This entry is part 29 of 47 in the series 31 ஜூலை 2011

கரைகிறேன்
தண்ணீரில் அழுவதை போன்றுதான்
தனிமையில் நான் அழுவது
என்னைத்தவிர
எவருக்கும் தெரியபோவதில்லை
தண்ணீரில் கண்ணீர்
தன் சுவையிழப்பதை போன்று
தனிமையில் நானும் சுயம் இழந்துவிட
தனிமையும் கண்களும்
தாமரையை இரசிக்க பழகட்டும் .

அ.இராஜ்திலக்

Series Navigationவாசல்மழையைச் சுகித்தல்!