சையும்,

விடலையில்  செய்த  சேட்டையையும்,

சேமிப்புடன்  வைத்துள்ளேன்,

என்,

சிந்தையுள்.

 

வாங்க கதைக்கலாம்…

 

விஞ்ஞானம்  முன்னேறிய,

பாதையில்,

விருந்துண்டதை  விளக்கிறேன்.

 

கழித்த  பெருங்குடலையும்,

கழிந்த  பொழுதையும்,

கணக்கிட்டு,

கதைப்பதில்  என்ன  பயன் ?.

 

செவிப்படுகிறேன்.

உங்களது,

கூக்குரலில்…

 

நண்பர்களே,

ஓ…

நண்பர்களே,

நானறிந்தது  மட்டுமல்ல,

“நா” அறிந்த வரை,

நாம்…

நேர்  கூடியே, பல  ஆண்டுகளாக,

பேசிக்கதைத்தோம்.,

பொழுதால்  உளமகிழ்ந்தோம்.

 

இப்படி…

கதை  பேசியே,

கதையும்  பேசியே,

காலம்  அசைவில்,

கண்ணில் படுவதிலிருந்து,

கலைந்தும்  போனோம்-என்பதில்,

பெருங்கவலை  எனக்கு.

 

காலமே!

ஓ…

எந்தன் காலமே.

 

நாங்கள்…

கதைத்தது  போல்,

எவரேனும்,

இப்போதில்லை.

வீட்டு  திண்ணைகள்  இல்லை,

தலைவர்கள்  திரைப்படத்தை  கண்டு,

விசிலடித்தும்,

லாட்டரி குப்பைகளை,

வீசி  எறிந்த  தியேட்டர்களும்  இல்லை.

 

தாடி  வைத்த  காளையர்களை,

காண்கிறேன்.,

தாவணி  போட்ட  தேவதைகள்  இல்லை,

தேடி  பார்த்தேன்…

என்னை  திட்டிய,

வகுப்பறை  வாத்தியார்களும்  இல்லை.

 

மந்தைவெளியில்,

மாடுகள்  இல்லை.,

சந்தையில்…

“இடைவெளியே”  இல்லை.

 

நேர்பட,

இதையெல்லாம்,

எப்படி ?

கதைப்பேன் – உங்களிடத்தில்,

என்…

நட்புகளே.

 

நம்  இடைவெளிக்கு,

இடைசொறுகளாய் தான்

இப்போ  வந்தததோ?

இந்த  இண்டர்நெட்.

இது,

புரிதலுக்கு  இடம் கொடுக்காமல்,

பூரிப்பை மதியாமல்,

பூப்படைந்த கால கோளாறு.

 

புலனம் (whatsapp) வழியே,

புழுவாயிருந்தது  போதும்.,

வண்ணத்துப் பூச்சிகளாய்,

வலம் வருவோம்,

தோழமை என்னும் தோட்டத்து ,

பூக்களில்.

 

நேரெதிரே

வாருங்கள்…

 

அப்போதாவது  – நான்,

தற்பெருமையால்,

கதைக்க முடிக்கிறதா

பார்ப்போம்.,

என்..

நெடுங்கவிதைகளையும்.

அட…

இதுவும் கவிதையா?.

 

           

                                                                                                            ச. சிவபிரகாஷ்.

 

Series Navigation6.ஔவையாரும் பேயும்இன்னொரு புளிய மரத்தின் கதை