கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)

This entry is part 31 of 42 in the series 22 மே 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“நான் நண்பன் ஒருவனிடம் பேச உட்காரும் போது திருவாளர் பிதற்றுவாய் அழைக்கப் படாமலே மூன்றாவது நபராய் எம்மோடு ஒடிக் கொள்வார்.  நான் ஒதுக்கினாலும் எப்படியாவது நெருங்கிக் கொண்டு தன் பிதற்றலை எதிரொலித்து எனக்குச் சின மூட்டுவார். அது என் வயிற்றைக் கலக்கிக் கெட்டுப் போன புலாலாகத் தொல்லை கொடுக்கும்.”
கலில் கிப்ரான். (Mister Gabber)

+++++++++++இசை ஆத்மாவின் நாதம்+++++++++++

என்னிதயம் கவர்ந்த வனிதை அருகே அமர்ந்து அவள் வாய்மொழி கேட்டேன்.அலையத் தொடங்கும் என் ஆத்மா யாதும் கனவாய்த் தோன்றும்வரம்பற்ற பிரபஞ்ச வெளியில் ! உடலொரு முடங்கிய சிறை போல் தெரியும் ! என்னரும் காதலிவழிபடும் மந்திர மொழிகள் நுழைந்திடும் என் இதயத்தின் ஊடே !
+++++++++++
இதுதான் இசை நாதம் என்னரும் நண்பரே ! கேட்டேன் அதைக் காதலியின் பெரு மூச்சில் !வாய் மொழியில் அதுவந்தது ! சொல்லியும் சொல்லாத இதழ்களின்மெல்லோசையில் எழுந்தது ! என் செவி வாயிலில் தடம் வைத்த இசை நாதத்தில் கண்டேன் என் காதலி இதயம் !
+++++++++++
இசை என்பது இனிய ஆத்மாக் களின் நாதம் ! அதன் மெல்லிசை விளையாடும் தென்றல் !காதல் நாண்களை மீட்பது இசை நாதம் ! மென்மை யாய் இசை விரல்கள் நமது உணர்வுக் கதவைத் தட்டும் போது விழித்தெழும் முன்னால்கழிந்து போன நீண்ட காலப் புதை நினைவுகள் !

++++++++++++
சோக முறிவு இசை நாதம்துக்க நினைவுகளை முன்னிறுத்தும் !இசையின் மௌன ராகங்கள் இனிய நினைவையும் எதிர் நிறுத்தும் ! நாண்களின் சோக நாதம் நம்மை அழ வைக்கும் நமக்கினியோர் மரண இழப்பில் !  அல்லது கடவுள் அளித்த அமைதியில் களிப்புண் டாக்கும் நமக்கு !
(தொடரும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran    http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery : http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

********************* S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 16, 2011)

Series Navigationகை விடப்பட்ட திசைகள்..கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *