வால்ட் விட்மன் வசனக் கவிதை – 69 ஆதாமின் பிள்ளைகள் – 3

 

(Children of Adam)

(Whoever You are Holding Me Now in your Hand)

இப்போது உன் கரத்தால் என்னைப்

பற்றி கொண்ட நீவீர் யாராயினும் !

 

 (1819-1892)

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

 

 

[முன்வாரத் தொடர்ச்சி]

 

 

உன் உதடுகளை

என் வாயோடு ஒட்டிக் கொள்ள

இங்கே அனுமதிப்பேன்,

நீண்ட நேரமிடும்

தோழனின் முத்தமுடன் !

அல்லது

புதுப்பதி யிட்ட முத்த மோடு !  

ஏனெனில்

நானே புதுக் கணவன்,

நானே தோழியும் !

உன்னால் முடிந்தால்

உனது ஆடைக்குள்

என்னை நீ

மூடிக் கொள் !

அங்குன் இதயத் துடிப்பை

உணரலாம் !

அல்லதுன் மடிமீது நான்

உறங்கலாம் !

என்னைத் தூக்கிச் செல்

நிலத்தின் மேலோ,

அன்றிக் கடலின் மேலோ

நீ பயணம்

செய்யும் போது !

உன்னைத் தொட்டால் போதும்

மிக்க

இனிமை யானது அது !

நான் உன்னைத்

தொடுவது சஞ்சல மற்ற

தூக்கம் அளிப்பது !

நித்திய

இன்பம் தருவது !

 

 

இந்த ஊசி இலைகள்

ஆயினும்

வஞ்சகம் செய்யும்;

தந்திடும் இடர் உமக்கு

ஆபத்தான

தருணங் களில்.

ஏனெனில்

ஊசி இலைகளைப் பற்றி

நீயும், நானும்

ஏதும் அறியோம் !

அடுத்தடுத்து

தப்பிக் கொள்ளும்

அகப்படாது உம்மிடம்;

என்னையும் பற்ற முடியாது !

ஐயமின்றி என்னைப்

பிடித்து விட்டதாய் நீ

எண்ணிக் கொண்டாலும்

எச்சரிக்கை,

ஏற்கனவே தப்பிக் கொண்ட்து

நானென்று

தெரிய வில்லையா ?

 

 

இந்நூலை எழுதியதின் காரணம்

இதுவல்ல.

அதைப் படிப்பதால் நீ

அந்த அறிவைப்

பெறுவாய் என்ப தல்ல.

நன்கு என்னை அறிந்தவர்

என்னைப் புகழ்வதால் அல்ல.

நேசிப்போர் என் வெற்றியை

நிரூபிப்ப தால் அல்ல.

என் கவிதைகள்

நன்மை மட்டும் அளிக்கும்

என்பதால் அல்ல.

மேலாய்த் தீமையும் பயக்கும்

என்றல்ல.

குறிவைத்தது போல் நான்

சாதிக்க வில்லை !

பயனற்றுப் போனவை

அவை எல்லாம் !

ஆதலால்

புறக்கணித்துப்

போவீர் 

விடுவித் தென்னை !

 

  

+++++++++++++++++++++++

Series Navigation