வா…எடு…எழுது..படி…பேசும்..கவிதை.!

Spread the love

என் ஆன்மாவின்
கதவிடுக்கில்
ஒளிந்து நின்று
எட்டிப் பார்க்காதே
வெளியே வா….!
உன் எண்ணம் இனிமை
மழை நீர் போல் தூய்மை
உனை மறுக்கும் அதிகாரம்
எனக்கில்லை..இதோ
பேனாவை எடு…!
இயற்கை மேல் வைத்த
கண் அளந்து விட்டதோ
படித்ததை நினைவூட்டு
உன்னுள் உயிர்த்ததை
என்னுள் எழுது..!
காற்றோடு நாசி
நுழையும் தூசியை
சிலிகான் செல்களாக
மாற்றிப் படி..!
நீ இன்று இருந்து
எழுதி வைத்தவை…
நாளை நான் இல்லாது
போனாலும் பேசும்..!
மூச்சசைவில்  வாழ்வு…
போனதும் சாம்பல்…
இருந்தும் மணக்கும்
என்னை நினைவூட்டும்
இறவாத கவிதை..!
ஜெயஸ்ரீ ஷங்கர்.
Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியனுக்கு அருகில் பேரளவு கரும் பிண்டம்நூறு கோடி மக்கள்