வெளிச்சம்

மஞ்சுளா

அலைக்கழிவாய் தொடங்கும் நகர வாழ்வில் 

பயணம் தொடங்க முடியாமல் 

சாத்தப்பட்டிருக்கும் கதவுகளின் வழியே 

இடுக்கிக் கொண்டு பார்க்கிறது 

அமைதியின் கண்கள் 

பனி பொழியும் இரவொன்றில் 

இருள் கவ்வும் பாதையில் 

நகரின் மயான அமைதி ஒன்றை 

வெளிச்சமிட்டு காட்டுகிறது நிலா 

         ——-மஞ்சுளா

manjulagopi04@gmail.com

Series Navigationநீக்கமற….சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் இறங்கி இறுதியில் தோற்பினும், ஆசிய விண்வெளிப் பந்தயம் நிற்காது