This entry is part 37 of 43 in the series 29 மே 2011

*
வார்த்தைகளின்
வேலிப் படலைத் திறந்து வைத்திருக்கிறேன்
என் மனவெளியை
சூறையாடிக் கொள்

நேற்றிரவு உரையாடலின்
குளம்
இன்னும்
தளும்பிக் கொண்டிருக்கிறது

அதில்
உன் மௌனக் கொக்கு
ஒற்றைக் காலில்

நி
ற்
கி

து..

நீ
சுருள் பிரிக்கும்
உன் கைத் தூண்டில் முனையில்
ஒரு எழுத்து நெளிகிறதே

மீன் பிடிக்கவா..?

தூ..!

கொக்கை விரட்டு
கொக்கை விரட்டு..

Series Navigationகுழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம்! (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)செல்வி இனி திரும்பமாட்டாள்!