வெகுண்ட உள்ளங்கள் – 2

Spread the love

கடல்புத்திரன்

வடிவேலு இடுப்பிலிருந்து ரிவால்வாரை எடுத்து ‘மேல் வெடி’ வைத்தான். சனம் அவன் மேல் பாய்ந்தது. அவனிடமிருந்து ரிவால்வர், மகசின், கிரனேட்டு எல்லாவற்றையும் பறித்து எடுத்து விட்டார்கள். யாரோ ஒருவன் அவன் மண்டையையும் உடைத்து விட்டிருந்தான்.இரத்தக் காயத்தோடு அவன் நின்றபோது வள்ளங்கள் கரை சேர்ந்தன.

“எவன்ரா?, எங்கட பெடியள்களை அடிச்சது’ பொறுப்பாளர் போல இருந்தவன் கோபமாக இறங்கினான்.

வடிவேலு நின்ற கோலத்தை பார்த்த போது அவனுக்கு நிலமை விளங்கவில்லை. பொதுவாக தீவில் எல்லா இயக்கங்கள் மத்தியிலும் ஒரளவு பகைமையற்ற இழைக்கள் காணப்பட்டன.

“தோழர், டொக்டர் யாரிட்டைப்  போவோம். காயத்திற்கு இழை பிடிக்க வேண்டியிருக்கும்” என்று கேட்டான்.

“பறித்தவற்றைத் தராத வரைக்கும் நான் உவ்விடத்தை விட்டு நகர மாட்டன்” என்று உறுதியாகத் தெரிவித்தான். சர்வேசனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ‘அவன் பாடு’ என்று விட்டு விட்டு அங்கிருந்தவர்களை மிரட்டும் தோரணையில் கேட்டான்.

“எவன்ரா, தோழர்ர‌ கையை உடைச்சது?” அவனுடைய அதிகாரத் தோரணையைப் பார்த்து சூழ இருந்த‌வர்கள் திக்பிரமைப் பிடித்து பயத்துடன் நின்றார்கள்.

வடிவேலனின் தோழர்களும் வானில் வந்து சேர்ந்தார்கள். தலைவர் போல இருந்தவர் அவனை வானில் ஏறச் சொன்னார். அவன் மறுக்கவே, இழுத்து வானில் ஏற்றி விட்டு “யாருமே வள்ளம் ஒட வேண்டாம்” என்று அறிவித்தான்.

‘வோக்கியை’ எடுத்து யாரோடேயோ சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்தான். பிறகு, வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த மக்களைப் பார்த்து “இனிமேல் இயக்கங்கள் வள்ளங்களை ஒட்டும்’ என  தெரிவித்து விட்டு வானில் ஏறிப் பறந்தான்.

கனகனுக்கு நாசமாய்ப் போன படகு ஒட்டம் என்றிருந்தது. இவர்கள் அனைவரு மே மரவள்ளங்களையே ஓட்டினர் .ஒரு சிலரிடம் மட்டுமே அவுட்புட் மோட்டர்கள் இருந்தன‌ . அவர்கள் பின் பகுதியில் பொறுத்தி வள்ளத்தைச் செலுத்தினார்கள். பலர் தடிகளால் தான் வலித்தார்கள்.வறிய நிலையில் இருந்த மீனவர்கள்,. வளப்பம் பெறுவதென்பது மிக மெதுவாக நடக்கிற ஒன்று .இந்த கடலில் தொழில் செய்ய வட்டுக் கோட்டை,வடக்கராலி மீனவர்கள் கூட வ ருகிறவர்கள் .

கடல்ப் போக்குவரத்தை மேற் கொண்டவர்கள் இந்த கரையில் இருந்த தெற்கராலி மீனவர்கள் மாத்திரமே.இவர்கள் எவரிடமுமே  பைபர் கிளாஸ் படகுகள் இருக்கவில்லை.

ஒருகாலத்தில், ஓடிய ரோலர் எனப்படுற பெரிய மரவள்ளம் ஒன்றும்,ஓட்டமற்று ஒரு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.கடற் படையினரின் அட்டகாசம் அதிகரித்த பிறகு அதனை ஓட்ட முடியவில்லை போல இருக்கிறது . அரச படையினரின் கொடூரக் குணம் பிரசித்தமே. தமிழும் தெரியாத சிங்களவர்கள் வடக்கு,கிழக்கை ஆட்டிப் படைக்க அடங்கா ஆசை கொண்டிருந்தார்கள் . அவர்கள், பழைய அரச ராஜ துரோகச் சட்டத்தை அப்படியே ஜனநாயகத்தில், பயங்கரவாதச் சட்டமாக்கி விட்டு, இந்த படையினரூடாகத் தான் சொல்ல அஞ்சுகிற குரூரமான செயல்களை எல்லாம் புரிந்து கொண்டிருந்தார்கள்.அவர்களின் முதல் இலக்கு மீனவர்கள் தான் .

அவர்களிற்கு  இந்தியத் தமிழர் என்றில்லை,எல்லாத் தமிழர்களையுமே பிடிக்காது மீனவர்களைச் சுட்டே கொன்று விடுவார்கள். வசமாக அகப்பட்டால் கசாப்புத் தனமாக வெட்டிக் கொல்றதையும் செய்து வந்தார்கள். ஆழம் குறைவான கடல் என்ற படியால் கடற்படையினரின் பைபர் கிளாஸ் படகுகள்,பாரம் கூடிய ரோந்துப் படகுகள் இப்பகுதிகளில் பிரவேசிக்க முடியவில்லை. அதனாலே ஓரளவு தப்பிப் பிழைத்து தொழில் செய்து கொண்டிருந்தார்கள்.

கடலில் ஓடிய பாதைகள் கண்டு வேறு ஓட வேண்டும். பெரும்பாலும் இருட்டிலே தொழில் நடந்தது.மேலே கெலிகப்டர்கள் வெளிச்சம் அடித்துப் பறக்கிற போது சிக்கல் தான். அதிலிருந்து யந்திர துப்பாக்கியிலிருந்து பறக்கிற குண்டுகளிலிருந்து தப்ப வேண்டும்.அவை வார போது சாக்குகளால் மூடி மறைத்து விடுவார்கள் . கடலம்மாவும் காப்பாற்றி வந்தாள். ஆழமான பண்ணைக்கடல் சற்று தூரத்தில் தான் இருந்தது.கடலிலே பிறந்து வளர்ந்தவனால் ஆழக் கடலில் மீன் பிடிக்காமலும் இருக்க முடியாது .

அடங்கிக் கிடப்பவர்கள்  இல்லையே மீனவர்கள்?

கோட்டையிலும் ,மண்டை தீவுக்காம்பிலும் இருந்த படையினரின் கண்ணில் ஒருமுறை பட்டு விட்ட நாவாந்துறை,குருநகர்,கரையூர்,பாசையூர்…மீனவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கொடூரமாகக் படுகொலை செய்யப்பட்டது காலகாலமாக அந்த மீனவர்க் குடும்பங்களை பாதித்துக் கொண்டிருக்கிற ஒரு வரலாற்றுத் துயரம். அவர்களிற்கான நினைச் சின்னத்தை, இன்று குருநகர் பகுதியில் காணலாம். தமிழாராட்சி மாநாட்டில் இறந்தவர்களிற்கான நினைவுச் சின்னத்தை கோட்டைப் பகுதியில் கட்டியது போன்ற …இன்னொரு  சின்னம்.

அச்சம்பவம், 1984ம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்ததாக இருக்க வேண்டும்.

சங்க இலக்கியங்களில் கப்பலை ‘திமில் என ‘அழைத்தார்கள் என அறியப்படுகிறது,ஒரு காலத்தில் கடலைக் கலக்கி ஓடிய அந்த‌ முன்னோர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்களோ, இவர்கள்? என்ற ஐயமும் இருக்கிறது.இங்கே தொழில் செய்பவர்களை திமிலர்கள் என அழைக்கிறார்கள். அந்த பழைய வீரம் இரத்திலும்  கலந்திருக்கிறது.

அதே போல சுளிபுரத்தைச் சேர்ந்தவர்கள் முக்குவர்கள் எனவும் அழைக்கப்படு கிறார்கள்.அதாவது, கடலில் பிடிப்பவற்றை பல வேறு ஊர்களிற்குக் எடுத்துச் சென்று விற்கிற வணிகர்கள்.இவர்களுக்கிடையில் இடையில் ஏதாவது தொல் வரலாற்றுத் தொடர்பு இருக்கிறதோ தெரியவில்லை?ஒரு காலத்தில் சிறப்புற்ற மீனவ சமூகமாக இங்குள்ள மக்கள் இருந்திருக்க வேண்டும் !

தற்போதைய‌ இலங்கை ,ஒரு இறமை உள்ள நாடு இல்லை.அது தற்போது காலனியாக மாறி காலனி ஆட்சியைத் தான் புரிந்து கொண்டிருக்கிறது .எசமானர்கள் தான் மாறி விட்டிருக்கிறார்கள். அஸ்தமிக்காத திமிரைக் கொண்ட பிரித்தானியரிடமிருந்து காலம் பல நாடுகளை விடுவித்தது போல தமிழர்களையும்,காலம் இவர்களின் நுகத் தடியிலிருந்தும் ஒரு நாள் விடுவிக்கும்.

கழுகு இயக்கம் அரசியல் அமைப்புகளைக் கட்டிக் கொண்டு இயங்கிற ஒர் இயக்கமாக இருக்கவில்லை.அவர்களுடைய பிரதேச முகாம்களே இராணுவ முகாம்களாகத் தான் இருந்தன.முறைக்கு இரண்டு சாரர்களையும் கூட்டி,” இனி மீறக் கூடாது” எனச் சொல்லி அவர்களையே ஓட வைத்திருக்க அங்கே ஒரு அரசியல் அமைப்பு  .இல்லை . அதைக் கட்டிக் கொள்ள‌ அவர்களிற்கு நேரம் இருக்க‌ இல்லை. அது அவசியம் என்பதும் அவர்களுக்கு புரியவில்லை‌ அவர்களுடைய தீவுப் பொறுப்பாளரை காயப்ப்படுத்தியதும் இல்லாமல் ஆயுதங்களையும் பறித்திருத்திருக்கிறார்கள். எனவே
தண்டிக்க விரும்பினார்கள்.அது தான் ‘இயக்கங்கள் ஓடும்’ என்ற ஓரேயடியாய் புரட்டிப் போட்ட‌ உத்தரவு.

கனகனின் நண்பர்களின் தாமரை இயக்கம் பெரிதாக இருந்தது தான்., தங்களை ‘’மக்கள் இயக்கம்’ என்று வேறு சொல்லிக் கொள்கிறவர்கள் தான் . ஆனால்,பல்வேறுப் பிரச்சனைகளால் பலவீனமானதாகவே இருந்தது.அதனால் கழுகின் உத்தரவுக்கு எதிர் உத்தரவு போட்டு …இயக்க முடியவில்லை. மக்களின் தோல்வி இயக்கங்களின் தோல்வி தான்! அதை புரிந்து கொள்கிற‌ நிலையில் இயக்கங்கள் இருக்கவில்லை என்று‌ கனகனிற்கு  படுகிற‌து..ஒன்றிருந்தால்,ஒன்றில்லை…என்ற கதை தான். இப்படியான நிலைகளால் தான் இன்றைய தமிழீழத்தை சிங்கள நாடு ஆண்டு கொண்டிருக்கிறது.

