ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 35) குற்ற மன்னிப்பு

This entry is part 29 of 37 in the series 2 செப்டம்பர் 2012

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள்
(Shakespeare’s Sonnets : 35)

குற்ற  மன்னிப்பு

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

++++++++++++++

(ஈரேழ் வரிப்பா -35)

துயரடை யாதே இனி நீ செய்த வினைகள் மீது
ரோஜாவில் முள், வெண்ணீர் ஊற்றில் சகதி மண்.
கிரகணம் முகில் மறைப்பால் கருப்பவை பரிதி நிலவு
வெறுப்பான விட்டில் இனிய மொட்டில் வசிக்கும்.
எல்லா மனிதரும் தவறிழைப்பர் நானும் அப்படித்தான்.
என் குற்றத்தை மன்னிப்பதில் ஒப்பு நோக்கம் உள்ளது
என்னை மகிழ்விப்பேன் நீ வடித்த என் காயத்தை ஆற்றி
உன் பாபங்களை விட மேலாகும் உன் பாப மன்னிப்பு
நின் பாலுறவுத் தவறுக்குப் பாப மன்னிப்பு அளிக்கிறேன்
உன் எதிர்ப்புக் குழுவே உன்னைப் பாதுகாத் திருக்குது.
என்னை எதிர்த்தே எடுப்பேன் சட்டப்படி நடவடிக்கை
அத்தகைப் போருளது காதலுக்கும் வெறுக்கு மிடையே
அதற்கோர் ஆதரவுத் துணையாய் நான் இருத்தல் நல்லது
அருவருப்பாய் எனைத் திருடும் அவ்வினிய கள்ளனுக்கு

+++++++++

SONNET 35

No more be grieved at that which thou hast done,
Roses have thorns, and silver fountains mud,
Clouds and eclipses stain both moon and sun,
And loathsome canker lives in sweetest bud.
All men make faults, and even I in this,
Authorizing thy trespass with compare,
My self corrupting salving thy amiss,
Excusing thy sins more than thy sins are:
For to thy sensual fault I bring in sense,
Thy adverse party is thy advocate,
And ‘gainst my self a lawful plea commence:
Such civil war is in my love and hate,
That I an accessory needs must be,
To that sweet thief which sourly robs from me.

++++++++++++++

Sonnet Summary : 35

Whereas in Sonnet 33 the poet is an onlooker, in the previous sonnet and here in Sonnet 35, the poet recognizes his own contribution to the youth’s wrongdoing in the excuses that he has made for the youth over time. Sonnet 35 begins with parallel objects that, although beautiful, contain some sort of imperfection: “Roses have thorns, and silver fountains mud.” Likewise, clouds, which are a recurring image in the sonnets concerning moral transgressions, darken both night and day, additional favorite images used by the poet. The poet therefore absolves the young man and defends the youth’s betrayal.

What is most striking in Sonnet 35 is not that the poet forgives the youth but that the poet actually blames himself for the youth’s betrayal more than he does the young man. That he finds himself guilty is emphasized by the legal terminology incorporated in the sonnet: “Thy adverse party is thy advocate — / And ‘gainst myself a lawful plea commence.” The poet admits that he made too much out of the youth’s absence from him; he now knows that he overreacted, in part because “Such civil war is in my love and hate.” However, if the poet thinks that he can rid himself of this “civil war” simply by acknowledging its existence, the remaining sonnets prove him wrong.

++++++++++++++++++++++++

Sonnet 35

(Paraphrased)
——————————————————————————–

01. Don’t grieve any more, over that which you have done,

02. Even beautiful roses have thorns, and even silver fountains have mud,

03. Clouds and eclipses can darken both Moon and Sun,

04. And the loathsome canker can live in the loveliest bud.

05. All men make mistakes – and even I do, in this case,

06. By pardoning your offense through such similes,

07. Debasing myself, as a Poet, while trying to soothe the injury you’ve done,

08. Pardoning the faults of Sun, Moon, fountain, and roses, more
than their faults are worth to me, now.
09. In exchange, for your offense against what I feel, I rationalize, and

10. Your opposing party becomes your defense attorney,

11. And, against myself, I begin to build a case.

12. Such internal conflict do I have, between my love and my hate,

13. That I have to be an accessory,

14. To the crime of that friendly thief who, like a bitter enemy, steals from me.

++++++++++++++++

Information :

1.  Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)
2.  http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)
3.  http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)
4.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/  (Sonnets Study Guide)
5.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)
6.  The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)

+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) August 28, 2012
+++++++++++++

Series Navigationஇந்திய இன்சுரன்ஸ் பணம் & பிஎஃப் பணம் பணால் ஆக, நிதிஅமைச்சரின் யோசனை….தாகூரின் கீதப் பாமாலை – 29 கானத்தைப் பாடும் தருணம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *