வெண்முரசு மகாபாரத தொடரின் நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நூல்களின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா

அன்புடையீர்!

வணக்கம்.

ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத தொடரின் நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நூல்களின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை எழும்பூரில் உள்ள மியூசியம் தியேட்டர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

நமது காலப் பெரும் இலக்கிய ஆளுமைகள் அசோகமித்திரன், பி.ஏ.கிருஷ்னன், பிரபஞ்சன், நாஞ்சில்நாடன், பேராசிரியர் ஸ்ரீனிவாசன், ஓவியர் ஷண்முகவேல் மற்றும் திரைத் துறைச் சாதனையாளர்கள் கமல்ஹாசன், இளையராஜா ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

விழாவின் முதன்மையான சிறப்பம்சம் தொன்றுதொட்டு மகாபாரதக் கதையை நிகழ்த்துகலையாக நடத்தி வரும் ஐந்து மூத்த மகாபாரதப் பிரசங்கியார்களைக் கௌரவிக்க இருக்கிறோம்.

விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மிக்க அன்புடன்,

செல்வேந்திரன்,
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

தொடர்புக்கு: பாலா – 9840608169

Series Navigation