வெட்டுப்புலி’ நாவலுக்கு ரங்கம்மாள் விருது

author
0 minutes, 2 seconds Read
This entry is part 37 of 47 in the series 31 ஜூலை 2011

கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வழங்கும் திருமதி ரங்கம்மாள் விருதுக்கு நான் எழுதிய “வெட்டுப்புலி’ நாவல் தேர்வாகியுள்ளது.
÷இதுகுறித்து கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வெளியிட்டுள்ள செய்தி:
÷இலக்கிய முன்னேற்றத்துக்காக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த தமிழ் நாவலுக்கு, திருமதி ரங்கம்மாள் பரிசு வழங்கப்படுகிறது. 2009, 2010-ம் ஆண்டுகளில் வெளியான 20 நாவல்கள் இவ்வாண்டு பரிசுப் போட்டிக்கு வரப்பெற்றன. இதில் தமிழ்மகன் எழுதிய “வெட்டுப்புலி’ நாவல், பரிசுக்குத் தேர்வாகியுள்ளது.
÷இதில் நாவலாசிரியர் தமிழ்மகனுக்கு பரிசுத் தொகையாக ரூ. 20 ஆயிரம், இந்த நாவலை வெளியிட்ட உயிர்மை பதிப்பகத்திற்கு ரூ. 5 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
÷தமிழ்மகனின் “வெட்டுப்புலி’ நிகழ்கால சரித்திரத்தை பதிவு செய்யும் முறையில் அமைந்த நாவல். சமூக வரலாறை இந்த நாவல் படம் பிடித்துக் காட்டியுள்ளது. 1910-2010-க்கு இடைப்பட்ட காலத்தின் நிகழ்வுகளைச் சுவையுடன் படைக்கப்பட்டுள்ளது.


-தமிழ்மகன்

Series Navigationநீரிலிருந்து உப்புத்திரவமான பயணத்தில்..:-சுவீகாரம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *