காதல் பரிசு

This entry is part 18 of 32 in the series 24 ஜூலை 2011

ப்ரிட்னி ஸ்பியர்ஸ் பாடிக்கொண்டிருந்தாள் எம்.டீவியில் “Bombastic love , So Fantastic ” என்று சத்தம் போட்டுக்கொண்டு., “அந்த வால்யூமத்தான் கொஞ்சம் கொறக்கிறது , உனக்கு என்ன காது செவிடா ? டீவி முன்னாலதான ஒக்காந்துருக்க? ” உள்ளேயிருந்து ஸ்வேதா இரைந்த சத்தம் அவனுக்கு கேட்கவேயில்லை. “Where I’m Completely yours and you are mine ” விறுவிறு வென வந்தவள் கையிலிருந்த ரிமோட்டை பிடுங்கி வால்யூமைக்குறைத்தாள். ” ஏன் நல்லாத்தான பாட்றா ?, கேக்கவிட்டா என்ன ..? “ஓயாமத்தான் பாட்றா அவளும், நான் இங்க ஒருத்தி கத்திக்கிட்டு இருக்கேனே தெரியலயா.? “சரி சரி கெளம்பலாம் , நீ வர்ற வரைக்கும் கொஞ்சம் டீ.வி பாக்கலாம்னா கோவம் பொத்துக்கிட்டு வருதே ?” டீவியை அணைத்துவிட்டு வீட்டைப்பூட்டி சாவியைப்பைக்குள் போட்டுக்கொண்டு வந்தாள்.வெற்றி பைக்கைக்கிளப்பிக்கொண்டு வந்து அவளருகே நிறுத்தினான்..” ம்..ஏறிக்க , எத்தன மணிக்கு ப்ரோக்ராம்.? ” ” தெரியல ..நாலர மணிக்குன்னு சொன்னா அந்த டி.வி.ஹோஸ்ட்.போய்ப்பாப்போம்.”என்றவாரே பில்லியனில் ஏறி அமர்ந்து கொண்டாள் ஸ்வேதா.

டீ.வி.நிகழ்ச்சி படப்பிடிப்பிற்காக இருவரும் வந்து சேர்ந்தனர் அந்தப்பூங்காவிற்கு.ஏற்கனவே ஓ.பி.வேன் நின்று கொண்டிருந்தது , டிஷ் ஆண்ட்டனாவும்,கேமராக்களும் , எக்கச்சக்க வயர்களுமாக அந்த இடமே களேபரமாகக்காட்சியளித்தது. என்ன சார் கப்பிள்ஸ்லாம் வந்துட்டாங்களா ? பேட்டி ஆரம்பிச்சுடலாமா .? கொஞ்சம் இரும்மா , இன்னும் ரெண்டு ஜோடிங்க வரவேண்டியிருக்கு, வந்தவுடனே ஆரம்பிச்சுடலாம்.கேள்விக்கான ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணி வெச்சிருக்கேன், அதக்கொஞ்சம் வாசிச்சு பைஹார்ட் பண்ணிக்குங்க , அப்பறம் கேமரா ரோலிங்க்ல அடுத்து என்ன என்னன்னு திருப்பிதிருப்பி கேட்டுக்கிட்டு இருக்காத..” சரி சரி குடுங்க சார். மறுபடி ஒரு க்ளான்ஸ் பாத்துர்றேன்.

நிகழ்ச்சி தொடங்கியது.முதலில் இரண்டு ஜோடிகளிடம் பேட்டியை முடித்துவிட்டு ஸ்வேதா வெற்றி’யிடம் வந்தாள் டி.வி, ஹோஸ்ட்.அதுவரை இருந்த தைரியம் எல்லாம் எங்கே போச்சுன்னே தெரியல, கால்கள் நகர மறுக்க , வெற்றி ஸ்வேதாவை வலுக்கட்டாயமாக நகர்த்திக்கொண்டு வந்தான் .டீ.வி.ஹோஸ்ட் ஆரம்பித்தாள் “சொல்லுங்க ஸ்வேதா ..”உங்க கல்யாணம் காதல் திருமணமா ..இல்ல அரேன்ஞ்டு மேரேஜா..?” “லவ் மேரேஜ் தான் ” ” முதல்ல யார் காதல சொன்னது ? ” ” நாந்தான் ” நீங்களா…?! எப்டி சொன்னீங்க ?” நான் சீனியர் ப்ரோக்ராமரா இருக்கேன், அப்பதான் இவர் டீமில புதுசா ஜாய்ன் பண்ணார்.தயங்கி தயங்கி வந்து சந்தேகம் கேப்பார் அவரோட பணிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.மரியாதையா பழகுவார்.அனாவசியமா வழியல்லாம் மாட்டார் அதுலயே எனக்கு ஐ ஃபெல்ட் தெட் ஐ ஆம் இன்க்ளைண்ட் டுவார்ட்ஸ் ஹிம் “என்றவளை இடைமறித்து ஹோஸ்ட் கேட்டாள். “பொது இடங்கள்ல ஒருத்தரோட இண்டிவிஜுவாலிட்டி தெரியிறது கொஞ்சம் கஷ்டந்தானே .? அதுவும் உங்க டீமில புதுசா ஜாய்ன் பண்ணார்னு வேற சொல்றீங்க..! நீங்க ஸீனியர் வேற , அதனால பணிவாப்பேசிருக்கலாமில்லயா ?.அத வெச்சு எப்டி இம்ப்ரஸ் ஆனீங்க ?

“ம்…அப்புறம் தொடர்ந்து பேசிக்கிட்டு இருப்போம்..வீ ஹேட் மெனி திங்க்ஸ் இன் காமன்…அதனால கேண்டீன்ல காஃபி குடிக்கும் பொது நானே நேர கேட்டுட்டேன் ” என்று சொல்லி சிரித்தாள் ஸ்வேதா. ” அதுக்கு அவர் என்ன சொன்னார் ?” ” அதத்தான் நானும் கேக்கணும்னு இத்தன நாளா நெனச்சிக்கிட்டிருந்தேன், நீங்களே கேட்டுட்டீங்க “ன்னு முதல் முறையா வழிஞ்சார்.ரெண்டு பேரும் சேர்ந்து சிரித்தனர்.”சரி உங்களுக்குள்ளே ஒத்துப்போற விஷயம் எது , கல்யாணத்துக்கு அப்புறமும்..? ” ” மியூஸிக் எங்க ரெண்டு பேருக்கும் பிடிக்கும்,அது மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு ” ” கேக்கவே இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கு ” தொடர்ந்து பேசலாம் ஒரு சின்ன இடைவெளிக்குப்பிறகு என்றாள் ஹோஸ்ட் கேமராவைப்பார்த்து. “: என்னாங்க , இடைவெளிக்குப்பிறகுன்னிட்டீங்க ?, இல்ல ஸ்வேதா , இந்த ப்ரொக்ராம் கொஞ்ச நாள் கழிச்சு தான் டீவில வரும், அப்போ கொஞ்சம் எடிட் பண்ணீ , நாலு விளம்பரம் இடையில சேர்த்து போட்டு ஓடவிடுவாங்க…அதுக்கு தான் இந்த டயலாக் என்று சொல்லி சிரித்தாள்.

நல்லது ..மீண்டும் ஒரு முறை உங்களை “காதலில் இணைவோம் காவியமாய் வாழ்வோம் ” நிகழ்ச்சியில் சந்திப்பதற்கு மகிழ்ச்சி, இப்போ நீங்க சொல்லுங்க வெற்றி ..உங்களுக்கு ஸ்வேதா கிட்ட பிடிச்ச விஷயங்கள் என்னென்ன..? “” நிறய இருக்குங்க , கொஞ்சம் அதிகார தோரணைல பேசறது பிடிக்கும், எதயும் விட்டுக்குடுக்காம பிடிவாதமா இருக்கிறது பிடிக்கும் ” என்றவனை புன்முறுவலுடன் ஆர்வமாகப்பார்த்துக்கொண்டிருந்தாள் ஸ்வேதா. ” இண்டலிஜெண்ட் கூட ” என்றவனை ” ம் சரி..இப்ப ரெண்டு பேரும் உங்களுக்கிடையில புடிச்ச விஷயங்களைப்பத்தி சொல்லீட்டீங்க..இப்ப பிடிக்காத , சின்னச்சின்ன சண்டை வர்ற விஷயங்களைப்பத்தியும் சொல்லுங்க. ஸ்வேதா முதல்ல..லேடீஸ் ஃபர்ஸ்ட் ” ம்..ஓயாம பிரிட்னி ஸ்பியர்ஸ் பாட்டயே கேட்டுக்கிட்டி இருப்பார், அவளயே பார்த்துக்கிட்டு இருப்பார்.அதான் புடிக்காத விஷயம்.” பிரிட்னி ஸ்பியர்ஸா..ம்..இப்ப அவங்க அவ்ளவ் ஃபெமஸ் இல்லியே..ம்..பரவால்ல…ஆனா மியூஸிக் தான் ரெண்டு பேருக்கும் பிடிச்ச விஷயம்னீங்களே மேடம்..?!..” அதுக்காக..ஓயாம அவ பாட்டயே கேக்கணுமா.,.? டீவில அவ பாட்டு வந்தா சேனல மாத்தவே விடமாட்டார்…” ஓ அப்டியா,.,? ” ம்…இப்ப நீங்க சொல்லுங்க வெற்றி சார்..” அவங்க சொன்ன அதே விஷயந்தான்..ஓயாம ஏன் அவளயே பாத்துக்கிட்டிருக்கன்னு சண்ட போடுவா,,அதான் வேற ஒண்ணும் பெருசா இல்ல.,” ” ம்.பெர்ஃபெக்ட் கப்பிள்..” என்றவள் “காதலில் இணைவோம், காவியமாய் வாழ்வோம் ” நிகழ்ச்சில கலந்துக்கிட்டதுக்கு நன்றி.என்று கூறியவாறே அவர்கள் கையில் ஒரு சிறிய கிஃப்ட் பேக்கை கொடுத்தாள் டீ.வி,ஹோஸ்ட்.அதில் சிறிய இதயம் படம் போட்டிருந்தது.நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்ப வெகு நேரமாகிவிட்டது.

முடிக்க வேண்டிய ப்ராஜெக்ட் வேலைகளில் மூழ்கிப்போனாள் ஸ்வேதா.எம்.எஸ்.குரலில் “குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா”என்று செல்ஃபொன் பாடியது.எடுத்தவளின் எதிர்முனையில் “ஸ்வேதா, என்ன ஞாபகம் இருக்கா ? அன்னிக்கு நீங்களும் உங்க ஹஸ்பெண்டும் “டீ,வி” நிகழ்ச்சிக்காக வந்திருந்தீங்களே ? ” ஆ,..ஆமாம்..அதுக்கு என்ன ? ” “அதப்பத்தி கொஞ்சம் பேசணும் உங்களுக்கு ஃப்ரீ டைம் இருக்கும் போது சொல்றீங்களா ? பேசலாம் ” ..”சொல்லுங்க பரவால்ல..இப்ப ” ” சரி சுருக்கமா சொல்றேன்..ப்ரோக்ராம்ல உங்க கணவர் எப்பவும் ப்ரிட்னியோட பாட்டயே கேட்டுட்டு இருக்கார்னு குறையா சொன்னீங்களே ? ” ஆமா..” ” அவங்க பாட்ற பாட்ட நீங்களே மேடை ஏறிப்பாடினா அத உங்க கணவர் பாத்தா எப்டி இருக்கும் ? ” ம்..இதெல்லாம் நடக்கிற விஷயமா..? “ம்ம்..என்று சிரித்தாள் ஸ்வேதா. ” ம்…கண்டிப்பா நடக்கும் நீங்க மனசு வெச்சா ! ” டீ.வி.யில் பேசுவது போலவே பேசினாள் அவள். ” அந்த ப்ரொக்ராமோட நோக்கமே அதான்..கணவர் எதிர்பார்க்கிற விஷயத்த மனைவி செய்யச்சொல்லிக்காமிக்கிறது தான் …ஆனாக் கொஞ்சம் பெரிய லெவெல்ல..! ” என்று கூறியவள் ..” இப்போதைக்கு இது போதும்..சாயங்காலம் நான் உங்கள மீட் பண்ணி மத்த விஷயங்களைப்பத்தி எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன் என்று கூறி விட்டு ஃபோனை வைத்து விட்டாள்.

“நான் எப்டீங்க பாட்றது ? அதுவும் அந்த “மால்”ல , எத்தன பேர் வருவாங்க,போவாங்க , அம்மாடி என்னால முடியாது ! ” வலுக்கட்டாயமாக மறுத்தாள் ஸ்வேதா.அருகில் வந்த பேரரிடம் இரண்டு காஃபி ஆர்டர் செய்து விட்டு பேசத்தொடங்கினாள் ஹோஸ்ட். ” இல்ல ஸ்வேதா,நீங்க காலேஜ் கல்ச்சுரல்ஸ்லாம் பார்ட்டிசிப்பேட் பண்ணீருப்பீங்கல்ல..அது மாதிரி தான் இது..! ” “ஐயையோ , நான் அந்தப்பக்கமே தலவெச்சுக்கூடப்படுத்ததில்ல..ஏதோ ஃபரெண்ட்ஸ் கூப்டுவாங்கன்னு பாக்கப்போயிருக்கேன் அவ்ளவ்தான்”. விஷ்யம் நினைச்சத விட ரொம்பக்கஷ்டமாகப்போகுது என்று மனதினுள் நினைத்துக்கொண்டாள் அந்த ஹோஸ்ட். ” இத ஜஸ்ட் ஒரு ஃபன்னா நெனச்சு செய்ங்க ஸ்வேதா. எங்க டோட்டல் க்ரூ உங்க கூடவே இருக்கும்.எதுக்கும் கவலப்படாதீங்க..மியூஸிக் ட்ரூப்ஸ்லாம் டீ.வீயே அரேஞ்ச் பண்ணிடும்.உங்க கைல ஒரு கிட்டார் குடுத்துர்றேன்…ப்ரிட்னி மாதிரியே பாடறீங்க …என்ன சொறீங்க..? ” இதெல்லாம் முடியுமா ? என்ன விட்றுங்க ப்ளீஸ் ” என்று பிடிவாதமாக மறுத்தாள் ஸ்வேதா. ப்ரொக்ராம் மேனேஜர் எழுதிக்குடுத்த பத்து பக்க ஸ்க்ரிப்ட மனப்பாடம் பண்ணி சொல்லிறலாம் போலருக்கு இவங்கள மசியவெக்க முடியாது போலருக்கே என்று மனதினுள் நினைத்துக்கொண்டாள்.

“அவருக்கு பிடிச்சா மாதிரி செய்ஞ்சு காட்ட ஒரு அருமையான சான்ஸ் கெடச்சிருக்கு…இதப்போயி விடறேன்ங்கறீங்களே..?ம்..உங்களுக்காக இதயும் செய்வேன்னு மேடையேறிக்காட்டப்போறீங்க..இது உங்க வாழ்நாள்ல மறக்க முடியாத இன்ஸிடென்ட்டா இருக்கப்போகுது…ஒரு சேலஞ்சா எடுத்து செய்ங்க ஸ்வேதா…சின்னப்புள்ளங்க மாதிரி பிடிவாதம் பிடிக்கிறீங்களே..? எந்தப்பிரச்னையும் வராம நாங்க பாத்துக்கிறோம்.ஸ்டேஜ்ல நான் உங்க கூடவே தான் இருக்கபோறேன்.இட் வில் பி எ வொண்டர்ஃபுல் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்வேதா..ப்ளீஸ் டோண்ட் மிஸ் இட்.இத விட உங்க ஹஸ்பெண்ட இம்ப்ரெஸ் பண்றதுக்கு ஒரு சான்ஸ் கெடக்காது. டீ.வி ஷோவில் பேசுவது போலவே இருந்தது அவளது பாடி லாங்குவேஜ்.ஒருவழியாக அரை மனதுடன் ஒத்துக்கொண்டள் ஸ்வேதா.”ம்..அதொட இன்னொண்ணு இந்த லைவ் பொரொக்ராமப்பத்தி உங்க ஹஸ்பென்ட் கிட்ட இப்ப எதுவும் சொல்ல வேணாம்..ஓக்கே..?”” இது வேறயா…அவருக்கு தெரியாம நான் எதுவும் செய்யறதில்லயே.,.? ” ” ம்…உங்க மனசு எனக்குப்புரியுது ஸ்வேதா…நீங்க எதுவும் தப்பா எதுவும் பண்ணலயே…” அதப்பத்தி இப்ப யோசிக்காதீங்க..உங்கள நீங்களே குழப்பிக்காதீங்க.” ” அப்பப்ப இந்தப்பாட்ட நீங்க பாடிப்பாத்துக்குங்க கொஞ்சம் ப்ராக்டீஸ் பண்ணி வெச்சுக்குங்க…” என்று கூறி சின்னப்பேப்பரில் எழுதி வைத்திருந்த ப்ரிட்னியின் லிரிக்ஸை ஸ்வேதாவின் கையில் திணித்து விட்டுச்சென்றாள்.ஸ்வேதா வீடு திரும்புகையில் கையில் கிட்டார் வைத்துக்கொண்டு பாடுவதையும் ,கூடியிருப்பவரின் கூச்சலையும் மனதிற்குள் நினைத்தவாறே , தனக்குள் சிரித்துக்கொண்டு வந்தாள்.கூடவே பயமும்.

அன்று ஃப்ரைடே கேஷுவல்ஸில் ஹாலிடே மூடில் வேலை ஓடிக்கொண்டிருந்தது.” குறை ஒன்றுமில்லை , மறை மூர்த்தி கண்ணா ” ஒலிக்க எடுத்துப்பேசினாள் ஸ்வேதா.அவளதான் அந்த டீ.வி ஹோஸ்ட் தான் எதிர்முனையில் ” இன்னிக்கு சாயங்காலம் உங்க லைவ் ப்ரோக்ராம்..உங்க ஹஸ்பென்டுக்காக மட்டும் ” டீவில பேசுற மாதிரியே இருந்தது அவளின் பேச்சு. ” ஐயையோ இன்னிக்கா..? ஆமாம்..சாயங்காலம் எங்க டீவியோட கார் வரும் உங்க பிக்கப்புக்கு ,,உங்கள உங்க ஆஃபீஸிலிருந்தே பிக்கப் பண்ணீட்டு நேரே ” மால்” போயிடலாம். ” என்று கூறி தனது ட்ரேட்மார்க் சிரிப்போடு ஃபோனை வைத்து விட்டாள் அவள். ஃப்ரைடே மூடே ஸ்பாயில் ஆனது போலருந்தது ஸ்வேதாவிற்கு.பயம் பிடித்துக்கொண்டதில் அந்த ஏ.சி.யிலும் வியர்த்தது.இடையிடையே வழக்கத்துக்கு மாறாக மூன்று காஃபி குடித்து வைத்தாள்.அடிக்கடி கடிகாரத்தைப்பார்த்துக் கொணடாள்.வெற்றி வாங்கிக்கொடுத்தது வெட்டிங் டே’க்காக.வேலையே ஓடவில்லை அவளுக்கு.

மீண்டும் செல்ஃபோன் ஒலித்தது.அவளே தான் அந்த கிராதகி.” கார் காத்திட்டிருக்கு ஸ்வேதா..வர்றீங்களா..?! ” என்று போனில் கொஞ்சினாள். ” அட அதுக்குள்ள அஞ்சரை ஆயிடுச்சா..? என்று நினைத்துக்கொண்டவள் விறுவிறுவென எழுதிக்கொண்டிருந்த ப்ரோக்ராம் வின்டோஸையெல்லாம் சேவ் பண்ணி க்ளோஸ் பண்ணி விட்டு லேப்டாப்பை ஹைபர்னேட் செய்தாள்.பிறகு அடித்து மூடிவிட்டு லேப்டாப் பேக்குக்குள் திணித்து ஜிப்பை மூடினாள்.லேப்டாப் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது , பவர்கார்ட்டை கழற்ற மறந்து போனதால் , பேக் பின்னுக்கு இழுத்தது.அதை வேகமாக பிய்த்து எறிந்து விட்டு வெளியேறினாள்.அவளின் ஒவ்வொரு அணுவிலும் அவசரமும், பதற்றமும் தெரிந்தது.இடை மறித்துக்கேட்ட கலீகிடம் ” என்னடி இவ்ளவ் வேகமா..எங்க? ” என்று கேட்டவளுக்கு ஓடிக்கொண்டே பதில் சொன்னவாறு அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே பறந்தாள் ஸ்வேதா.

” இன்னிக்கு ரொம்ப அட்ராக்டிவா இருக்கீங்க ஸ்வேதா ” என்ற டீவி ஹோஸ்ட்.காரின் கதவை மூடினாள் ஸ்வேதா ஏறிக்கொண்டவுடன். ” ஏங்க என்னால முடியுமா ?..ச்ச இப்டி ஒரு சிக்கல்ல மாட்டி விட்டீங்களே ? ப்ராஜெக்ட டெட்லைனுக்குக்கூட இவ்ளவ் டென்ஷன் ஆனதில்ல நான் ” மகிழ்ச்சியும் ஒருபுறம் பயமுமாக அவள் முகம் பிரதிபலித்துக்கொண்டிருந்தது.அதைக்கவனிக்கத்தவறாத ஹோஸ்ட் ” இவ்ளவ் எக்ஸ்ப்ரெஷன்ஸ் காட்றீங்க ? டீ,வீக்கு வந்துர்றீங்களா..? ” சும்மா இருங்க நீங்க வேறே..நானே பயந்து நடுங்கிக்கிட்டு இருக்கேன். ” ஸ்டேஜ் ஃபியர் கொஞ்ச நேரந்தான் இருக்கும்,அப்புறம் இருந்த எடந்தெரியாமப்போயிரும் ,பயப்படாதீங்க..நாங்க இருக்கோம்ல ” ” நீங்களா பாடப்போறீங்க ,,,ச்ச..” ” சரி சரி..அந்தப்பாட்ட கொஞ்சம் பாத்து வெச்சுக்கிட்டீங்களா,,? இல்லாட்டாலும் பரவால்ல, ஸ்டேண்ட்ல லிரிக்ஸ் ப்ரிண்ட் பண்ணி வெக்க சொல்லிருக்கேன் ,,,நீங்க பாத்தே பாடீரலாம்” என்றவளின் குரல் ஏதோ கனவில் ஒலிப்பது போல இருந்தது ஸ்வேதாவிற்கு. கார் ” மால்” ஐ வந்தடைந்தது.

“வாங்க ஸ்வேதா..இந்த ட்ரெஸ் போட்டுக்குங்க..ஒண்ணும் பெரிசா இல்ல…ஒரு பாப் ஸ்டார் லுக் வர்றதுக்காகத்தான்..இல்லாட்டி கூட பரவால்ல…உங்க கேஷுவல்ஸே நல்லாதான் இருக்கு.” என்று கூறியவளின் கையில் பிடித்திருந்த காஸ்ட்யூமை பார்த்தாள் ஸ்வேதா.ரிப்டு/டிஸ்ற்றெஸ்டு[ripped/distressed] ஜீன்ஸ் , அப்புறம் ஒரு டீஷர்ட்…கையில் கிட்டாரோடு பிரிட்னியின் படம் போட்டிருந்தது அதில்.மறு பேச்சு பேசாமல் அதை வாங்கிக்கொண்டவளை அதிசயமாகப்பார்த்தாள்அந்த டீவி ஹோஸ்ட்.பின்னர் சிரித்துக்கொண்டே ” ஏன்னா நீங்க பாடப்போறது ஒரு ஃபேமஸ் பாப் ஸ்டார் பாட்டை, அதுனால அதுக்குத் தகுந்த மாதிரி ட்ரெஸ் இருக்கணும் , அப்புறம் எங்க மேக்கப்உமன் வந்துருக்காங்க…கொஞ்சம் மேக்கப்பும் போட்டுக்குங்க…லைட் எஃபெக்ட்ல பாக்க நல்லாருக்கும்” கேரி ஆன் ஸ்வேதா..என்று கூறி விட்டு பதிலுக்கு காத்திராமல் ஸ்டேஜ் அரேஞ்சர்களோடு பேசச்சென்று விட்டாள்.

கிட்டத்தட்ட ஒரு ஒரு மியூஸிக் வீடியோ ஷூட்டிங்கிற்கு செட் போட்டது போல இருந்தது.நான்கைந்து உருண்டைகள் தனக்குள் மின்னும் விளக்குகளுடன் மேலிருந்து கீழிறங்கி வந்து தொங்கிக்கொண்டிருந்தது.உள்ளிருந்த விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததில் உருண்டைகள் தமக்குத்தாமே சுற்றிக்கொண்டிருந்த தால் , அங்கெங்கினாதபடி வெளிச்சம் மின்னிக்கொண்டிருந்தது அதிலிருந்து.ஸ்டேஜ் முழுக்க ஜிகினாத்தாள்கள் பளபளத்துக்கொண்டிருந்தன.ட்ரம்ஸ், கீபோர்ட், மற்றும் இன்ன பிற வாத்தியக்கருவிகளுடன் கலைஞர்கள் ஆயத்தமாயிருந்தனர்.போஸ் ஸ்பீக்கர்ஸில் மெல்லிய இசை கசிந்து கொண்டிருந்தது.மால் வழக்கம்போல் கூட்டம் அலை மோதிக்கொண்டிருந்தது.ஃப்ரைடே ஈவ்னிங் கூட்டம்.உள்ளுக்குள் உதறல் அதிகமாயிருந்தது ஸ்வேதாவிற்கு.” ச்ச இதெல்லாம் தேவைதானா…பேசாம நைஸா ஓடிறலாமானு தோணியது அவளுக்கு.ஆனாலும் அதற்கு வ்ழியில்லாமல் மேடையிலிருந்த அனைவரின் கண்களும் அவளையே பார்த்துக்கொண்டிருப்பது போல் இருந்தது.இதெல்லாம் எப்டித்தான் பண்றாங்களோன்னு ஒரு கழிவிரக்கமும் ,யாரோ கையில முட்டையும் தக்காளியும் வெச்சிக்கிட்டு தனக்காகவே காத்துக்கிட்டிருப்பது போலவும் தோன்றி பயமுறுத்தியது அவளுக்கு.

மேக்கப்வுமன் தன் வேலையே ஆரம்பித்தாள்.ஸ்வேதாவின் தலைமுடியை கோதிவிட்டுப் பின் விரித்து விட்டு கலரிங் செய்ய ஆரம்பித்தாள்.”என்ன என்ன செய்றீங்க..இந்தக்கலரிங் எல்லாம் வேணாம்” “ஒண்ணும் ஆகாதுங்க..ஒரு ஷாம்ப்பூ குளியல்ல எல்லாம் போயிரும் பயப்படாதீங்க.ஸ்டேஜ் லைட்ஸ்ல க்ளிட்டரிங் எஃபெக்ட் குடுக்கத்தான் இது வேற ஒண்ணுமில்ல.” என்று கூறியவள் பதிலுக்கு காத்திராமல் ஒரு சீராக கலர் பரவும் படி பிரஷ் வைத்து படரச்செய்தாள்.பின் ஐ லைனர், லிப்ஸ்டிக் , ரோஸ் பவுடர் இன்னபிற அவளிடமிருந்த ஐட்டங்களையெல்லாம் ஸ்வேதா மீது அப்ளை செய்து காலி செய்து கொண்டிருந்தாள். ஸ்வேதாவிற்கு என்னவோ ஐட்டங்களை காலி செய்வது போலத்தோன்றவில்லை , தன்னைக்காலி செய்து கொண்டிருப்பது போலத்தானிருந்தது.ஒப்பனை நடந்து முடிந்தவுடன் கண்ணாடியில் பார்த்த உருவத்தை அவளாலேயே நம்ப முடியவில்லை ஸ்வேதாவிற்கு.இப்டி ஒரு தோற்றம் அவளுக்கு ஒரு செருக்கைத்தந்தது மனதிற்குள்.சமயம் பார்த்து உள்ளே நுழைந்த டீ.வி.ஹோஸ்ட்…” அன்பிலீவபிள்…ஸ்வேதா….இல்ல..இல்ல..ப்ரிட்னி…ஃபெண்டாஸ்டிக்…இன்னிக்கு அதகளந்தான் போங்க..” ” என்னக்கொல்லத்தான் போறீங்க….” ” இப்டியே வெளீல போங்க..எத்தன பேர் மயங்கி விழப்போறாங்க தெரியுமா..?” ” உங்க வாழ்க்கைல இந்த நாள் ஒரு மறக்க முடியாத நாளா ஆகப்போகுது ஸ்வேதா” ” இதையும் பேசச்சொல்லி எழுதிக்குடுத்தாங்களா ?” என்று கோபமாகக் கேட்ட ஸ்வேதாவின் மன நிலையைப்புரிந்து கொண்டவளாக , அவள் கூறியதை சட்டை பண்ணாமல் ” உங்க ஹஸ்பெண்ட் வெற்றிக்கு இன்ஃபார்ம் பண்ணியாச்சு ” கெளம்பி வந்துட்டுருக்கார் ” ..தனது அன்பு “ப்ரிட்னி” யைப்பார்க்க…ஹ்ம்….” என்ன சொல்லி வரச்சொன்னீங்க ? ” ம்..அது ஸஸ்பென்ஸ்..ஒரு சர்ப்ரைஸ் காத்துட்டிருக்குன்னு மட்டும் சொல்லி வெச்சிருக்கோம்.”

மேடம் “வெற்றி” சார் மால் உள்ள வந்திட்டிருக்கார். ” வாங்க வாங்க ஸ்வேதா…டைம் வேஸ்ட் பண்ண வேணாம்..” என்று கூறியவாறே எலக்ட்ரிக் கிட்டரை எடுத்து ஸ்வேதாவின் கையில் கொடுத்தாள் ஹோஸ்ட்.அதைக்கையில் வாங்கிக்கொண்டு வந்த ஸ்வேதாவுக்கு , கால்கள் பின்னிக்கொண்டு நடக்கவே இயலவில்லை.கேமரா அவளையே ஃபோகஸ் செய்தது..அது மாலின் சுவர்களில் வைக்கப்பட்டிருந்த பெரிய டீ.வி.ஸ்க்ரீனில் லைவ் கவரேஜ் ஆகத்தெரிந்தது.

ஸ்வேதா வெளிவரக்காத்திருந்த மியூஸிக் ட்ரூப் பிரிட்னியின் பாடலில் ஓப்பனிங் மியூஸிக்கை இசைத்தனர்.போஸ் ஸ்பீக்கர் அதிர்ந்தது.மேடையின் ஓரத்தில் தங்கிவிட்ட டீ.வி.ஹோஸ்ட் ,தன் கைகளை கும்பிடுவது போல மடித்து வைத்துக்கொண்டு ஆட்காடி விரலை மட்டும் ஆட்டி,புருவத்தை உயர்த்தி , தலையை மேற்புறமாக அசைத்து ஸ்வேதாவை முன்னேறிச்செல்லுமாறு பணித்தாள்.அவளின் கண்களில் இப்போது போலித்தனம் ஏதும் தெரியவில்லை.ஸ்வேதா ஸ்டேஜ் மைக்கை நெருங்கியதும் , ஸ்டேஜின் நான்கு புறங்களிலும் இருந்த குப்பிகளிலிருந்து கலர் புகையுடன் தங்க நிறக்காகிதங்கள் சுருள்சுருளாக வெடித்துக்கிளம்பின. சுற்றிக்கொண்டிருந்த உருண்டைகளிடமிருந்து பரவிய வெளிச்சப்புள்ளிகள் ஸ்வேதவை..இல்லை..இல்லை…பிரிட்னியை தொடர்ந்து நனைத்துக்கொண்டிருந்தது.

