பிள்ளையார் சதுர்த்தி என்றாலே பயம்தான்!

This entry is part 25 of 54 in the series 4 செப்டம்பர் 2011

சின்ன வயதினிலே ஆவலாய் எதிர்பார்க்கப்பட்ட பண்டிகைகளில் ஒன்று. பெரியவர்களாலும் வரவேற்கப்படும் பண்டிகை. காரணம் இப்பண்டிகையின் எளிமையே. பட்டாசு சத்தம் கிடையாதல்லவா? ஒளி, ஒலி கொண்டாட்டங்களால் ஏற்படும் சுற்றுப்புறச்சூழ்னிலை மாசுபடுதல் என்றெல்லாம் கிடையாது. சிறுவர்கள் விரும்பும் காரணம் கொழுக்கட்டை போன்ற வினோதமான தின்பண்டங்கள். பலவிதமான கொழுக்கட்டைகள். ஒரே வீட்டில் இரண்டு அல்லது அதற்குமேல். அவைகள் மற்ற வீட்டுக்குக் கொழுக்கட்டைகளோடு பரிமாறிக் கொள்ளப்படும். பனையோலைக் கொழுக்கட்டை பட்டணங்களில் கிட்டாது. கிராமங்களில் மட்டுமே.

இன்னொரு காரணம் வணங்கப்படும் தெய்வம். அதன் உருவம் சிறுவர்களுக்குப் பிடிக்கும். “ஆனை வடிவில் ஒரு தெய்வமா ?” என்று மெல்ல நகைக்கலாம். அத்தெய்வத்தைப் பற்றிய கதைகளும்தான். “அம்மா குளிக்கப் போகிறேன். ஆரும் வராமல் பார்த்துக்கொள்ளடா செல்லம்” என்று அம்மா சொன்னவுடன் எவ்வளவு கவனமாகப் பார்த்துக் கொள்வோம். இத்தெய்வத்தின் கதையில் அது வரும். எனவே சிறுவர்கள் ஒரு மனயிணைப்பைப் (relating to) பெறுகிறார்கள் இத்தெய்வத்திடம். மேலும் தாயின் மீதுள்ள அளவற்ற அன்பினால், தாயைப்போலவே தனக்கு வரும் மனைவி குணத்தில் இருக்கவேண்டுமென்று சொல்லும் கதை. தாயிற்சிறந்த கோயிலுமில்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. என்றெல்லாம் வரும் பழமொழிகளை இத்தெய்வத்தின் கதை நிரூபிக்கிறது. ஆனைமுகம் கோபத்தைக் காட்டவியலாது. எனவே எப்போது ஒரு சாந்த முகம்.

எனவே இப்படிப்பட்ட மனச்சாய்வுகளை (predilections) உருவாக்குவதால் இத்தெய்வத்துக்கும் சிறுவர்களுக்கும் பிணைப்பு. இதை மேலும் இணைப்பதற்காக “இவர் ஞானக்கடவுள் எனவே இவரை வணங்கினால தேர்வில் வெற்றிபெறலாம்” என்றும் நினைத்து தேர்வு நாட்களில் பிள்ளையார் கோயில்களில் மாணவர் கூட்டம் திரளும்.

பிள்ளையார் என்றால் இப்படிப்பட்ட நினைவுகள்தான் சின்னவயதிலே வரும். பிள்ளையரைத் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை வைத்து பத்து நாட்கள் ஆராதனை செய்து கடலில் கரைக்கும் வழக்கம் அப்போது இல்லை.

இன்றைய நிலையென்ன? பலபல வடிவ பிள்ளையார்களுக்குப் பலபலவிடங்களில் பத்து நாட்கள் ஆராதனை. இது மராட்டிய பார்ப்பனர்கள் கண்டுபிடித்தது. திலக்கே இதை முதலில் செய்தார். பிள்ளையார் மராட்டியர்களின் இஷ்ட தெய்வம். துர்கை வங்காளிகளுக்கு. அவர்களும் இப்படிப் பத்துநாள் வைபவம் ‘துர்கா பூஜா’ என்ற பேரில் எடுப்பார்கள், இறுதிநாளில் கடலில் சிலைகளைக் கரைப்பார்கள். மேளதாளம், தாரை தப்பட்டைகளோடு சிலைகள் கடலை நோக்கியோ அல்லது ஹூக்ளி நதியை நோக்கியோ பயணிக்கும்.

தமிழ்நாட்டிலும் துர்க்கை வழிபாடு தொன்று தொட்டு வருவது. பாலையும் பாலைசேர்ந்த நிலத்தில் கொற்கையை வழிபட்டார்கள் தமிழர்கள் என்கிறார் தொல்காப்பியர். கொற்கையே துர்கை.
தமிழர்கள் வங்காளப் பழக்கத்தை ஏன் நகலெடுக்கவில்லை? பிள்ளையார் வழிபாட்டில் மட்டும் ஏன் மராட்டிய வழக்கம் ? காரணம், பிற மதங்களுக்குச்சவால் விடும் முகமாக திலக் பிள்ளையாரை வைத்து மத அரசியல் செய்தார். இன்றும் செய்யப்படுகிறது. அஃதை இங்கும் செய்தால் மத அரசியல்வாதிகளுக்கு இலாபம் கிடைக்கும் என்பதாலே. பிள்ளையார் ஊர்வலம் வெறும் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பவே. தனிமனிதனின் உணர்ச்சிகளையல்ல. தனிமனிதர்கள் கூட்டமாகச்ச் சேரும்போது ஆங்கு நிகழ்பது கூட்டச்சிந்தனை. கூட்டுணர்வு. மாப் சைக்காலஜி. mob pshchology. அதை இப்படியும் அப்படியும் அக்கூட்டத்தை வழிநடத்துவோர் தமக்கேறப மாற்றிவிடலாம் இலகுவாக. இப்படிப்பட்ட ஊர்வலங்கள் படாடோபமாக அட்டகாசமாக மாற்றல் கூட்டுணர்வை மேலும்மேலும் உயர்த்தவே. இங்கு எப்படி ஆன்மிகம் வரும்?

இதன் விளைவு: மதக்கலவரங்கள் வெடிக்கும் அபாயங்கள். அவைகளத் தடுக்க, வெடித்தால் அடக்க அரசு காவலர்களைக் பத்துநாட்கள் குமிக்கிறது, குறிப்பாக, கடைசி நாளில் பிள்ளையார்ச் சிலைகள் ஊர்வலமாக தாரை தப்பட்டைகள் முழக்கத்தோடு எடுத்துச் செல்லும்போது, எங்கு எப்போது கலவரம் வெடிக்குமோ? பழிக்குப்பழியாக‌ நம்வீடும் கொளுத்தப்படுமோ என்ற பயம். கலவரம் வெடித்தால், வீடுகள் கொழுத்தப்படும். எதிர்வினைகள் நேரும். உயிர்ப்பலிகள் விழும். இவற்றை வைத்துக்கொண்டு, மக்களிடையே பிரிவினைகளை உருவாக்கி தேர்தலில் வெற்றியடையலாம்.

எனவே ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தியின் பத்தாவது நாள் ஊர்வலத்தில் என்ன நேருமோ என மனம் பதைக்கிறது.

******

Series Navigationபிணங்களை வெட்டுபவரின் குறிப்புக்கள்பீமாதாயி
author

காவ்யா

Similar Posts

34 Comments

 1. Avatar
  smitha says:

  I disagree that Tilak started the Vinayaka chaturthi celebrations to bring about communal disharmony. Can you show 1 single incident of communal vioelnce during the Vinayaka celebrations during his time & after?

 2. Avatar
  Kavya says:

  Smitha !

  திலக் பிள்ளையாரை வைத்து மத அரசியல் செய்தார் என்றுதான் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்து-முசுலீம் கலவரத்தைத் தூண்டினார் என்று எழுதப்படவில்லை.

  விநாயகர் ஊர்வலம் தேவையில்லை. ஆனால் திலக் அதைக்கொண்டுவந்தார். இந்துக்களை ஒரேநேரத்தில் பெரு எண்ணிக்கையில் கூட்டி, விநாயகர் சிலைகளைக் கடலில் கரைக்கச்செல்லும் ஊர்வலம் என்ற சாக்கை வைத்து செய்யவேண்டுமா ? இந்துக்களிடையே அது பெரும் பரவசத்தை ஊட்டும் பக்தியென்றெல்லாம் சொல்லமுடியாது. பக்தி மினேசிங்காக (menacingly) இருக்கத் தேவையில்லை. இருக்கவும் கூடாது. We can’t argue that a learned person like Tilak who wanted communal harmony would not have thought about a style of raucous and menacing worship which could be a potential tinderbox to ignite a spark, then a burning flame, of Hindu Muslim riots. He thus has showed the cue ! TN should reject his style out and out. Let Maharashtra and Gujarat become a hotbed of communal riots. Why should TN be? Such style is not native to TN. If at all we want to borrow a style of worship, may it be in the interests of whole society. Tilak transformed a peace-loving religion into a menacing one.

  திலக்கின் செயலை சிவசேனாப் பிடித்துக்கொண்டது. பம்பாய் கலவரம் நடந்த ஆண்டு, விநாயகர் ஊர்வலம் அச்சத்துடன் பார்க்கப்பட்டது. இன்று தமிழகத்துக்கு வந்து விட்டது. இரு ஊர்களில் கலவரம். ஒன்றில் ஒரு பெண் உயிரிழந்தார். தமிழகப் போலீசாரின் திறமையினாலேயே அசம்பாவிதம் மற்றவிடங்களில் நேரவில்லை. அரசு பெரும் போலீசுப்படையைக் குவிக்கிறது. ஏன்? இல்லாவிட்டால் இந்து- முசுலிம், கன்யாகுமரியில் இந்து-கிருத்துவர் கலவரங்கள் உண்டாகும். சமூக விரோதிகளுக்கு விநாயகர் ஊர்வலம் ஒரு நல்ல வாய்ப்பு என்று எச்சரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 3. Avatar
  GovindGocha says:

  ஊர்வலத்தில் என்ன நேருமோ என மனம் பதைக்கிறது– அது கோழைத்தனத்தை காண்பிக்கிறது. போருக்கு போனால் சாகனுமே என்ற பேடித்தனத்தால் தான் இந்த தேசம் அப்கரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டது… அதனால், அதிகமான உயிர்ச் சேதம் ஏற்பட்டதே நடந்தது…. விநாயகர் ஊர்வலம் பக்தி அல்ல… ஆம், ஆனால் அதே சமயம் அது ஒரு இணைப்பு புள்ளி… தவறில்லை… இல்லாவிட்டால் கஸாப்புகள் வருகை அதிகமாகத் தானிருக்கும். ஒரு கன்னத்தை காட்டினால் மறு கன்னத்தைக் காண்பி என்று சொன்னதாக ஒருவரை வழிகாட்டி ஊர் ஊருக்கு ஆயுதமுடன் தான் சென்று வென்றார்கள்…

 4. Avatar
  GovindGocha says:

  பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடாமலேயே டில்லி கோர்ட்டில் குண்டு வெடிப்பு….

 5. Avatar
  siva.saravanakumar says:

  எதுக்குங்க சும்மா சுத்தி வளைச்சுக்கிட்டு? இந்த நாட்டுல ஹிந்துக்கள் வாழவே கூடாதுன்னு சட்டம் போட்டுட்டா வேலை முடிஞ்சுது…….இருக்கவே இருக்கு ஜிசியா வரி………..

 6. Avatar
  A.K.Chandramouli says:

  Lokamanya Thilak used the Ganesh Chathurthi festivel to organise people against Brithshers. He was the Guru for Bharathi, V.O.C,V.V.S.IYER and others. You can not question his patriotism. His activity was not communal. You dont have right to creticise his activity of uniting people.

 7. Avatar
  Kavya says:

  விநாயகர் ஊர்வலம் என்பதை தமிழ் நாட்டு இந்து மக்கள் உருவாக்கவில்லை. திலக்கிடமிருந்தும் பெறவில்லை. மராட்டி இந்துக்களிடையே ஒரு ஒட்டுமொத்த அடையாளத்தை உணர்ச்சிகரமாக‌ உருவாக்க திலக் விநாயகரை ஊர்வலத்தை உருவாக்கி வெற்றி கண்டார். அதையே தமிழ்நாட்டிலும் உருவாக்கி வெற்றி காணவேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆர் எஸ் எஸ்ஸின் தமிழ்க்கிளையான இந்து முன்னணியர் உருவாக்கியதே இந்த விநாயகர் ஊர்வலம். தமிழ்நாட்டுக்குப் புதிய வரவு.

  இதற்குப் பதிலடியாக முசுலீம்கள் மகமதுவின் பிறந்த நாளை (மீலாது நபி) ஊர்வலமாக உருவாக்கிக் கொண்டாடும் வழக்கத்தை ஆரம்பித்து விட்டனர். 80களில் அப்படிப்பட்ட மாபெரும் ஊர்வலத்தை நான் சென்னையில் கண்டேன். இப்போது நடக்கிறதா என்று தெரியவில்லை.

  ஆக கோவிந்த கோச்சா, இப்படிப்பட்ட ஊர்வலங்கள் எவர் எடுத்தாலும் பொதுமக்களுக்குப் பயமே. அரசுவுக்கோ அது முடியும் வரை தலைவலியும் பாதுகாப்புக்காக விரையம் செய்யும் பணச்செலவும்.

  நாட்டில் எப்படி வறுமை ஒழியும் இறைவன் பெயரால் மனிதர்கள் நடத்தும் குரங்குத்தனத்தால்? நீயா நானா என மார்தட்டினால் என்ன வளரும் கோவிந்த கோச்சா அவர்களே? இத்தகைய ஊர்வலங்களை வைத்து வைத்து பக்தி வளராது; பகைதான் வளரும். An eye for an eye will make the whole world blind, Gandhi said.

  Religion should be used to foster amity and brotherhood between people. Not to terrorise one another.

  1. Avatar
   GovindGocha says:

   இறைவன் பெயரால் நடத்தப்படும் குரங்குகளை கண்டிக்க கட்டுரை எழுதியிருக்கலாமே காவ்யா…

 8. Avatar
  Kavya says:

  திரு சந்திரமவுலி !

