விலகா நினைவு

Spread the love

எப்பொழுதும்
எங்கள்நெஞ்சில் துஞ்சிய குழந்தையை
மண்அடுக்குகளின் கீழ்
புதைத்து விட்டு
வெறுமையோடு
வீடுதிரும்புகிறோம்
மயானத்திலிருந்து.

தோள்களில் இன்னும் ஊர்கிறது

எறும்பைப்போல
குழந்தையின்
மெல்லிய மூச்சுக்காற்று.

ரவிஉதயன் raviuthayan@gmail.com

Series Navigationநேர்மையின் காத்திருப்புநம்பிக்கையெனும் கச்சாப்பொருள்