This entry is part 2 of 46 in the series 19 ஜூன் 2011

கண்தொட்டவரையில்
நீண்டுகிடக்கும்
இந்த இரவின் பாலத்தில்
நத்தையின் முதுகேறி
ஊர்கின்றன நிமிடங்கள்
தண்டவாளங்களை வெறிக்கிறது
பூமிதின்ற நிலவு
கிளையசைவிற்கு
எந்த வாகனமும் நிற்கவில்லை
ஒலியோடு ஒளிவெள்ளமென
சகலமும் வழிந்தோடுகிறது
ஒரு பெரும்பள்ளத்தில்
சாம்பல் சிறகுகள் இறைந்து கிடக்கும்
இச்சிறுவெளியின் நிறமென்று அழியும்
அலைந்து திரியும் பறவைகள்
மறைந்து போகுமொரு கணத்தில்
நிறமுதிர்ந்து அற்றுப் போகுமது
நீடிக்கக் கடவதாக அத்தேவகணங்கள்.

Series Navigationஇஸ்ராயீலை ஏமாற்றிய கடல்என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை