ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 46) விழிக்கும் நெஞ்சுக்கும் போர்

This entry is part 34 of 42 in the series 25 நவம்பர் 2012
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள்
(Shakespeare’s Sonnets : 46)

விழிக்கும் நெஞ்சுக்கும் போர்
மூலம்: வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.
அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ள வில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தர மாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.
++++++++++++++
(ஈரேழ் வரிப்பா -46)

விழிக்கும் நெஞ்சுக்கும் போர்

என் விழிக்கும் நெஞ்சுக்கும் எதிர்ப்புப் போராட்டம் !
உன்விழி பெற்ற வெற்றியைப் பங்கு வைப்ப தெப்படி ?
என்கண் தடுக்கும் என் நெஞ்சை, உன் முகம் தவிர்க்க,
விழிக் குரிமை உண்டா வென்றென் நெஞ்சம் வினாவும்
நெஞ்சம் வாதாடும் அவனைச் சேர்ந்த நீ புளுகுவதாய்
ஒரு மூடிய அரண் தனை ஊடுருவா பளிங்கு விழிகள்
கண்ணுக்கு  உரிமை ஏது காதலன் உருவப் படம் மீது ?
அவனுள் உன் நளினத் தோற்றம் உள்ளதைச் சொல்வான்
நிலை நிறுத்த வேண்டும் உரிமையை நீதி மன்றத்தில்
நீதி வழங்கும் தேர்ச்சி அனைத்து நெஞ்சிலும் இருக்கும்
அவரது முடிவான தீர்ப்பால் நியாயம் தெளி வாகும்
பளிங்குக் கண்ணின் பகுதி அருமை நெஞ்சின் அங்கம்
அதுபோல் என் விழிக்கு,  உன்புறத் தோற்ற வனப்பு
என் இதய உரிமை உன் நெஞ்சின் உட்புறக் காதல்.
+++++++++
SONNET 46
Mine eye and heart are at a mortal war,
How to divide the conquest of thy sight,
Mine eye, my heart thy picture’s sight would bar,
My heart, mine eye the freedom of that right,
My heart doth plead that thou in him dost lie,
A closet never pierced with crystal eyes
But the defendant doth that plea deny,
And says in him thy fair appearance lies.
To side this title is impanelled
A quest of thoughts, all tenants to the heart,
And by their verdict is determined
The clear eye’s moiety, and the dear heart’s part.
As thus, mine eye’s due is thy outward part,
And my heart’s right, thy inward love of heart.
++++++++++++++
Sonnet Summary : 46
The poet alludes to contradictions within himself when he considers his longing for the sight of the youth’s good looks and his need to love and be loved by the youth himself. Sonnet 46 thus deals with the theme of conflict between the poet’s eyes and heart: “Mine eye and heart are at a mortal war / How to divide the conquest of thy sight.” He says that his heart wants the youth to itself, and the eye would bar the heart from the youth as well. Legal terminology used in the sonnet reflects contemporary life in the impaneling of an impartial jury to decide the matter. A verdict is reached when the poet awards the youth’s outward appearance to the eye and his inner love to the heart.
These two sonnets, 46 & 47, debate the respective merits of the heart’s and the eyes’ claim to be the sole possessor of the beloved. In 46 they are at mortal war. In 47 they have evidently signed a pact. The whole thing is an amusing mix of psychological and physiological ideas which do not really add up, but it is held together here by the terminology of the courtroom. The eye and the heart are bound over to enjoy their own appropriate portion.
The quarrel between eyes and heart (or mind) for dominion in love’s realm was traditional. The eye was believed to hold the image, but the heart was responsible for feeling and emotion.
++++++++++++++++
Information :
1.  Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)
6.  The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)
+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) November 21, 2012
Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -37காலம் ஒரு கணந்தான்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *