வைரஸ்

Spread the love

சந்திரனில் பள்ளம்

செவ்வாயில் மலை

எல்லாம் சொன்ன

மனித சக்தி

ஆயிரம் மைலுக்கு

அப்பலான ஆபத்தை

ஏவுகணை ஒன்றால்

எரித்துப்போட்ட

மனித சக்தி

எலும்புத் துண்டொன்று

எந்த உடலோடு

எப்போது வாழ்ந்ததென்ற

மனித சக்தி

அணுக்களின் ஆட்சியை

அக்கக்காய்ச் சொன்ன

மனித சக்தி

இயற்கைக் கோளோடு

செயற்கைக் கோளையும்

சிறகடிக்க வைத்த

மனித சக்தி

தனிமங்கள் அனைத்தையும்

தன்வசமாக்கிய

மனித சக்தி

அடுத்த கிரகணம்

எந்த நொடியிலென்று

இன்றே சொல்லும்

மனித சக்தி

சைபராகுமோ

ஒரு வைரஸ் முன்???

அமீதாம்மாள்

Series Navigationமனமென்னும் மாயம்பண்பாட்டு உணவுத்திருவிழா பிப்ரவரி 02 ஞாயிற்றுக்கிழமை