கிட்டாரைக்கையில் பிடித்துக்கொண்டு பாட முயற்சித்தவளுக்கு தொண்டையிலிருந்து வார்த்தைகள் ஏதும் வரவேயில்லை.முன்னே நிற்கும் கூட்டமும்,மியூஸிக் ட்ரூப்பும் புடை சுழ ஸ்டெஜும் அவளை வெகுவாகப்பயமுறுத்தியது.எல்லாவற்றையும் வெளிக்காட்டாமல் அடக்கிக்கொண்டு சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தவளை கீபோர்ட் ப்ளேயர் , தலையை அசைத்து “ம்..பாடுங்க” என்று கட்டை விரலை உயர்த்திக்காட்டினான்.காற்றில் மிதப்பது போலிருந்தது அவளுக்கு.தலையைத்திருப்பி கூட்டத்தைப்பார்த்தவளின் கண்ணில் ‘வெற்றி’ தென்பட்டான், அப்போது அவளையுமறியாமல் பாடத்தொடங்கினாள் ஸ்வேதா.”bombastic love, so fantastic ” கிட்டாரையும் இசைத்தவாறே தொடர்ந்து பாடினாள்.மேடையைப்பார்த்த வெற்றி திகைத்துப்போனான்.அவனால் நம்பவே முடியவில்லை. அவன் உதடுகள் ” ஸ்..வே..தா…நீ..யா..” என்று உச்சரிப்பதை அவள் கவனிக்கத்தவறவில்லை.முன்னே நின்ற கூட்டம் ஆரவாரம் செய்தது.விசில் பறந்தது.முழுப்பாடலையும் பாடி முடிக்கும் வரை குழைந்த முகத்துடன் நின்று கொண்டிருந்த வெற்றி பாடல் முடிந்தவுடன் மேடையேறினான்.கூட்டத்தின் ஆரவாரம் , விசில்களும் மால்’ஐ அதிரடித்தது. அவர்களின் அருகில் வந்த ஹோஸ்ட் , ” என்ன வெற்றி சார் ..உங்க பிரிட்னி எப்டிப்பாடினாங்க ?” என்று கேட்டவாறே அவன் கையில் மைக்கை கொடுத்தாள்.

வெற்றியின் கண்களில் ஈரம் படர்ந்திருந்தது, வார்த்தைகள் ஏதும் வெளிவரவில்லை.இரண்டு பேரையும் பார்த்துக்கொண்டிருந்த கூட்டம் ஹேவெனக்கூச்சல் எழுப்பியது.ஹோஸ்ட் ஒதுங்கி நின்று கொண்டாள். வெற்றி ” எதுக்கு இதெல்லாம்…உன்ன யார் இதெல்லாம் பண்ணச்சொன்னா ..ம்..?! ” நீதானே எப்பவும் பிரிட்னியப்பாத்துக்கிட்டே இருக்க ..அதுனாலதான் ” என்றவளின் குரல் கம்மியிருந்தது.பின் உடைந்து மெலிதாக அழத்தொடங்கினாள் ஸ்வேதா.அது மாலின் சுவர்களில் வைக்கப்பட்டிருந்த பெரிய டீ.வி.ஸ்க்ரீன்களில் லைவ் கவரேஜாகத்தெரிந்து கொண்டிருந்தது.

Bombastic love So fantastic Where I’m completely yours and you are mine And it’s gonna be exactly like in a movie When we fall in love for the first time

Now, I know why I feel so insecure I never understood what it’s good for

And I, I’m here to testify That you’re the only one I belong to I don’t know where to start It turn into an art Not to show the world that it was you You made me realize Not to compromise The fact that you and I should meet I know where gonna get

பாடல் போஸ் ஸ்பீக்கர்ஸில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது , இம்முறை பிரிட்னியே பாடிக்கொண்டிருந்தாள் அவர்கள் இருவருக்காகவும்.

– சின்னப்பயல் Chinnappayal@gmail.com

Series Navigationஜென் – ஒரு புரிதல் பகுதி 3எனது இலக்கிய அனுபவங்கள் – 8 கம்பாசிட்டர் கவிதை
author

சின்னப்பயல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *