விஷக்கோப்பைகளின் வரிசை !

  

    

வரிசையில் உள்ள

காலிக்கோப்பைகளில்

இன்னும் சில நொடிகளில்

மனிதர்களின்

பொன்னான நேரம்

நிரம்பிவிடும்

கோப்பைகளின்

வண்ணக் கரங்களில் மனிதர்கள்

பொம்மைகளாக மாறுகிறார்கள்

விஷக்கோப்பைகள்

பெண்களை

அதிகம் நேசிக்கின்றன

விழி உருட்டல்களில்

சதித்திட்டங்கள்

பலப்பல உருவாகின்றன

அழகான பெண்கள்

அழுத வண்ணம் …

அபத்தங்கள்

களைகட்டிச் செழிக்கின்றன

உண்வு தண்ணீர் குடும்பம்

எல்லாம் மறந்து போகும்

அறிவு உறிஞ்சப்பட்டு

மனிதர்கள்

சக்கையாக வீசப்படுகிறார்கள்

தொலைக்காட்சித் தொடர்களின்

கோர வாய்க்குள் கிடக்கும்

மனிதர்களை

வெளியே எடுப்பது எப்படி ?

ஒவ்வொரு நாளும்

விஷக்கோப்பைகள்

நிரம்பி வழிகின்றன !

Series Navigationவிளக்கு நிகழ்ச்சி ஏற்புரை