விருந்து

ஒரு நன்கொடைத்
திரட்டுக்காக
அந்த இரவு விருந்தாம்
பத்துப் பேர் மேசைக்கு
இரண்டாயிரம் வெள்ளி

பொரித்த முழு குருவா மீன்
எராலுடன் கனவாய்
தந்தூரிக் கோழியுடன்
முந்திரி வருவல்
வறுத்த சேமியா
பொரித்த சோறுடன்
புரோகோலி சூப்
விருந்து நிறைந்தது

வீட்டுக்கு வந்ததும்
பசியைக் கிளப்பியது விருந்து
பொன்னி அரிசிச் சோற்றில்
பூண்டு ரசம் விட்டு
ஒரு பிடி பிடித்த பின்தான்
வயிறு நிறைந்தது
அமீதாம்மாள்

Series Navigationஒரு படைப்பாளியின்வலியை தன்வலியாய் உணர்ந்து எழுதிய எழுத்துவீட்டுக்குள்ளும் வானம்