வீரமறவன்

Spread the love

ஞா.ரேணுகாசன்(ஞாரே)

 

 

மழைக்கால இருட்டில் 

பயிரை மூடி வழிந்தே ஓடும்

காட்டாறின் சிரிப்பில்

கண்ணுறக்கம் மறந்தே

மழைக்கால்கள் விலக்கியபடி

வருகிறது ஓர் உருவம்

காவலில் நெருப்பை மூட்டி

சூழும் குளிரை விரட்டி

தேநீரை பருகியபடி

சத்தம் வந்த திசையில் 

விழியின் ஒளியை வீசி

இருளின் உருவம் அறிந்தான்

ஓர் உரு ஈர் உருவாக

விழியை கசக்கி விசாலப்படுத்தி

நீர்வழி நடக்கும் ஈரூடகனாய்

தோள்வழி சுமந்தே நண்பனை

செல்வழி கேட்க அணுகினான்

குடிலை எழுப்பிய மறவன்

தோளிலே ஓருயிர் முனக

குருதியும் மழைநீரில் ஒழுக

போர்மரபை மீறாத தமிழன்

செங்களம் புதிதை கண்ட வீரன்

நெஞ்சுரத்தோடு நின்று

இது எவ்விடம் என்றான்

மறவன் அவன் தமிழும்

மழுங்காத நெஞ்சுரமும்

கண்டனவன் குதித்தெழுந்து

குடை கொண்டு தன் அன்பை காட்டி

இவ்வழி செல்க என

நல்வழி சொல்லி நின்றான்

அடர் இரவோ மழையின் பிடியில்

சுடர் ஒளியோ ஏதுமின்றி

தனிவழி போன உறவை

கண்வழி நீர் கசிய

வாழும் சுதந்திர புரட்சியில்

இன்னும் எதை எதைக் காண்போனோ..!

தோள் சுமந்தவன் காவல் நிற்க

விழுப்புண் கண்டவன்

வீரமரணம் கொண்டான்

விசும்பிய வார்த்தையை அடக்கி

மலரஞ்சலி செலுத்தி

செங்களம் புகுந்தான் வீரமறவன்

 

 

Series Navigationவித்தியாசமான கதை…எல்லா குழந்தைகளும் எல்லாமும் பெற வேண்டும்