ஸ்டாலினிஸம் – ரத்த வகையல்ல, தக்காளி சட்னி வகை

Spread the love

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் சமீபத்தில் ”ஸ்டாலின் பழமொழிகள்” என்று வகை வகையாய் எழுதப்பட்டு கிண்டலடிக்கப்படுவதை பார்த்திருக்கலாம்.

அறிமுகமில்லாதவர்களுக்கு ஒரு அறிமுகம்

சமீபத்தில் ஸ்டாலின் தமிழ் பழமொழிகளை முன்னுக்கு பின் திருப்பி போட்டு பேசி கலகலப்பை ஏற்படுத்திவருகிறார்.

இவர் முன்னாலும் அப்படியே பேசியிருந்திருந்தாலும் அது இப்போதுதான் சமூக வலைத்தளங்கள் காரணமாக வெளியே பேசப்படுகிறது என்று நினைக்கிறேன். ஸ்டாலின் முன்பும் இப்படித்தான் பேசி வந்திருக்கிறார் என்று ஆதாரம் காட்டும்வரைக்கும், இது தற்போதைய ஸ்டாலின் பேச்சில் வந்திருக்கிறது என்று வைத்துகொள்வோம்.

சமீபத்தில் ஸ்டாலின் பேசும்போது “யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” என்ற பழமொழியை திருப்பி போட்டு, “யானை வரும் முன்னே, மணியோசை வரும் பின்னே” என்று சொல்லி அனைவரையும் திகைப்படைய செய்தார்.

ஸ்டாலின் பழமொழிகள்

வலை முழுவதும் தமிழர்கள் ஸ்டாலினை கலாய்த்து தள்ளிவிட்டனர்.

இது சில உதாரணங்கள் மட்டுமே.

மேலும் அவர் அனிதா அவர்களை சரிதா என்று சொன்னது, குடியரசு தினம் பற்றி சொன்னது போன்றவை அவரை ஒரு தமிழ்நாட்டு ராகுல் அளவுக்கு கலாய்க்க வைத்திருக்கின்றன.

இது வாய் தவறி சொல்லிவிட்டார் என்று திமுகவினர் மாய்ந்து மாய்ந்து சமாளித்துகொண்டிருக்கும்போது ஸ்டாலின் அவர்கள் ”மதில் மேல் பூனை” என்று கமல் ரஜினி போன்றவர்களை குறிப்பிட வந்தவர், அவர்களை “பூனை மேல் மதில்” என்று சொல்லி ஏற்கெனவே மென்று கொண்டிருந்தவர்களுக்கு கூடை நிறைய அவலையும் கொடுத்துவிட்டார்.

ஆங்கிலத்தில் spoonerism என்று இதை சொல்வார்கள்.
well oiled bicycle என்பதற்கு பதிலாக well boiled icicle என்று சொல்வது

தமிழில் இப்படி பேசப்படுவதை சொல்ல ஒரு வார்த்தை கிடைத்துள்ளது. ஸ்டாலினிஸம்

ரஷிய வகை போல ரத்த வாடையில்லாமல், தக்காளி சட்னி போல தொட்டுகொள்ள இருப்பது தமிழ்நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்துக்கும் கலாய்த்தல் பாரம்பரியத்துக்கும் பெருமைதானே?

Series Navigationசெவ்வாய்க் கோளில் பூர்வீகக் கடல்கள் தோன்ற மூன்று  பூத எரிமலை எழுச்சிகளே காரணம்