சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 40

This entry is part 39 of 46 in the series 19 ஜூன் 2011

சென்ற வாரம் सह (saha) அதாவது ‘உடன்’ என்ற சொல்லுக்கு முன்னால்  உள்ள சொல் எப்போதும் तृतीयाविभक्तिः (tṛtīyāvibhaktiḥ) மூன்றாம் வேற்றுமை

உருபைக் கொண்டிருக்கும் என்று பார்தோம் அல்லவா? அதேபோல் இந்த வாரம் विना (vinā) என்ற சொல்லைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

 

विना इति शब्दस्य योगे अपि तृतीयाविभक्तिः भवति। (vinā iti śabdasya yoge api tṛtīyāvibhaktiḥ bhavati |)

’வினா’ அதாவது அன்றி, இல்லாமல் என்ற சொல்லின் முன் உள்ள சொல்லும் तृतीयाविभक्तिः (tṛtīyāvibhaktiḥ) மூன்றாம் வேற்றுமையைக் கொண்டிருக்கும்.  [(विना) ’வினா’  என்ற சொல்லுக்கு முன் இரண்டாம் வேற்றுமை மற்றும் ஐந்தாம் வேற்றுமை உருபுகளும் அமையலாம்.]

विना (vinā) என்ற சொல்லும் Indeclinable அதாவது உருமாற்றம் பெறாதது.(ஒருமை, பன்மை, ஆண்பால், பெண்பால் மற்றும் எந்த காலத்திலும் மாறுதலுக்கு உள்ளாகாது )

 

 

सुभाषितम् (subhāṣitam) கவிதை

 

यथा हि एकेन चक्रेण न रथस्य गतिः भवेत्।

एवं पुरुषकारेण विना दैवं न सिद्ध्यति॥

 

yathā hi ekena cakreṇa na rathasya gatiḥ bhavet |

evaṁ puruṣakāreṇa vinā daivaṁ na siddhyati ||

 

ஒரு சக்கரத்தினால் மட்டும் தேர் நகராது. தேர் நகர்வதற்கு  இரண்டு சக்கரங்கள் அவசியம். அதுபோல மனிதன் வெற்றி பெற தெய்வத்தின் அனுக்கிரஹமும் , மனிதனின் முயற்சியும் அவசியம். ஒருவன் எந்த முயற்சியும் செய்யாமல் வெற்றி பெற எண்ணினால் ஏமாற்றமடைய நேரிடும்.  (Just as a chariot cannot move with one wheel, in the same way without man’s effort providence does not bring success.)

 

एतत् सम्भाषणम् उच्चैः पठन्तु

etat sambhāṣaṇam uccaiḥ paṭhantu

இந்த உரையாடலை உரத்துப் படிக்கவும்.

 

भरतः  – प्रसाद ! गृहे कोऽपि नास्ति किम् ?

bharataḥ  – prasāda! gṛhe ko’pi nāsti kim ?

பரதன்  –   பிரசாத் !  வீட்டில் யாரும் இல்லையா ?

 

प्रसादः – अहम्  एकः एव अस्मि। पिता मित्रेण सह वाचनालयं गतवान्। माता सीतया सह मन्दिरं गतवती। भगिनी रेखया सह आपणं गतवती।

prasādaḥ  –  aham  ekaḥ eva asmi | pitā mitreṇa saha vācanālayaṁ gatavān | mātā sītayā saha mandiraṁ gatavatī| bhaginī rekhayā saha āpaṇaṁ gatavatī |

பிரசாத்  –   நான் மட்டும் தான் இருக்கிறேன். அப்பா நண்பருடன் படிக்கும் அறைக்கு(reading room) சென்றார். அம்மா சீதாவுடன் கோவிலுக்குச் சென்றார். சகோதரி ரேகாவுடன் கடைக்குச் சென்றாள்.

 

भरतः – श्रीधरः कुत्र ?

bharataḥ –  śrīdharaḥ kutra ?

பரதன் –  ஸ்ரீதர் எங்கே ?

 

प्रसादः  –  सः अनिलेन सह इदानीमेव गतवान्।

prasādaḥ  –  saḥ anilena saha idānīmeva gatavān |

பிரசாத்  –  அவன் அனிலனுடன் இப்போதுதான் சென்றான்.

 

भरतः –  तस्य पादरक्षा तु अत्रैव अस्ति खलु।

bharataḥ –  tasya pādarakṣā tu atraiva asti khalu |

பரதன்  –  அவனுடைய காலணி இங்கேயே இருக்கிறதே.

 

प्रसादः –  त्वराकारणतः सः पादरक्षया विना एव गतवान्।

prasādaḥ –  tvarākāraṇataḥ saḥ pādarakṣayā vinā eva gatavān |

பிரசாத்  –  அவசரமாக சென்றதினால் அவன் காலணி அணியாமலே சென்றான்.

 

भरतः – मादृशः एव सः। अम्बा ’वस्तूनि आनयतु’  इति उक्तवती। किन्तु अहं स्यूतेन विना आगतवान्।

bharataḥ – mādṛśaḥ eva saḥ | ambā ’vastūni ānayatu’  iti uktavatī | kintu ahaṁ syūtena vinā āgatavān |

பரதன்  –  என்போலத்தான் அவனும்.  அம்மா ‘ சாமானங்களை வாங்கிவா’ என்று கூறினார். ஆனால் நான் பையில்லாமல் வந்துவிட்டேன்.

प्रसादः – धनेन विना तु न आगतवान् खलु ?

prasādaḥ – dhanena vinā tu na āgatavān khalu ?

பிரசாத் –  பணமில்லாமல் வரவில்லையே ?

 

भरतः –  धनम् …..। तिष्ठतु पश्यामि। अहो। धनेन विना तु आगतवान्।

bharataḥ –  dhanam….. | tiṣṭhatu paśyāmi | aho | dhanena vinā tu āgatavān |

பரதன்  –   பணம் …… ! சற்று நில் பார்க்கிறேன். பணம் கொண்டுவராமல்தான் வந்துவிட்டேன்.

 

” भवान् अपि मया सह विपणिम् आगच्छतु।”

”  bhavān api mayā saha vipaṇim āgacchatu |”

“நீயும் கூட என்னுடன் கடைக்கு வா “

 

प्रसादः –  अहं सिद्धः अस्मि। चलतु।

prasādaḥ –  ahaṁ siddhaḥ asmi | calatu |

பிரசாத்  –  நான் தயாராக இருக்கிறேன். போகலாம்.

 

भरतः  – अरे। युतकेन विना एव आगच्छति किम् ? युतकं धरतु।

bharataḥ   – are | yutakena vinā eva āgacchati kim ? yutakaṁ dharatu |

பரதன்   – ஓ ! சட்டையில்லாமல் வருகிறாயா என்ன ? சட்டை அணிந்துகொள்.

 

प्रसादः – अहमपि भवादृशः एव। सर्वे विस्मरणशीलाः।

prasādaḥ – ahamapi bhavādṛśaḥ eva | sarve vismaraṇaśīlāḥ |

பிரசாத் – நானும் உங்களைப்போலத்தான் . எல்லோரும் ஞாபகமறதிக்காரர்கள்.

 

கீழேயுள்ள सूक्तम् (sūktam) அதாவது கற்றோர் சொன்னதை கவனிப்போமா ?

 

वृत्तेन हि भवति आर्यः न धनेन न विद्यया। (vṛttena hi bhavati āryaḥ na dhanena na vidyayā |)

 

Good conduct makes one noble.  Neither wealth nor learning does.

நல்லொழுக்கம் தான் ஒருவரை சிறந்தவராக்குகிறது , செல்வமோ அல்லது படிப்போ அல்ல.

 

 

. अभ्यासः (abhyāsaḥ)

 

कोष्ठके दत्तानां शब्दानां साहाय्येन वाक्यानि पूरयन्तु

koṣṭhake dattānāśabdānāṁ sāhāyyena vākyāni pūrayantu –

அடைமொழியில் கொடுக்கப்பட்டுள்ள சொற்களை உபயோகித்து வாக்கியங்களை பூர்த்திசெய்யவும்.

 

१.  बालः दुग्धेन विना भोजनं न करोति। (दुग्धम्)

bālaḥ dugdhena vinā bhoojanaṁ na karoti | (dugdham)

சிறுவன் பாலில்லாமல் உணவு உட்கொள்ளமாட்டான்.

 

२.  लक्ष्मणः  ————————– विना वनं गतवान्। (उर्मिला)

lakṣmaṇaḥ  ————————– vinā vanaṁ gatavān |( urmilā)

லக்ஷ்மணன் ——————- இல்லாமல் வனம் சென்றான். (ஊர்மிளா)

 

३.  भोजनं ———————- विना रुचिकरं न भवति।  (लवणम्)

bhojanaṁ ———————- vinā rucikaraṁ na bhavati |  (lavaṇam)

சமையல் ———————- இல்லாமல் சுவைக்காது. (உப்பு)

 

४.  वृद्धः ——————- विना न चलति। (दण्डः)

vṛddhaḥ ——————- vinā na calati | (daṇḍaḥ)

முதியவர் ————— அன்றி நடக்கமாட்டார். ( ஊன்றுகோல்)

 

५.  सः ———————- विना कुत्रापि न गच्छति। (अहम् )

saḥ ———————- vinā kutrāpi na gacchati | (aham)

அவன்  —————-  அன்றி எங்கும் செல்லமாட்டான். (நான்)

 

६.  ———————- विना वस्त्रस्य मालिन्यं न गच्छति। (फेनकम्)

———————- vinā vastrasya mālinyaṁ na gacchati |( phenakam)

——————– இல்லாமல் துணியின் அழுக்குப் போகாது. (சோப்பு)

 

७.  ———————-  विना समयस्य ज्ञानं न भवति। (घटी)

———————-  vinā samayasya jñānaṁ na bhavati | (ghaṭī)

———————- இல்லாமல் நேரத்தைப் பற்றிய ஞானம் இருக்காது. (கடிகாரம்)

 

 

८.  ——————— विना सीमायाः रक्षणं न भवति। (सैनिकाः)

———————  vinā sīmāyāḥ rakṣaṇaṁ na bhavati | (sainikāḥ)

————————– அன்றி எல்லையின் பாதுகாப்பு இருக்காது. ( படைவீரர்கள்)

 

 

 

 

. अभ्यासः (abhyāsaḥ)

उदाहरणं दृष्ट्वा वाक्यं परिवर्तयन्तु

udāharaṇaṁ dṛṣṭvā vākyaṁ parivartayantu –

உதாரணத்தைப் பார்த்து வாக்கியத்தை மாற்றியமைக்கவும்.

 

 

१. बालकः जनन्या सह गच्छति। (bālakaḥ jananyā saha gacchati |)

சிறுவன் அம்மாவுடன் செல்கிறான்.

बालकः जनन्या विना न गच्छति।

bālakaḥ jananyā vinā na gacchati |

சிறுவன் அம்மா இல்லாமல் செல்லமாட்டான்.

२. सा मया सह पठति।

sā mayā saha paṭhati |

அவள் என்னுடன் படிக்கிறாள்.

 
३. ते गायिकया सह गायन्ति।

te gāyikayā saha gāyanti |

அவர்கள் பாடகியுடன் பாடுகிறார்கள்.

 
४. जनाः अस्माभिः सह भ्रमन्ति।

janāḥ asmābhiḥ saha bhramanti |

மக்கள் எங்களுடன் உலவுகிறார்கள்.

 
५. सा सख्या सह गच्छति।

sā sakhyā saha gacchati |

அவள் தோழியுடன் செல்கிறாள்.

 
६. अहं भवत्या सह पुस्तकं लेखिष्यामि।

ahaṁ bhavatyā saha pustakaṁ lekhiṣyāmi |

நான் உங்களுடன் புத்தகம் எழுதுவேன்.

 
७. माता भगिन्या सह मालां रचयति।

mātā bhaginyā saha mālāṁ racayati |

அம்மா சகோதரியுடன் மாலை தொடுக்கிறார்.

 
८. अर्जुनः भगिन्या सह क्रीडति।

arjunaḥ bhaginyā saha krīḍati |

அர்ஜுனன் சகோதரியுடன் விளையாடுகிறான்.

 

 

 

 

 

 

 

 

விடைகள்

२  उर्मिलया (urmilayā )

३  लवणेन (lavaṇena )

३ दण्डेन  (daṇḍena )

५  मया (mayā )

६  फेनकेन (phenakena)

७  घट्या (ghaṭyā )

८  सैनिकैः (sainikaiḥ )

 

 

२.  सा मया विना न पठति। (sā mayā vinā na paṭhati |)

३ . ते गायिकया विना न गयन्ति। ( te gāyikayā vinā na gayanti |)

४.  जनाः अस्माभिः विना न भ्रमन्ति। (janāḥ asmābhiḥ vinā na bhramanti |)

५.  सा सख्या विना न गच्छति। (sā sakhyā vinā na gacchati |)

६.  अहं भवत्या विना पुस्तकं न लेखिष्यामि। (ahaṁ bhavatyā vinā pustakaṁ na lekhiṣyāmi |)

७.  माता भगिन्या विना मालां न रचयति (mātā bhaginyā vinā mālāṁ na racayati !)

८  अर्जुनः भगिन्या विना न क्रीडति। (arjunaḥ bhaginyā vinā na krīḍati |)

 

 

 

Series Navigationமாலைத் தேநீர்தமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா
author

ரேவதி மணியன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    M.Ramjee says:

    Please send lesson 36 & 37 Through myEmail Really. I have To appreciate your Coaching Sanskrit. by these Way &Spreading. our Hindism. Samskrit Language .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *