The Boy in the Striped Pyjamas
கோடு போட்ட பைஜாமா அணிந்த பையன் எனும் நாவல் 2006 ல் ஐரிஷ் எழூத்தாளர் ஜான் போய்ன் என்பவரரல் ஏழுதப்பட்:டு 2008 ல் வெளி வந்தது. இதனை சமிபத்தில் தொலைகாட்சியில் பார்த்தேன் மனதை பிசைந்து விட்டது.
பட ஆரம்பத்தில் ஜெர்மனியின் பெர்லின் நகரில் 3 சிறுவர்கள் தங்களது விருப்பப்படி விளையாடி கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிறுவனின் பெயர் புருனோ அவனது தந்தை ஜெர்மனியின் மீது அளவில்லா பற்றுடைய ஒரு ராணுவ அதிகாரி..அவனது தாய் வீட்டை பொறுப்பாக பார்த்துக்கொள்ளும் 30 வயதை தாண்டிய பெண். அந்த சிறுவனுக்கு பதின்ம வயதின் ஆரம்ப நிலையில் ஒரு அக்கா. . மகிழ்ச்சியாக கழியும் அந்த புருனேயின் மகிழ்ச்சியில் குண்டு வீசியது போல் அவனது தந்தைக்கு ஜெர்மனின் எல்லையில் உள்ள ராணுவ முகாமுக்கு மாற்றலாகி விடுகிறுது. புருனெ தனது நண்பர்களையும் தனது பாட்டி தாத்தவையும் பிரிந்து பெர்லினைவிட்டு வர மறுக்கிறான்.
. அவனது அப்பாவின் ராணுவ வேலையில் இது எல்லாம் தாங்கி கொள்ளத்தான் வேண்டுமென அவனது தாய் சொல்ல வேண்டா வெறுப்பாக அவர்களுடன் செல்ல சம்ம்திக்கிறேன். தன் நண்பர்களிடம் கண்ணீர் மல்க விடை பெறுகிறான..
ஜெர்மனியின் எல்லையில் உள்ள அந்த ராணுவ முகாம் தன்னந்தனியே ஒரு தீவு போல் உள்ளது.. பெரிய பங்களாவில் தனது குடும்பத்துடன் குடியேறும் சிறுவன் அருகில் ஒரு வீடும் இல்லாது கண்டு வெறுத்து போய்விடுகிறான். ஒரு நாள் வீட்டின் மாடிக்கு செல்லும் சிறுவன் ஒரு சன்னல் சட்டங்களால் அடிக்கப்பட்டு மூடி இருப்பதை கண்டு சட்டத்தை உடைத்து சன்னலை திற்க்கிறான். தூரத்தில் ஒரு பண்ணை வீடு போல் தெரிகிறது. அங்கு கோடு போட்ட சட்டை பேண்ட் அணிந்த மனிதர்கள் வேலை பார்த்து கொண்டிருப்பதை காண்கிறான. புருனேகக்கு அங்கு சென்றால் தனக்கு விளையாட நண்பர்கள் கிடைக்குலாம் எனும் நம்பிக்கை ஏற்படுகிறது.
அவர்களுக்கு வீட்டில் சேவை செய்யும் பவல் எனும் வேலையாள் இருக்கிறார் அவரை புருனோவின் தந்தை ரொம்ப கேவலமாக நடத்து கிறார்
புருனெ, பேச்சு வாக்கில் தன் தாயிடம் தான் அருகிலுள்ள பண்ணை வீட்டு சிறுவர்களுடன் விளையாடுவேன் என சொல்ல . அவனது தந்தை சந்தேகம் கொண்டு மாடிக்கு சென்று பார்க்க சட்டம் அடித்து மூடியிருந்த சன்னல் திறந்திருப்பதை கண்டு சிறுவனின் தாயை கடிந்து கொள்கிறார்.
புருனெயை அங்கெல்லாம் போக கூடாது. அவர்கள் யுதர்கள் அவர்கள் மோசமானவர்கள் உண்மையானவாக்ள் அல்ல என கடிந்து கொள்கிறார்.
சிறுவன் தன்னை துப்பறிபவனாக தன்னை பாவித்தும் சொல்லிக் கொண்டும் ராணுவ முகாமின் எல்லா திசைகளிலும் சென்று வருகிறான்.அச்சிறுவனின் அக்கா அங்குள்ள இளம் ராணுவ வீரனுடன் பழகி வருகிறாள். அதலால் அந்த இராணுவ முகாம் அவளுக்கு சுவராசியமாக இருக்கிறது. ஆனால் புருனேகக்கு மட்டும் விளையாட ஆளில்லாமல் தவிக்கிறான் அங்குமிங்கும் பறவை போல் கைகளை விரித்து ஓடி ஆடி விளையாடுகிறான். அந்த விளையாட்டு போரடித்து போக அவன் தனக்கு ஒரு பழைய டயர் வேண்டும் என தனது அக்காவின் நண்பனிடம் கேட்க . அவன் அங்கே வரும் பவலிடம் புருனெக்கு ஒரு நல்ல டயர் ஒன்று எடுத்து கொடுக்குமாறு சொல்ல அந்த பவல் பழைய டயாகள் வைத்திருக்கும் இடத்துக்கு சென்று இருப்பதில் நல்ல டயரை எடுத்து புருனெக்கு தருகிறார்.. புருனெ அதை உருட்டி விளையாடி பின் ஊஞ்சலாக கயிற்றில் கட்டி விளையாடி வருகிறான். அவ்வாறு ஒரு நாள் விளையாடி கொண்டு இருக்கும் போது அவனது அம்மா தான் நகரத்துக்கு செல்கிறேன் வருகிறாயா என கேட்க புருனே வரவில்லை என்றும் தான் ஊஞ்சலாடி கொண்டு இருக்க போவதாக தெரிவித்து விட்டு ஊஞ்சலாடுகிறான்
ஊஞசலாடுகையில் தீடீரென புருனெ எழுந்து நிற்க ஊஞ்சலிருந்து விழுந்து, காலில் அடிப்பட்டு விடுகிறது. அதனை கண்ட பவல் புருனேயை அழைத்து சென்று மருந்து வைத்து கட்டி விடுகிறான். பவலிடம் புருனெ தனது தாய் வந்ததும் திரும்ப மருத்துவரிடம் அழைத்து செல்வார்கள். என சொல்லுகிறான. அப்போது பவல் தேவை இருக்காது என்கிறான. ஏன் என புருனெ வினவ. தான் டாக்டர்க்கு படித்தவன் என்று சொல்லுகிறான்.
.
அச்சிறுவனின் தாய், புருனெயின் கெட்ட நாற்றமடிக்கும் புகை அடிக்கடி வருவது பற்றி குறை சொல்லுகிறாள்.. . ஒரு நாள் பவலுக்கு பதிலாக வேறு ஆள் வேலைக்கு வர சிறுவன் தன் தந்தையிடம் பவல் எங்கே என கேட்க அவர் விடையளிக்காமல் அவன் மீது எரிந்து விழுகிறார்.அவனது தாய் பவலுக்கு என்ன நேர்திருக்கும் என உணர்ந்து கொள்ளுகிறாள்
ராணுவ முகாமை சுற்றி வரும் புருனெ ஒரு நாள் ஓரிடத்தில் கதவு திறந்திருப்பதைகண்டு அதன் வழியாக வெளியே சென்று சிறு காட்டினை கடந்து விளையாடுகிறான். இன்னொரு நாள் அந்த வழியாக வெளியே வந்து ஓடை ஓன்றை தாண்டி செல்லுகிறான். அந்த வழியே செல்லுகையில் முன்னொரு நாள் சன்னல் வழியாக பார்த்த பகுதி தெரிகிறது. அருகில் சென்று பார்க்கிறான் அங்கு வீடுகள் போன்ற பல கட்ட்ங்கள் இருப்பதும் அதை சுற்றி முள்வேலி அமைத்து உள்ளதையும் காண்கிறான. . யாராவது தென்படுகிறார்களா என பார்க்கிறான். .தூரத்தில் கோடு போட்ட சட்டை பேண்ட அணிந்த சிலர் ஏதோ வேலை செய்து கொண்டு இருப்பது தெரிகிறது. அவன், சிறுவர்கள் யாராவது விளையாட இருக்கிறார்களா என தேடி அலைந்து தோல்வி அடைந்து. வீட்டுக்கு திரும்பி விடுகிறான்.
அடுத்த நாள் அந்த முள்வேலி முகாமிற்கு செல்கிறான். வேலி வழியாக தன் கண்களை செலுத்த கோடு போட்ட பைஜாமா அணிந்து ஒரு சிறுவன். உட்கார்ந்து கொண்டிருப்பதை காண்கிறான். அவன் பெயர் சாமுவேல் .அவனை புருனே அழைக்க, சாமுவேல் வேலிக்கு அந்த பக்கம் அமாந்தும் புருனோ இந்த பக்கம் அமர்ந்து பேசி கொள்கிறார்கள். இருவரும் தங்களது பெயரை ஒருவருகொருவர் தெரிவித்து கொள்கிறார்கள். புருனேக்கும் சாமுவேலுக்கும் ஒரே வயது. தினமும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக்கொள்கிறார்கள். புருனே திண் பண்டங்களை தனது தாய்க்கு தெரியாமல் எடுத்து வந்து சாமுவேலுக்கு கொடுக்கிறான். ஒரு நாள் சாமுவேலை தனது ராணுவ முகாம் வீட்டில் கண்ட புருனே. எப்படி வந்தாய் என கேட்க அவன் சிறிய கண்ணாடி பாத்திரங்களை துடைக்க சின்ன கைகள் தேவை என்பதால் தன்னை அழைத்து வந்துள்ளார்கள் என சொல்லுகிறான் தனது நண்பனை கண்ட மகிழ்ச்சியில் புருனே திண்பண்டம் ஒன்றை கொண்டு வந்து சாமுவேலிடம் கொடுக்க அவன் அதனை ருசித்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது ராணுவ வீரன் பார்த்து விட ராணுவ வீரன் சாமுவேலிடம் ஏது திண்பண்டம் என கேட்க புருனெ தனக்கு நண்பன் என்றும் அவன் தான தனக்கு அதனை கொடுத்தான என சொல்லுகிறான். புருனெயிடம் ராணுவ வீரன் விசாரிக்கையில் புருனே பயத்தில் சாமுவேலை தனக்கு முன்பின் தெரியவே தெரியாது என சொல்லி விட சாமுவேல் ராணுவவீரனால் இழுத்து செல்லப்படுகிறான.
தான் பொய் சொல்லி சாமுவேலை மாட்டி விட்டதை எண்ணி புருனே தூங்காமல் படுக்கையில் புரண்டு தூக்கமில்லாமல் .இரவை கழிக்கிறான் காலையில் முதல் வேளையாக முள்வேலி முகாம் சென்று பார்க்கிறான் . சாமுவேலை காணவில்லை. ஏமாற்றத்துடன் திரும்புகிறான். அடுத்து நாட்களிலும் காணவில்லை. புருனேக்கு ரொம்ப வருத்தமாக போய் விடுகிறது.
இதற்கிடையில் கெட்ட நாற்ற புகை வேலையாட்கள் காணாமல் போவது இரண்டையும் முடிச்சு போட்டு பார்த்து சிறுவனின் தாய் தனது கணவனிடம் சண்டை போட்டு தங்களை பெர்லினில் உள்ள அவளது தாய் வீட்டில் விட்டு விடுமாறு கேட்டு சண்டையிடுகிறாள். முதலில் சம்மதிக்காத ராணவ அதிகாரி பின் சம்மதம் தெரிவிக்கிறார். . போவதற்கு நாள் குறிக்கப்படுகிறது.
வழக்கம்போல் முள்வேலி முகாம் செல்லும் புருனே தனது நண்பன் சாமுவேல் டராலியில் பொருட்களை தள்ளி கொண்டு செல்லுவதை கண்டு அவனை அழைக்கிறான். அவன் வேலி அருகில் வந்ததும் அவன் கண்களில் அடிப்பட்ட காயம் இருப்பதை கண்டு அவனிடம் புருனே மன்னிப்பு கேட்கிறான். இருவரும் பழைய படி நண்பர்களாகி வேலிக்கு அங்கேயும் இங்கேயும் அமர்ந்து விளையாடி கொண்டு இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் இவ்வாறு சென்று விளையாடி வருவது வாடிக்கை ஆகிறது. ஒரு நான் சாமுவேல் தனது தந்தையை இரண்டு நாட்களாக காணவில்லை என்றும் எங்கு தேடியும் கிடைக்க வில்லை. என்று சொல்லுகிறான. .அடுத்த நாள் முள்வேலியில் இருவரும் சந்திக்கிறார்கள். குச்சியை வைத்து மண்ணில் பள்ளம் தோணடியபோது மண் இலகுவாக இருக்கிறது.
அடுத்து நாள் புருனே உள்ளே வந்து பைஜாமா சிறுவனின் தந்தையை அவர்கள் இருவுரும் சேர்ந்து கண்டு பிடிப்பது என்றும் . அதற்காக சாமுவேல் இன்னொரு பைஜாமா கொண்டு வரவேண்டும் என்றும் ராணுவ சிறுவன் மண்தோண்டு கரண்டி கொண்டு வருவதும் என்றும் முடிவு செய்கிறார்கள்.
அடுத்த நாள் புருனெயின் அம்மா அக்கா ஆகிய மூவரும் பெர்லினுக்கு செல்ல ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது.
இதைப்பற்றி ஒன்றும் தெரியாத புருனெ மண்தோண்டு கரண்டியை எடுத்து கொண்டு முள்வேலி முகாம் செல்கிறான். சாமுவல் அவனது இன்னொரு பைஜாமாவை கொண்டு வருகிறான.. முள்வேலியில் இருவரும் சந்தித்து கொள்கிறார்கள். புருனே வேலி அருகே நுழைந்து செல்ல வாகாக பள்ளம் தோண்டி தனது ஆடையினை களைந்து வேலியின் உள் நுழைந்து சாமுவல் கொண்டு வந்த பைஜாமவை அணிந்து கொள்கிறான. இருவரும் உள்ளே சென்று சாமுவலின் தந்தையை தேடுகிறார்கள். தேடுகிறார்கள் தேடி அலைகிறார்கள். பெரியவர்கள் இருக்கும் பகுதியில் நுழைந்து தேடுகிறார்கள். அப்போது அங்கு வரும் ராணுவ அதிகாரிகள் சிலர் எல்லாரும் அணி வகுத்து செல்ல உத்தரவிட அவர்களுக்கிடையே இரு சிறுவர்களும் நடுவில் மாட்டிகொண்டு அவர்களுடன் செல்கிறார்கள் . அவர்கள் எல்லாரும் அணிவகுத்து சன்னலே இல்லாத அறைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.
அங்கே அணைவரையும் ஆடை களைய சொல்லப்படுகிறது. எல்லாரும் இரு சிறுவர்களும் ஆடையின களைந்து நிற்கிறார்கள். அந்த அறையின் கதவு மூடப்படுகிறது.
அச்சிறுவனின் தாய் ஊருக்கு செல்ல தன் புருனேயை அழைக்கிறாள் அவனை காணாது புருனேயின் தந்தையிடம் சொல்ல அவர் புருனேயை தேடுகிறார் .ராணுவ வீரர்களும் தேடுகிறார்கள் அவர்கள் ராணுவ முகாமின் திறந்துள்ள கதவின் வழியே காட்டு பாதையை தாண்டி முள் வேலி முகாம் அருகே செல்லுகிறார்கள். அங்கே புருனேயின் ஆடை கிடப்பதையும் பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதையும் கண்டு புருனே உள்ளே சென்று உள்ளான் என்பதை ஊகித்து அவனுக்கு ஏதாவது ஆகி விடக்கூடாது என நினைத்து கதறுகிறாள் . அவனது தந்தை ராணுவ அதிகாரி முள்வேலி முகாமினுள் நுழைந்து புருனேவை தேடுகிறார்..
அவர், விஷவாயு செலுத்தி யுதர்களை கொல்லும் அந்த மூடப்பட்ட அறையை நெருங்கும் சமயத்தில் அந்த அறையின் மேல் பகுதியிலிருந்து ஜெர்மனிய வீரர்களால் விஷவாயு திரவம் ஊற்றப் படுகிறது. அவ்விடத்திலிருந்து கெட்ட நாற்றத்துடன் கரும் புகை மேல் எழுகிறது………………………
. 2008 ல் இப்படத்தை பார்த்திருந்தால் ஒரளவு சோகமிருந்திருக்கும். இப்போது பார்க்கும் போது முள்வேலி முகாம்களில் சிறைப்பட்டியிருக்கும் நமது இன மக்களின் துயரத்தையும் நிளைத்து சோகம் கண்களை கண்ணீரால் நிரப்பி விடுகிறது
- என் பாதையில் இல்லாத பயணம்
- புணர்ச்சி
- ஆசாத் மைதானத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன்
- சின்னஞ்சிறிய இலைகள்..
- குற்றமுள்ள குக்கீகள் (cookies)
- 10 Day Solo Art Exhibition at Vinnyasa Premier Art Gallery, Chennai on September 1, 2011
- இழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி
- புத்தன் பிணமாக கிடைத்தான்
- மாற்றுத்திரை குறும்பட ஆவணப்பட விழா
- எங்கிலும் அவன் …
- முன்னறிவிப்பு
- (75) – நினைவுகளின் சுவட்டில்
- சிப்பியின் ரேகைகள்
- உரையாடல்.”-
- புதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது
- தீர்ந்துபோகும் உலகம்:
- எங்கே போகிறோம்
- வாக்கிங்
- ஆர்வம்
- கதையல்ல வரலாறு -2-1: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்
- மொழிபெயர்ப்பு
- நாளை ?
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4
- கோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்
- நேயம்
- ‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது?
- மீண்டும் வியாழனைச் சுற்ற நீண்ட விண்வெளிப் பயணம் துவக்கிய விண்ணுளவி ஜூனோ
- உடைப்பு
- ஜென் ஒரு புரிதல் பகுதி 7
- வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்
- யுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்
- காகிதத்தின் மீது கடல்
- இருப்பு!
- கூடியிருந்து குளிர்ந்தேலோ …
- நிலவின் வருத்தம்
- பொன்மாலைப்போழுதிலான
- தங்கப் பா தரும் தங்கப்பாவுக்கு நான்கு முகங்கள் !
- தமுஎகச இலக்கியப் பரிசு – முடிவுகள் அறிவிப்பு
- இந்தியா அதிரும் அன்னா ஹசாரே எழுச்சி….
- பேசும் படங்கள் ::: கோவிந்த் கோச்சா
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (உன் நீர்ச்சுனையில் எழும் தண்ணீர்) (கவிதை -44)
- இயற்கை வாதிக்கிறது இப்படி……
- முனனணியின் பின்னணிகள் டபிள்யூ. சாமர்செட் மாம் 1930
- பஞ்சதந்திரம் தொடர் 5 – நரியும் பேரிகையும்
- சமச்சீர் கல்வி : பிரசினைகளும் தீர்வுகளும்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 12 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 4 (தி.க.சி)