வாழ்தல் வேண்டி

கு.அழகர்சாமி

விடி

காலை.

சிந்தியிருக்கும் தான்யங்களைச் சீக்கிரமாய்க் கொறிக்கப் பார்க்கும்

அணில்கள்-

படபடத்து  இறங்குகின்றன புறாக்கள்

எங்கிருந்தோ.

ஓடிச் சிதறுகின்றன திசைகள் தேட

அணில்கள்.

ஒரு தான்யமும் விட்டு வைக்கவில்லை

புறாக்கள்.

உதிக்கும் சூரியனைக் கொறிக்கிறது முன் கால்களில் தூக்கி

ஓர் அணில்.

கு. அழகர்சாமி

Series Navigationகிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருக்கம் — பூகோளச் சூடேற்றக் கலக்கம் —சூழ்வெளிப் பாதிப்பு — மானிட உடல்நலக் கேடு