வெற்றியின் ஓய்வில் யோசனை தவறேல்

ஆ. நி. ஸ்டாலின் சகாயராஜ்

Male Bluebird Sitting on a Branch In Nature

கூடு தேடும் பறவைக்கெல்லாம்
   மரங்கள் தோளை சாய்க்குது
“ஓடி ஓடி கலைந்து போனாய்
   அமைதியாக ஓய்வெடு…..”
சொல்லும் மரத்தினை போல நெஞ்சம்…
   உன் வாசலின் உள்ளே குடியிருக்கு
ஒரு யோசனையின்றி அமர்ந்தால்…
      உன் பாதையை நோக்கி வழிநடத்தும்
அது தளர்ந்தாலும் , அடி விழுந்தாலும்….
பல குழப்பங்கள் கடைந்தெடுத்து
இனிப்பையே விருந்தளிக்கும்

நடந்து சென்றதுமே…
பல தவறுகள் கொன்றிருக்கும்

புதிதாய் பிறந்திருக்கும்
ஒரு வெளிச்சம் பளபளக்கும்
அது மினுக்கும் தக தகனே…
     –

,
Series Navigationகுரு வந்தனம்பிரபஞ்சம் சீராகத் திட்டமிட்ட படைப்பா ? தாறுமாறாக வடிவான சுயத் தோற்றமா?