எப்பவும்,பிழையான நகர்வுகள் மேற் கொள்ளப் பட்டால்,அதன் பின்னால் செல்வது  நல்லதில்லை..சொல்வதைப் போல்.நடைமுறை இலகுவாக‌இருப்பதில்லை . மக்களின் உழைப்பைப் பறித்துக் கொண்ட போது ,அதை எதிர்க்காமல் நாவடைத்துப் போய் இருந்ததால் . நிலமையை மேலும் சீர்கேடைய வைத்து விட்டது.

     கதைத்தாலும் சீர்  வரமாட்டாது தான் ! என்றாலும்,  கூட எதிர்த்திருக்கவே வேண்டும். அதற்குத் தான், படித்தவன் , ,ஆங்கிலம் தெரிந்தவன்,பேசக் கூடியவன் எல்லாம் வேண்டும் என்று சொல்லப்படுகிறதோ? .தாழ்வுச் சிக்கல்களில் சிக்கிய சமூகம் முன்னேற அதற்கு எழுதவும் ,படிக்கவும்,பேசவும் தெரிந்திருக்க வேண் டியது அவசியம் . அதுக்கு மேலே எதிர்ப்பையும் காட்ட வேண்டும்.முயன்றால் எதுவுமே முடியாதது இல்லை. அவர்கள் முன்னேற்ற அரசியலைப்  அறிய‌, அறிந்தவர்களிடம் தயக்கப் படாமல் அணுகி கேட்டறியவும் … அறிந்திருக்க‌வேண்டும்.

  அதிகார துப்பாக்கிகளின் வாய்யில் புகையும் நெருப்பைக் கண்டு பயப்பட்டு விடாமல், சித்திரவதைகளைக் கண்டு அஞ்சி ஒடுங்காமல், முக்கியமாக இனவாதிகளிற்கு பச்சைக்கொடியை காட்டி விடாமல்,குமையும் ஏலாமைச்  சூழலிலும் நசியும் அடிமைச் சூழலிலும் நியாயத்தை எடுத்துச் செல்லப்படவே வேண்டும். அவர்களின் ஒற்றுமைச் சிதறும் நிலமைக் கண்டு தான் பாரதி “வாய் வீச்சில் வீரரடி”என துயரம் பொங்க பாடினானோ ? ஈழத்தமிழரின் நசிந்த வாழ்க்கையிலும்,காலத்திற்கு காலம் நல்ல ‌தலைவர்களும் ,மதத் தலைவர்களும் கூட‌ நியாயத்தை அதிகாரத் தோரணையில் இல்லாமல் நட்பு வழியில் பல தடவைகள்  கேட்டிருக்கிறார்கள் தான்.

      இதெல்லாம் தெரியாதவர்களாகத் தான்  அவர்களும்,  அவ்விடத்து வையித்தியர்களும்,பொறியியலாளருமாக படித்து வார கல்வியும் கிடக்கின்றன.

குரல்கள், குப்பையாக சேர்ந்து கூலாப்பாணியாகி, ஒவ்வொன் றாக‌ அழிகிறது‌. கிளறிப் பார்க்கிற‌ பொறுமையும் அவர்களுக்கும் இருப்பதில்லை,சந்ததிகளுக்கு அவற்றை எடுத்து வீரமாக‌ , ஒளிப்பாக, உரத்துச் சொல்லுறதிலும் சோம்பேறிகளாக போய்க் கொண்டு இருக்கிறார்கள்? அதனால் அவ்விடத்திலும் இதை எல்லாம் புத்திசாலியாக விளங்கிக் கொள்ளக் கூடிய பெடியள்களும் இருக்கவில்லை.

யாரும் ஒருத்தர் சொல்லித் தான், தமது சந்ததிகளைப் பற்றி அறிய வேண்டியவர்களாக இல்லாமல் ஒருவித தேடல்  அவர்களிடமிருந்து அதிசயமாக முளை விடக் கூடாதா? சுய நம்பிக்கையும் ,சுய முயற்சியும் உடன் ஏறு(வீறு) நடை போடும் கம்பீரமான வாழ்க்கை ஒன்று இருக்கிறது. அதை அந்த மண்ணின் மக்களிடமிருந்து எவராலுமே பறித்து விட முடியாது. அதில் ஆட்சி செலுத்துறவர்கள் அறவழி பிறழ்ந்தவர்கள். இதையெல்லாம் அறியாத‌ இவர்கள் என்ன ஜென்மங்கள் ?

அவர்களுக்கு இதற்கெல்லாம் காரணமாக‌, தடையாய் பிரித்தானியக் கல்வி  முறை இருக்கிறது .

       தமிழர்களிற்கென்று ஒரு கல்வி முறை இருந்தது.அதைப் போல பழயவற்றை ; பலவற்றை  தூசி தட்டி பார்க்க …வேண்டிய காலம் இது !.1500, 1600 ம் ஆண்டு காலங்களில் வரையில் தமிழர் பாய்மரக் கப்பல்களில் ஆழ் கட ல்களில் பயணித்திருக்கின்றார்கள் ‌. தமிழீழத்தில் ‌ மண் மட்டுமில்லை சூழவுள்ள கடலும் கூட விடுதலை பெற வேண்டிய கட்டாயத்திலே இருக்கிறது.,நாவாந்துறை, நாவாய்த் துறையாகி . திரும்பவும் உயிர்ப் பெற்றெழும். கனவுகளை அவ்விட மக்கள் ஒருபோதும் இழந்து விடக் கூடாது;

        தொலைந்தவை என்றும் தொலைந்தவை அல்ல. அப்துல்கலாம் சொன்னது போல எல்லோரும் கனவு காணுங்கள். அவர்களோடு சேர்ந்து நாமும் கனவு காண்போமே.

அந்த காலத்தைப் போலவே  இந்த கட ல்களில் அவர்களின் வள்ளங்கள்,பாய்மரக் கப்பல்கள்,படகுகள்…நிறைய இல்லாட்டிலும் நாலு,ஐந்தாவது நந்திக் கொடிகளுடன் மிதக்க வேண்டும். அந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண‌ ,முழுமையான அதிகாரம் படைத்த  மாகாணவரசும் நெஞ்சை நிமிர்த்தி பார்த்து நிற்க வேண்டும். அதற்காக‌வே அந்த மண்ணில் சூடான பெருமூச்சுகள்  நீண்ட காலமாக வீசிக் காத்துக் கொண்டிருக்கின்றன‌.

ஒட்டிகள் எல்லோரும் சோர்ந்த முகத்துடன் கலையத் தொடங்கினார்கள்.

தாமரையையும்,கழுகையும் சேர்ந்த இயக்கப்பெடியள்கள் எல்லார்ர மரவள்ளங்களையும் எடுத்தனர். ஒரு நுனியில் கயிறைக் கட்டி அவற்றைப் பிடித்து மூன்று, நான்கு பெடியளுடன் நீரில் தள்ளினார்கள்.

குவிந்திருந்த சனம் இடித்துத் தள்ளிக் கொண்டு ஏறியது. நிறைந்ததும் கயிறை வைத்திருந்தவன் கடலில் நனைந்தபடி முன்னால் நடந்து இழுக்க, பக்கப் பகுதிகளில் இருவர் நின்று தள்ள, பின்பகுதியில் ஒருத்தன் தள்ள,வள்ளங்கள் நகரத் தொடங்கின. முக்கால் மைல் நீளமான அந்தக் கடல் ஆழமற்ற அலைகளற்ற தன்மையைக் கொண்டிருந்ததால் ஒட்டிகளின் உதவி இல்லாமலே பெடியள்ககளால் சமாளிக்க முடிந்தது.

அன்று, மக்களுக்கு எல்லாம் இலவச சேவை !

‘உவங்கள் எதற்கும் துணிந்தவர்கள்’ என்ற வியப்பு கண்களில் படர கனகன் அவ்விடத்தை விட்டு அகன்றான்.

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]கறுப்பினவெறுப்பு