வீழ்தலின் நிழல்

 

 

ஒரு கோட்டினைப் போலவும்

பூதாகரமானதாகவும் மாறி மாறி

எதிரில் விழுமது

ஒளி சூழ்ந்த

உயரத்திலிருந்து குதிக்கும்போது

கூடவே வந்தது

பின்னர் வீழ்ந்ததோடு சேர்ந்து

ஒரு புள்ளியில் ஐக்கியமாகி

ஒன்றாய்க் குவிந்ததும்

உயிரைப் போல

காணாமல்போன நிழலில்

குருதியொட்டவே இல்லை

 

– எம்.ரிஷான் ஷெரீப்

Series Navigationதிண்ணை இதழில் பிரசுரமான ‘தாய்மை’ எனும் சிறுகதையானது, முதலாம் இடத்திற்கான விருதையும், பரிசையும் வென்றதுமணலும் நுரையும்-2