அன்னையே…!

This entry is part 21 of 34 in the series 17 ஜூலை 2011

உயரமான
ஒரு சொல்லை
எழுதினேன்
அது –
“சிகரமா”னது…

நீளமான
சொல்லை
வரைந்தேன் –
உடனே
“நதி”யானது…

வெப்பமான
சொல்லொன்று
எழுத
“சூரியனா”ய்
உதித்தது…

ஈரமான
சொல்லொன்று எழுத
“மழை”
பொழிந்தது…

அன்பாக
ஒரு சொல்
எழுத
“நீ”யானாய்…
நீ
உடன் வந்தாய் –

இனியும்
நான் யாதெழுத…?
என் முன் நீ
அன்பொழுக…!
இனி நீயே
கதையெழுது…
வாழ்க்கை நதியோட….!

Series Navigationபழமொழிகளில் திருமணம்கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்
author

ஜே.ஜுனைட்

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *