This entry is part 9 of 42 in the series 22 மே 2011

அர்த்தமிழந்த வார்த்தைகள்

சமைக்கும் தருக்கச் சகதியுள்

அமிழ்ந்தென்ன லாபம்

துடிதுடிக்க காலத்தைக்

கொல்வதைத் தவிர

கால்களையும் கைகளையும்

குரல் வலையையும் சுற்றியிறுக்கும்

மொழியின் வேர்களும் கொடிகளும்

மண்டிய வனம்

சொற்களுக்கு அனுமதியில்லா

நகரமொன்று வேண்டும்

வன வாசம் துறந்து

நகர் புக.

 

– வருணன்

 

Series Navigationதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….திரிநது போன தருணங்கள்