விதிவிலக்கு

Spread the love

 

 

பாலம் நெடுக

நெருங்கி நின்றன

வாகனங்கள்

முடிவின்றி நீண்ட

போக்குவரத்து நெரிசல்

 

பாதிக்கப் பட்ட பயணிகள்

திருச்சி ஸ்ரீரங்கம்

எனப் பிரித்து

இரு

ஊர்களைத்

தனித்தனியாய்க்

குறிப்பிட்டுப்

பேசிக் கொண்டிருந்தார்கள்

 

பாலம்

இடைவழி மட்டுமோ?

இரண்டற்றதாக்காதோ?

 

எந்த அன்புப்

பாலமும்

அப்படி இருக்காது

இக்கரை அக்கரை

பாலம்

எல்லாம்

ஒன்றாயிருக்கும்

 

நான் மாறினாலும் மாறிடுவேன்

மூன்று வார்த்தையில்

அவள்

துண்டித்துக் கொண்டு

போனது

விதிவிலக்கு

Series Navigationகடைசிக் கனவுபயணங்கள் முடிவதில்லை