வெளிநடப்பு

Spread the love

சு.துரைக்குமரன்

சிறு அசைவைக்கூட
சுவையும் குதூகலமும்
நிறைந்து ததும்பும் நிகழ்வாக்கிவிடும்
குழந்தைமையைப் போல
உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
தேடித் தெளியச் செய்தது காதல்
தீராத விளையாட்டுகளால் பிள்ளைகளானோம்
கொதித்தடங்கிய
பாலில் படியும்
ஆடையைப் போல
நம் கொண்டாட்டங்களில் படிந்து
கொண்டிருந்தது
அடிபட்ட ஆளுமையின் விசும்பல்கள்
நிலைநிறுத்த எத்தனித்த
தனித்தன்மையால்
பின்னப்பட்டு தனித்தனியானோம்
உன் நொய்மை உண்டாக்கிய
வெறுப்பும் தனிமையும்
வெளியேறிக் கொண்டிருந்த
குழந்தைமையின் மீது
வெளிச்சத்தை வாரியிறைத்துத் தளர்ந்தன
தொலைந்த முகவரிதேடி
அல்லாடிக்கொண்டிருந்தது காதல்.
சு.துரைக்குமரன்

Series Navigationமறதிக்கெதிரான நினைவின் போராட்டம் – உரைகளும் கருத்தமர்வுகளும்இந்திய தேசத்தின் தலைகுனிவு