சிறகின்றி பற

This entry is part 32 of 47 in the series 31 ஜூலை 2011

கனவுகளே
காயம்பட்ட நெஞ்சத்தை
வருடிக் கொடுக்கும்
மயிற் பீலிகளே

வேஷத்துக்கு
சில நாழிகை நேரம்
விடுதலை கொடுக்க வைக்கும்
வடிகால்களே

செலவின்றி
தேவலோகத்துக்கு
சுற்றுலா அழைத்துச் செல்லும்
இன்பத் தேன் ஊற்றுகளே

இறக்கையின்றி
பறக்க கற்றுக் கொடுக்கும்
உனது மாயாஜால
தந்திரங்களே

உறக்கத்திற்கு
இனிமை சேர்க்கும்
கடவுளின் கொடைகளே

கனவுலகச் சாவியை
தொலைத்தலையும்
பகல் பொழுதே
உள்மன ஏக்கங்களுக்கு
தீனிபோடும்
தேவதையின் பரிசுப் பொருட்களே.

Series Navigationஅறிதுயில்..புன்னகையை விற்பவளின் கதை
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *