நாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழ் இரு விமானிகள் ஏந்தி முதன் முதல் அகில விண்வெளி நிலையமுடன் இணைப்பு.

This entry is part 6 of 9 in the series 31 மே 2020

Posted on May 31, 2020

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

2020 மே மாதம் 30 ஆம் தேதி பிளாரிடா கனவரல் முனை ஏவு தளத்தி லிருந்து, முதன்முதல் இரு விமானிகளை ஏற்றிக்கொண்டு, ஸ்பேஸ்X பால்கன் 9 பூத ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக பூமிச் சுற்று வீதியில் சுற்றத் துவங்கியது. 2011 ஆண்டில் ஓய்வெடுத்த எல்லா விண்வெளி மீட்சிக் கப்பல்கள் [Space Shuttle] ஆட்சிக்குப் பிறகு, இப்போதுதான் நாசா தன் சொந்த நாட்டு ராக்கெட் ஸ்பேஸ்X விண்கப்பலை இரு விமானிகளை இயக்கப் பயிற்சி அளித்து முதன் முதல் ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் ஏவப்பட்டு, மே மாதம் 31 ஆம் தேதி அகிலநாட்டு விண்வெளி நிலையத்துடன் கப்பல் இணைப்பு நிகழ்ச்சியும் நடத்திக் காட்டியுள்ளது. இதுவே முடிவான சோதனை. இதற்குப் பிறகு ஸ்பேஸ்X கப்பல் சாதாரண மனிதரையும் அண்ட வெளிச் சுற்றுலா பயணத்துக்குத் தூக்கிச் செல்லும். அதற்குக் கட்டணம் ஒருவருக்கு 20 மில்லியன் டாலர். இருவிமானி களும் சில நாட்கள் நிலையத்தில் தங்கி 2020 ஆகஸ்டில் மறுபடியும் பூமிக்கு வந்து சேர்வார். அப்போது நான்கு பாராசூட் குடைகள் டிராகன் விண்சிமிழைத் தாங்கி அட்லாண்டிக் கடலில் இறங்கும். பில்லியனர் எலான் மஸ்க் [ELON MUSK] டிசைன் இது. 2022 இல் ஸ்பேஸ்X ஏற்பாடு நிலவுக்கும், 2024 இல் செவ்வாய்க் கோளுக்கும் பயணம் செய்யும் எதிர்காலத் திட்டங்களும் உள்ளன.

NASA, SPACE X, BOEING HUMAN SPACEFLIGHT

++++++++++++++++

  1. https://everydayastronaut.com/crew-dragon-vs-starliner/
  2. https://youtu.be/P_LLNuLhEXc
  3. https://youtu.be/oV319JAmxCM
  4. http://www.spacedaily.com/reports/Musks_SpaceX_unveils_new_Starship_for_private_trips_in_space_then_moon_999.html

+++++++++++++++++++

Image result for Orion, crew dragon, Starliner

Orion Spaceship and Space Station

++++++++++++++++

image.jpeg

Starliner Spaceship

+++++++++++++++

நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன் முதலில்
நிலவில் தடம் வைத்தார்.
பூமியைச் சுற்றி வரும்
அகில நாட்டு விண்வெளி நிலையத்தில்
சிலநேரம் தங்கிச்
சுற்றுலாப் பயணம்  செய்ய
நிற்கிறார்  வரிசையில்
புவி மனிதர்  !
நவயுகத் தரை நபர்கள் 
இனிமேல் 
விண்கப்பல் புவிச் சுற்றில் 
சுற்றுலா வருவர் !
கனவில்லை இது !
மெய்யான நிகழ்ச்சி ! 
வருவாய் பெருக்கும் மகிழ்ச்சி.

++++++++++++++++++

Image result for Orion, crew dragon, Starliner
https://www.msn.com/sv-se/nyheter/utrikes/tainted-water-exhibition-roves-around-beijing/vi-AAA4gOU

++++++++++++++++

நாசா, போயிங், ஸ்பேஸ்-எக்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் [பொதுநபர், இரு தனிநபர்] சேர்ந்து புரியும் விண்கப்பல் சுற்றுலா

இப்புது விண்வெளிச் சுற்றுலா திட்டம் ஈராண்டு தாமதமாகி 2020 இல் நிகழும் இப்போது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க விண்வெளிச் சாதனைகளில் முன்னொடித் திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதுவரை 20 பில்லியன் டாலர் நாசாவின் ஓரியன் விண்சிமிழ் [Orion], ஸ்பேஸ்-எக்ஸ் குரு டிராகன் [Crew Dragon] , போயிங் ஸ்டார்லைனர் [Starliner]]  புதுச் சாதன விருத்திக்குப் பயன்படுத்தி உள்ளதாக நாசா தெரிவிக்கிறது.  குறிப்பாக பூமியைச் சுற்றிவரும் விண்வெளி நிலையத்துக்கு விமானிகள் போக, மீள, சாதனங்கள் கொண்டு செல்ல, இதுவரை ரஷ்ய உதவியை நாட வேண்டி இருந்தது. அதனால் செலவு 70 மில்லியன் டாலர் ஒருமுறை செல்ல அல்லது ஒருவரைக் கொண்டு செல்ல.   அத்தேவை இப்போது ஸ்பேஸ்-எக்ஸ் விண்கப்பல் பயணங்களால் நிறைவேறுகிறது.  2020 இல் மீண்டும் நிலவுக்குச் செல்ல, நாசா 2014 இல் 68 பில்லியன் டாலர் ஒதுக்கி இரு நிறுவகங்களைத் தேர்ந்தெடுத்தது.  ஒன்று ஸ்பேஸ்-எக்ஸ் [2.6 பில்லியன் டாலர்] குரு டிராகன் விண்கப்பல் சிமிழுக்கு.  அடுத்தது போயிங் [4.2 பில்லியன் டாலர்] அதன் ஸ்டார்லைனர் விண்கப்பல் சிமிழுக்கு. ஏற்கனவே ஓரியன் விண்சிமிழ் விருத்திக்கு லாக்கீடு நிறுவகம் [Lokheed] 12 பில்லியன் டாலர் பெற்றுள்ளது.

தற்போதைய சுற்றுலாப் பயணக் கட்டணம் ஒருவருக்கு 250,000 டாலர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் திட்டம் : 2020 இல் நிறைவேறப் போகும் மனிதர் செல்லும் விண்வெளிச் சுற்றுலா.

அடுத்த திட்டம் : 2024 மீண்டும் மனிதர் ஏகும் நிலவுப் பயணம்.

++++++++++++++++++++++++++++++

நாசாவின் திட்டம் 2024 ஆண்டில் நிலவுக்கு மீளும்  புது முயற்சி.2020 ஆண்டில்  விண்வெளிப் பயணத்துக்குப் பொது நபர் சுற்றுலா துவங்கலாம்அண்டவெளிச் சுற்றுலாவை முதன்முதல் துவங்க இருபெரும்  தொழிற்துறை நிறுவகங்கள் சோதனைகள் செய்து, 2019 ஆண்டில் நிறைவேற்றத் தயாராக உள்ளன.  ஆனால் எப்போது என்று இன்னும்  தேதி குறிப்பிடப் படவில்லை. வெர்ஜின் கலாக்டிக் [Virgin Galactic] தொழில் நிறுவ அதிபர்,  பிரிட்டீஷ் கோடீஸ்வரர் ரிச்செர்டு பிரான்சன் [Richard Branson] ஒருவர்.  அடுத்தது புளூ ஆரிஜின் [Blue Origin] தொழில் நிறுவ அதிபர், அமேஸான் படைப்பாளி, ஜெஃப்ரி  பிஸோஸ் [Jeffery Bezos] .  இரு நிறுவகங்களும் வெவ்வேறு தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி, யார் முதலில் நிறைவேற்றப் போகிறார் என்று போட்டி போட்டு வருகிறார்.

வெர்ஜின், புளூ ஆர்ஜின் கைக்கொண்ட முறைகள் இரண்டிலும் பொதுநபர் பூமியைச் சுற்றி வரப் போவதில்லை.  பயணிகள் ஒரு சில் மணிநேரம் விண்வெளி நிலையத்தி தங்கி, புவிக்கு மீளும் போது, சில நிமிடங்கள் பளுவற்ற உணர்ச்சியில்[Moments of Weightlessness] அனுபவம் பெற்று புவியில் வந்து இறங்குவார்.  முந்தைய வாய்ப்பாக 2000 ஆண்டில் விண்வெளி நிலையச் சுற்றுலாப் பயணத்துக்கு மில்லியன் கணக்கான டாலர் தர வேண்டி இருந்தது.  இப்போது சுற்றுலாவுக்கு டிக்கெட் செலவு : 250,000 டாலர் !  மிக மலிவு.  விண்வெளி நிலையம் 250 மைல் [400 கி.மீ] உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது.  தற்போதைய குறிக்கோள் விண்வெளிச் சுற்றுலாப் பயணிகள் சுமார் 62 மைல் [100 கி.மீ.] உயரத்தில் விண்கப்பலில் சுற்றி, பளுவற்ற உணர்வை ஒரு சில மணிகள் அனுபவித்து, பாராசூட்டில் புவிக்கு மீள்வார்.

வெர்ஜின் விண்கப்பலில் 6 பயணிகளும், 2 விமான இயக்குநரும் செல்வார்.  தனியார் ஜெட் விமானம் போலிருக்கும் அதனை இருபுறமும் ஒரு வாடிக்கை விமானம் தூக்கிச் செல்லும்.  சுற்றுலாப் பயணம் நீடிப்பது 90 – 120 நிமிடம்.  காலிஃபோர்னியா  மொகாவி பாலை வனத்தில் செய்த சோதிப்பில் 21 மைல் உயரத்தில்  விண்கப்பல் பறந்தது.  பிரான்ஸன் கடந்த 2018 மே மாதத்தில் BBC வானொலி நபருக்குக் கூறியது :  இதுவரை 650 நபர் பயணத்துக்குப் பெயர் கொடுத்திருக்கிறார்.  விண்சிமிழைத் துக்கிச் செல்லும் ராக்கெட் உயரம் 60 அடி.  விண்சிமிழ் 66 மைல் உயரத்தைத் தொட்டது. அமெரிக்காவின்  ஸ்பேஸ் எக்ஸ் போயிங் நிறுவகங்கள் 2020 ஆண்டுக்குள் தமது விண்வெளிப் பயணத் திட்டங்களைத் தயார் செய்யும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Series Navigationஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவைகவிதைகள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *