அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்

This entry is part 7 of 46 in the series 19 ஜூன் 2011

திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதை தொகுப்பு. அவரின் இயல்பான நடையில், காற்றில் அடித்துச் செல்லப்படும் இறகை போல, இந்த நூலை வாசிக்கும்போது பறக்கத் தொடங்கி விடுவீர்கள். பல்வேறு தளங்களில் எழுதப்பட்டிருக்கும் இந்த சிறுகதை தொகுப்பில் மிகச் சிறந்த கதையாக நான் விரும்புவது, “குதிரைகள் பேச மறுக்கின்றன”.

பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் கணவன் மனைவியின் வாழ்க்கையில், நின்று நிதானிக்க நேரம் இல்லை. ஊரில் இருந்து வரும் அவனின் அப்பா வீட்டில் வளரும் நாயை வெளியே கூட்டிச் செல்கிறார். திரும்பி வரும் பொது அது குதிரையாக இருக்கிறது. நாய் குதிரையாக மாறி விட்டதாக சொல்லி விட்டு, எதுவும் நடக்காதது போல அமைதியாகிவிடுகிறார். அதை தொடர்ந்து நகரும் இந்த கதை நடைமுறை வாழ்க்கையில் நாம் தொலைந்து போன பொறுமையை, அமைதியை எடுத்துக் காட்டுகிறது.

குதிரை என்ன தின்னும் என்பதை இணயத்தில் தேடுவது, ஏரிக்கு அருகில் வந்ததும் கேமிரா எடுத்துவரவில்லை என்று யோசிப்பது, குதிரை ஏறத் தெரியாமல் அதை பிடித்துக் கொண்டு நடந்து செல்வதை அவமானமாக நினைப்பது, தன்னுடைய குதிரை என்று சொல்ல கூச்சப்படுவது என இயல்பான மனிதனின் பிரதிபலிப்புகளை அழகாக எடுத்துக் காட்டுகிறது.

நாய் குதிரையாக மாறியதை ஏற்றுக் கொள்ளாத மகனுக்கும் எதையும் அலட்டிக் கொள்ளாமல் செய்தித்தாள் படிக்கும் தந்தைக்கும் இடையிலான உரையாடல்களில் இருக்கும் குசும்புகள் அசத்தல் ரகம்.

எஸ்.ரா அவர்களின் இணையத்தில் இந்த கதையை படிக்கலாம்.

http://www.sramakrishnan.com/?p=2005


அன்புடன்,
பா.சதீஸ் முத்து கோபால்

Series Navigation5 குறுங்கவிதைகள்நினைவுகளின் சுவட்டில் – (70)
author

பா.சதீஸ் முத்து கோபால்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *