This entry is part 1 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

அப்பாவிடம் அடிவாங்கி
அழுது விசும்பி
சோர்ந்துபோய்க் கண்ணயர்ந்த
நாட்களில் எல்லாம்
வீட்டை விட்டு ஓடிப்போவதாகவே
கனவுகள் வந்திருக்கின்றன.

எனினும்
பள்ளி நாட்களில்
இன்பச்சுற்றுலாவிற்கு
ஏங்கிய போதெல்லாம்
ஒருபோதும் வாய்த்ததில்லை
பயணம்.

‘ஒருதலை ராகத்’தில் கிளர்ந்த
ரயில் காதலும்
அப்பாவின் அதிகாரத்தால்
தடம் புரண்டு போயிற்று.

அப்பாவின் ‘புதிதான’
பழைய சட்டைகள் அணிந்தே
பழகிப் போனதில்
நான் நானாகவுமின்றி
அப்பாவாகவும் இல்லாது போயிற்று
வாழ்க்கைப் பயணமும்.

__ ரமணி

Series Navigationபுணர்ச்சி