வால்ட் விட்மன் வசனக் கவிதை – 90

 

(1819-1892)

 

ஆதாமின் பிள்ளைகள் – 3

(Song of the Open Road)

(திறந்த பாதைப் பாட்டு -2)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

 

நீ செல்லும் பாதை மேல்

நான் நடந்த பொழுது

சுற்றிலும் நான் பார்த்தேன்;

நீ மட்டுமின்றிப் பிறரும் அங்கிருந்தார் !

தெரியாதவை கூட

அங்கிருப்பதை நம்பினேன் !

இங்கிருப்பவை நினைவிற் கொள்ளும்

ஆழமான பாடங்கள் !

தனிப்பட்ட இச்சை இல்லை !

மறுப்பில்லை !

குட்டை மயிர்த் தலைக் கறுப்பரின்

குற்றங்கள், நோய் நொடிகள்,

கல்வி இன்மை

மறுக்கப் படாமல்

ஏற்றுக் கொள்ளப் படும் !

  

அவரது பிறப்பு,

 

மருத்துவர்

 

அவசர வெளியேற்றம்,

பிச்சைக் காரன் நடப்பொலி,

குடிகாரன் திக்கித்

தடுமாறும் வாய்ச்சொற்கள்,

தொழிலாளர்

சிரித்துக் கொட்ட மடிக்கும்

கூத்தாட்டம்,

விட்டோடும் வாலிபன்,

செல்வந்தர்

செல்லும் வாகனம்,

வீட்டை விட்டு

ஓடிச் செல்லும் இளம் தம்பதியர்,

வீண் கர்வக் காரன்

ஆகியோரையும் கண்டேன் !

 

காலையில் கடைக்குப் போகும்

மானிடன்,

கட்டில், மெத்தை,

நகருக்குள்

நகர்த்திச் செல்வோர்,

நகரிலிருந்து

வீடு திரும்புவோர், நம்மைக்

கடந்து செல்கிறார்,

உடன் செல்வேன் நானும்

எதுவும்

கடந்து செல்லும்,

தடுக்கப் படுவ தில்லை

என்றும்.

ஏற்றுக் கொள்ளப் படும்

எதுவும்.

என்னிச்சைக் குட்பட்டவை

எவையும்

தடுக்கப் படுவதில்லை.

 

 

+++++++++++++++++++++++

    

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman

 

S. Jayabarathan [jayabarathans@gmail.com] August 27, 2014

Series Navigation