வீட்டுக்குள்ளும் வானம்

Spread the love

முட்டை
உடைத்து வந்த குஞ்சுக்கு
உவமையாக நான்.

வீட்டுக்குள்
வானமும் வானங்களும்
சூரியனும் நிலவும் நட்சத்திரங்களும்
மழையும் வெயிலும் மேகங்களும் பறவைகளும்
இருப்பது தெரியாமல்
வெளியில் வானம் பார்க்க வந்த
வெகுளிப் பறவை நான்.

இரும்புப் பறவைகளும்
ராக்கட்டுகளும் காத்தாடிகளும்
இரைச்சல்களும் புழுதிகளும்
நிரம்பி வழிகிறது
நான் பார்க்க துடித்த-இப்போது
பார்க்க வந்திருக்கிற வானத்தில்.
குறைந்த பட்சம்
காலையும் மாலையும் கூட
இல்லாதது இந்த வானம்.

முட்டை
உடைத்து வந்த குஞ்சுகள்
நினைத்தாலும் புகமுடியாது
(முட்டைக்குள்ளும்)

கூண்டிலிருந்து விழுந்த
குஞ்சின் சிறகடிப்போடு
நான்.

அதீஸ்.

Series Navigationவிருந்துஅவசரமாய் ஒரு காதலி தேவை