  சரியாகச்சொன்னீர்கள்: திலக்கின் நோக்கம் பிரிட்டானியர்களுக்கெதிராக இந்தியர்களை இணைப்பதே. விநாயகர் ஊர்வலத்தை வைத்து இந்துக்களை மட்டும்தான் இணைக்கமுடியும். கிருத்தவரும் இசுலாமியரும் அவருக்கு இந்தியராகத் தெரியவில்லையா ? போகட்டும்.

  பிரிட்டானியருக்கு எதிராக எழுச்சிகொள்வது ஒரு ஆன்மிகச் செயலல்ல. அது லவீகச் செயல். அப்படிப்பட்ட செயலுக்கு திலக்குக்கு ஒரு இந்துக்கடவுள் தேவைப்பட்டது. இந்து மதம் தப்பான வழியில் பிரயோகம் பண்ணப்பட்டது. அப்படியே பிரிட்டானியருக்கு எதிராக அவர் செய்தார் என்று ஒத்துக்கொண்டாலும், இன்று இந்துக் கடவுளர்களான அனுமாரையும் ராமரையும் போராளிகளாகப் படங்களில் சித்தரித்து இந்துக்களை தம்மோடு வாழும் சக இந்தியருக்கெதிராக இணைந்து ஒரு போர்ப்படையைத் திரட்ட திலக் காட்டிய வழி பயன்படுத்தப்படுகிறது. அதில் ஒன்றுதான் விநாயகர் ஊர்வலம் தமிழ்நாட்டில் இன்று.

  இந்து என்ற தம்மைச் சொல்லிக்கொண்ட திலக்கே தவறான வழியைக் காட்டிவிட்டால் இப்போது உள்ளவர்களை எப்படிக்குற்றம் சாட்ட முடியும்? நினைவிருக்கட்டும்: இன்று இந்துக்கள் அனுமாரின் திறந்த மார்ப்பைப் பார்த்தது வெறிகொண்டு கூட்டமாக ஒரு போர்ப்படையாக வேண்டும் என்பது ஒரு அன்னியருக்கெதிராக அல்ல. நம்முடனே வாழும் சகோதர இந்தியர்களுக்காக: அவர்கள் செய்த ஒரே குற்றம் ஆபிரஹாமிய மதங்களை ஏற்றுக்கொண்டதே.

  இல்லை..இல்லை. திலக் செய்தது சரியென்றால், ஜிகாதிகள் செய்வது சரியென்றுதான் ஆகிறது. அவர்களும் குரானையும் மகமதுவையும் காட்டித்தான் தம் தீவிரவாதத்திற்கு நியாயமும் தெய்வத்தன்மையையும் கற்பிக்கிறார்கள். குரானைச்சொல்லித்தான் முசுலீம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் வித்தையைச் செய்கிறார்கள்.

  இவர்களும் கடவுளைக்காட்டுகிறர்கள். திலக்கும் கடவுளைக் காட்டினார். இவர்களையும் இவர்கள் தேசியவாதிகள் ; அவர்களுக்கு அவர்கள் தேசியவாதிகள்.

  ஆக, மதம் இவ்வாறு தவறான வழியில் பிரயோகமாகிறது. இந்துத் தீவிரவாதமும் இசுலாமியத்தீவிரவாதமும் ஒன்றே தங்கள் செயல்களை இறைவன் பெயரால் செய்வதால்.

  திரு சந்திரமவுலி ! வேண்டுமென்றால் ஒருத்தருக்கொருவர் நேரடியாக போதி அடித்துக்கொள்ளலாமே ? அதைச்செய்வதற்கேன் உங்களுக்கு வேண்டும், விநாயகர் ? அனுமார் ? ராமர் ? குரான் ? மகமது நபி ?

  சொல்லுங்கள்.

 9. Avatar
  Kavya says:

  //விநாயகர் ஊர்வலம் பக்தி அல்ல… ஆம்,//

  Thank you Govinda Gocha for pointing out this truth.

  To prevent or deter the entry of terrorists into India, Pillayaar procession is not the correct way. It is brazen abuse of religion. Use your laws, your military, your police, your policies etc. Not religion at all.

  Pllaiyaar procession, with war cries against Muslims and Christians, will create terrorists within India. Home grown terrorists !

  How will you stop it? By torching houses of other religious ppl holding the picture of Hanaman torching Lankapuri?

  My sole point is: Leave God at homes, temples or mosques or Churches. If someone has done that mistake as Tilak did, lets not blindly ape that bad example.

 10. Avatar
  சந்திர.பிரவீன்குமார் says:

  20-ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் வெறும் பக்தி பரவசத்தில் இருந்த மக்களையும் வீதிக்கு வரவைத்து, அவர்களிடம் தேசபக்தி உணர்வை ஏற்படுத்தினார் திலகர். இன்றும் கூட நிலைமை சீரடையவில்லை. இன்று உள்ள போக உலகில் நம் அண்டை வீட்டில் நடக்கும் அசம்பாவிதங்கள் நமக்கு தெரிவதில்லை. விநாயகர் சதுர்த்தி மூலமாக பல இடங்களில் இளைஞர்கள் ஒன்று சேருகிறார்கள். நாட்டின் பயங்கரவாதம், தன்னம்பிக்கை போன்ற பல நல்லவற்றை பயில்கிறார்கள்.
  காவ்யா போன்றவர்கள் இதை மறந்து விடுகிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டுகிற மாநாடு நேரங்களில் மக்கள், குறிப்பாக பெண்கள் அவதிபடுவதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்; அவஸ்தைகளை அதனால் அனுபவித்தும் இருக்கிறேன். அதை விட இந்து அமைப்பு நடத்தும் விநாயகர் ஊர்வலங்களில் கலவரங்கள் மிக மிக குறைவு தான். (அரசியல் கட்சிகள் நடத்தும் ஊர்வலம் பற்றியும், அதனால் தமிழகத்தில் ஏற்படும் அமைதியின்மை பற்றியும் காவ்யா அடுத்த கட்டுரையில் எழுதுவார் என்று எதிர்பார்கிறேன்).

 11. Avatar
  கண்ணன் says:

  வேண்டுமென்றால் ஒருத்தருக்கொருவர் நேரடியாக போதி அடித்துக்கொள்ளலாமே ? அதைச்செய்வதற்கேன் உங்களுக்கு வேண்டும், விநாயகர் ? அனுமார் ? ராமர் ? குரான் ? மகமது நபி ?

  நியாயமான கேள்விதான்; சண்டைக்கு வருவது தனிமனிதனானால் இன்னொரு தனிமனிதனைமோதவிட்டுவிடலாம்; குரானையும் ஹதீஸையும் நபியையும் ஜிஹாதையும் முன் நிறுத்தி போர் நிகழ்த்தும்போது ‘ஹரஹர மஹாதேவ்!’ என்ற கோஷம் கிளம்பத்தானே செய்யும். சமூக தளங்களில் மதச்சார்பற்ற செயல்பாடுகள் எனன்பது ஒருவழிப் பாதையாக இருக்க முடியாது. மதத்தை முன்வைத்து தனி தேசீயம் என்று பேசபட்டு அதன் வெற்றியாக நாடு பிரிக்கப்பட்டதே அது எப்படி? முன்னாள் பாகிஸதான் அதிபர் பூட்டோ சொன்னார், ’15 ஆம் நூற்றாண்டில் முகம்மதுபின் காசிம் உள்ளே வரும்போதே பாககி8ஸதான் தோன்றிவிட்டது” என்று.

  இந்த தேசத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கட்டிக்காத்து வந்த தேசீயத்தன்மையான பன்முகத்தன்மை யாரால் எப்படி அழிக்கப்படுகிறது என்பதை விண்டுபேசி கண்டிக்கத்திராணியில்லாதவர்கள், ஏற்கெனவவே சாத்வீகமாய் இருப்பவர்க்கே மீண்டடும் மீண்டும் உபதேசங்கள் செய்கிறீர்களே! அப்போதுதானே உபதேசிப்பவர்க்கு ஆபத்தொன்றும் இராது; மேர்லும் சமரஸ ஸன்மார்க்கி என்ற பெருமையும் கிடைக்குமே! ஒரெ கல்லில் இரண்டு மாங்காய்; ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி!

  இப்போது. இத்தாலி அம்மை தலைமையில் உள்ள குழு மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளதே; சன்மார்க்கிகளே அது என்ன என்று உங்கள் உரைகல்லில் உரசிப்பார்த்துச்சொல்லுங்களென்!

 12. Avatar
  A.K.Chandramouli says:

  Freedom fighters used all methods to unite people against britishers. Rabindranath Tagore organised common people when Bengal partition was impossed. It was during October, he tied rakhi to 50,000 people and made them understand the danger. you can not view everything with communal eye. it has become a fashion to cretisise Hindus. they say whatever Hindus do are communal. They dont have the guts to coment the of atrocities of Muslims and Christians.Can you say they dont do anything aganst the communal hormony?

 13. Avatar
  Kavya says:

  சந்திரமவுலி !

  முக்கால் நூற்றாண்டுக்கு முன் வெள்ளைக்காரன் நம்மை ஆண்ட காலத்தோடு இக்காலத்தை ஒப்பிட்டால் முடிவுகள் சரியாக வரா. திலக், தாகூர் காலம் சுதந்திரப் போராட்டக்காலம். வெள்ளையனிடம் சுதந்திரம் வாங்க மத, இன பேதமில்லாமல் இந்தியர்கள் ஒன்றாக நின்றார்கள். Indians stood united cutting across religious and linguistic divisions against the common enemy the British. நாடு சுதந்திரம் அடையும் இறுதிக்காலத்தில்தான் இந்து முசுலீம் பிளவு ஏற்பட்டது.

  அன்று அப்படிப் பார்க்கத் தேவையேதுமில்லை. இன்று தேவைப்படுகிறது. There was no need to look at events through communal glasses during our freedom struggle. But today, it has become necessary to fear and warn that an event like Pillayaar procession or Meelaadi nabi procession will have the potential to ignite communal clashes felling innocent lives. அன்று விநாயகர் ஊர்வலமோ, முசுலீம் ஊர்வலமோ மக்களை ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும்படி செய்யவில்லை. இன்று செய்கிறது. If u do, Muslims will do; if they do, u will do. Tit for tat. Where s God here ? Indeed u r mocking at God, aren’t u?

  இக்காலக் காரணிகளைக் கொண்டுதான் பயப்படுகிறோம். எனவே திலக் அன்று செய்தார் ஒன்றும் நடக்கவில்லை சரி. அன்று அப்படி மக்கள் வாழ்ந்தார்கள். இன்று அப்படி இல்லை. இதைப்புரிந்து கொண்டால், நாடு நலம்பெற ஒவ்வொருவரும் தன் மதத்தையும் மதவழி ஆர்ப்பாட்டங்களையும் பொதுவில் செய்யும்போது it poses danger to communal harmony. எனவே வீட்டிலோ, சர்ச்சிலோ, மஜூதியிலோ, அவரவர் வீடுகளிலோ பத்திரமாகப் பொத்திவைத்துக் கொண்டால், இறைவன் அதைத்தவறென்று சொல்ல மாட்டான். Govt s afraid to clamp down on any one. Because if I clamp down on u, you will cry I am against Hindus; If I clamp down on them, they will cry I am against the minority communities. U r already doing it here, aren’t u? Government is between deep sea and the devil !

  Please understand that we should not use religion to disrupt public harmony. In private have your religion and raucous celebrations. Not in public, with the malicious motive to provoke others. Please also understand that the anti social elements are waiting at every opportunity to disrupt social peace; and for them, such celebrations are convenient and easy tools.

  Live today. Forget the past. Don’t ape bad examples from Maharashtraians or Gujratis. If at all, take the one that does you good.

 14. Avatar
  Kavya says:

  விநாயகர் சதுர்த்தி மூலமாக பல இடங்களில் இளைஞர்கள் ஒன்று சேருகிறார்கள். நாட்டின் பயங்கரவாதம், தன்னம்பிக்கை போன்ற பல நல்லவற்றை பயில்கிறார்கள்//

  பிரவீன் குமார்!

  என்ன தமிழ் இது? பயங்கரவாதத்தை பயில விநாயகர் சதுர்த்தியா ?

  போகட்டும். நீங்கள் சொல்லவரும் கருத்து என்னவென்றால், பயங்கரவாதத்துக்கு எதிராக இளைஞர்களைக் கூட்ட பிள்ளையார் ஊர்வலம் வேண்டும். இல்லையா ? அதைத்தான் வேண்டாமென்கிறேன். ஏனென்றால், முசுலீம்களும் இந்து பயங்கரவாதத்துக்கு (மாலேகான்) எதிராக மீலாடி நபி ஊர்வலத்தில் இளைஞர்களைக்கூட்ட முடியும். கிருத்துவர்கள் பங்களூரு மேரி சிலையுடைப்பு, கந்தேமால் கன்னியாஸ்திரீயின் கற்பழிப்புக்கெதிராக ஒரு மத ஊர்வலத்தை கூட்டி அவர்கள் இளைஞர்களுக்கு வெறியேற்ற முடியும்.

  பயங்கரவாதத்துக்கு எதிராக இளைஞர்களைக்கூட்ட மதம் பயன்படுமேயானால், அது இறைவனின் மதமன்று. பேயின் மதமே. இறைவனைப்பற்றிய ஆன்மிகத்தைத் தரும் மதத்தை எதற்குபயன்படுத்த வேண்டுமோ அதற்குத்தான் பயன்படுத்தவேண்டும்.மக்களிடையே அன்பையும் பரிவையும் சகோதர்த்துவத்தையும் வளர்க்க பேண மட்டுமே மதம்.

  இல்லை இல்லை விநாயகர் ஊர்வலத்தை வைத்து இளைஞர்களுக்கு வெறியேற்றுவோமென்றால், அல்லாஹோ அக்பர் என்று சொல்லி குண்டுவைத்து அப்பாவி மக்களைக்கொல்லும் தீவிரவாதிகளைக் குற்றம் சொல்லும் அருகதையை நீங்கள் இழக்கிறீர்கள்.

 15. Avatar
  Kavya says:

  //ஏற்கெனவவே சாத்வீகமாய் இருப்பவர்க்கே மீண்டடும் மீண்டும் உபதேசங்கள் செய்கிறீர்களே//

  கண்ணன்

  எல்லா மதங்களுமே விமர்சிக்கப்படுகின்றன. தமிழகத்துக்கு விநாயகர் ஊர்வலம் என்பது புதியது. அது இந்து முன்னனியினரால் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இது தேவையில்லை. இங்கே முசுலீகளும் கிருத்துவர்களும் இந்துக்களோடு ஒற்றுமையாகத்தான் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால தற்கால்த்தில் அவ்வொற்றுமை குலைந்துவர வாய்ப்புக்களை வேண்டுமென்றே உருவாக்கி வருகிறார்கள். விநாயகர் ஊர்வலம் அதைச் செய்கிறது என்பதே என் வாதம். விநாயகரைப்பந்தலில் வைத்து 10 நாட்கள் வணங்குவது ஓகே. ஊர்வலம் தேவையில்லை. அது மராட்டியர் பழக்கம். நமக்கெதற்கு ? விநாயகரை மராட்டியரும் குஜராத்தியரும் அசிங்கப்படுத்தி செய்யும் செயலை நாம் ஏன் காப்பியடிக்கவேண்டும் ?

  என் கட்டுரை தமிழ்நாட்டில் நடக்கும் ஒரு புதிய செயலைப்பற்றியதே. எனவெ இந்தியா லெவலுக்குப் போக வேண்டாம்.

 16. Avatar
  கண்ணன் says:

  ‘எல்லா மதங்களுமே விமர்சிக்கப்படுகின்றன’. பச்சைப் பொய். எல்லாமத விமர்சன லட்சனம் இந்த பதிலிலேயே காணக்கிடைக்கிறதே!

  மலேகான் குண்டுவெடிப்பை ‘ஹிந்து பயங்கரவாத’மாகச்சித்தரிக்கிறீர்கள்! அது எப்படி? அதை நிகழ்த்தியவர்கள் ஹிந்துக்களாக இருக்கலாம்; ஆனால் ஹிந்து தத்துவங்களில், மத நுல்களில் உள்ள அடிப்படைக்கருத்திற்காக அது நிகழ்த்தப்பட்டதா? அதாவது ‘ஜிஹாத்’தைப்போல். ஹிந்து மத நூல்கள் ‘தாருல் இஸ்லாம்’ போன்ற கருத்தை முன் வைக்கிறதா? தாங்கள் இதைப் பற்றியெல்லாம் விமர்சனக்கட்டுரை எழுதியிருக்கிறீகளா? எடுத்துக் காட்டுங்கள்; படித்துப் பயன் பெறுகிறேன்.

  நான் சொல்லவந்த விஷயத்தின் அடிப்படையை கண்டுகொள்ளாமல் தமிழகத்தில் திடீரென்று நியாயமான காரணம் ஒன்றுமில்லாமல் வினாயகசதுர்த்தி ஊர்வலம் தொடங்கியாதக எழுதியது என்ன மாதிரி விமர்சனம். மசூதிகளின் முன் எந்த ஊர்வலம் போனாலும் எந்த வாத்தியமும் வாசிக்கப்ப்டாமல்தான் போகவேண்டும் என்று முகலாய ஆட்சியின் தொடர்ச்சியாக ஒரு நிலை இருந்தது உங்களுக்குத் தெரியுமா?

  இந்தியாவிற்கெல்லாம் போகக்கூடாது என்கிறீர்கள்! தமிழகம், ஒரிசா, மலேகான் எல்லாம் இந்தியாவில்தானே இருக்கிறது. நீங்கள் மலேகான் வரை போகும்போது நான் இன்னும் கொஞ்சம் எட்டி லஹோர் வரை போகக்கூடாதா? நீங்கள் குறிப்பிட்டதெல்லாம் ஹிந்துக்களாலேயே நிகழ்த்தப்பட்டது(இன்னும் நிரூபிக்கப்படவில்லை இங்கே, ஆனால் விமர்சனமுண்டு; அங்கே நிரூபிக்கப்பட்ட பலதுக்கும் இன்னும் தண்டனையே கிடையாது, அப்படியிருப்பதைப் பற்றிய விமர்சனமும் உங்களைப்போன்றவர்களால் செய்யப்படாது)என்று கொண்டாலும் ஜிஹாத், pan islamism, வஹாபியிஸம் இவற்றின் அடிப்படையில் நிகழும் பயங்கரங்களையும் அவற்றுக்கு எதிர்வினையாக நிகழ்பவைகளையும் ஒரே தரத்தில் வைத்து நோக்குவது என்னவிதமான் நீதி? சரி, அப்படியாவது சமமான விமர்சனம் முன் வைக்கப்படுகிறதாவென்று பார்த்தால் அதுவும் இல்லை!

  அது போகட்டும், தமிழகத்தில் LTTE நடத்திய பயங்கரங்களைப்பற்றிய விமர்சனங்களாவது தாங்களால் முன் வைக்கப்பட்டிருந்தால் அதன் சுட்டியையாவது தந்து உதவுங்களேன்.

  1. Avatar
   BC says:

   தமிழகத்தில் LTTE பயங்கரங்கரவாதிகளை ஜனநாயக உத்தமர்களாக சித்தரிக்கும் சுட்டிகள் மட்டுமே கிடைக்கும்.

 17. Avatar
  Paramasivam says:

  thamizhnattukku vinayagar uurvalam pudhithu adhanaal anaavasiyamaaga pirachnai uruvaagirathu yendru katturaiyaalar sollugiraar idhil yenna thavaru?avanai niruttha sollu naan nirutthugiren yendru solla thodanginaal adharku mudiveyillai

  1. Avatar
   GovindGocha says:

   ஒன்று ஆங்கிலத்தில் எழுதுங்கள்…. otherwise write in TAMIL… இப்படி போட்டு KILLலாதீர்கள்… பரமSIVAM…

 18. Avatar
  A.K.Chandramouli says:

  I dont coment about today’s Ganesh Uthsav and procession. I protest the coment that Thilak was doing religiuos politics(Matha arasial) by Ganesh uthsav. Now you have come down to coment only about Ganesh uthsav. Please dont write like this. If we take your view as it is Gandhiji also is communal since he sang Ramdhun, he believed in Rama Rajya, he respected Bhagwath Geetha. Bharath is communal,since he believed Parasakthi.

 19. Avatar
  anony says:

  கண்ணன்: {இந்த தேசத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கட்டிக்காத்து வந்த தேசீயத்தன்மையான பன்முகத்தன்மை …}

  இந்தத் தேசமே ஆங்கிலேயர்களால்தான் உருவாக்கப்பட்டது.. அப்படியிருக்கப் பல்லாயிரம் ஆண்டுகள் என்று கதை விடுவது ஏன்?

 20. Avatar
  கண்ணன் says:

  அபத்தம், இந்த ‘தேச’த்தை ஆங்கிலயர்களா உருவாக்கினார்கள்; அவர்களால், ஸ்காட்லாந்து,ஐயர்லாந்து, இங்கிலாந்து இவற்றையே ஒன்றாக உருவாக்க முடியாத நிலையில் இங்கே வந்து ஒன்றாக்கினார்களாக்கும்; தேசமென்பது என்ன? பூகோளமா? அரச்சாங்கமா? இவற்றையே எடுத்துக்கொண்டால்கூட அவர்களுக்குமுன்னே மொகலாயர்கள் பெருமளவு ஒரு பேரரசாக ஆண்டிருக்ககிறார்கள்; அதற்கு முன்னே அசோகர் பெருமளவு ஒன்றுபட்ட அரசாக இந்தியாவை ஆண்டிருக்கிறார். ஆனால் ஆங்கிலேயர் மூன்று பகுதிகளாகத்தான் இந்த தேசத்தை விட்டுச்சென்றனர்; ஒன்றாக இல்லை; பிரிட்டிஷ் இந்தியா, சமஸ்தானங்கள், பாகிஸ்தான். மேலும் தேசமென்பதற்கும் அரசாங்கம்(ஸ்டேட்)என்பதற்கும் பெரிய வேறுபாடுண்டு. ஆங்கிலேயர்கள் அரசாட்சியை நிறுவினர்(அதுகூட முழுதாக இல்லை) தேசம் அவர்களால் நிறுவப்படவில்லை; இவள் என்று பிறந்தனள் என்று சூழ்கலைவாணர்களும் அறியயப்படமுடியாதவளாகத்தான் இருக்கிறாள் எங்கள் தாய்!

  ஒரே சிலுவையைக்கும்பிட்டும்கூட ப்ராடஸ்டன்ட் அல்லாதவன் அங்கே ஆட்சிக்கே வரமுடியாது என்ற நிலையிலுள்ள ஒரு நாட்டவன் இங்கே வந்து நமக்கு பன்முகத்தன்மையைக் கற்றுக்கொடுத்தானாக்கும். பெயரிலி அவர்களே, மெக்காலேயின் மூளைச்சலவை நன்றாக வேலை செய்கிறது!

 21. Avatar
  smitha says:

  Kavya, I pity your ignorance.

  U compare the processionists of vinaya chathiurthi with the jehadists?

  Young muslims are taught to hate other religions notably hinduism in madarasas. If you dunno, U are either dumb or blind.

  Meelad un nabi processions have been happening in tamil nadu for a long time. There has even been violence, but why no one has commented on this?

  When osama bin laden dies, the mecca masjid in mount road, chennai conducted a prayer for him. Is this not anti national? Why none of U critcised it?

  It is bcos U know what will happen if you criticise islam or christianity. We saw what happened to the kerala professor who set a question paper.

  In india, if U are pro hindu, U are communal. If U are anti hindu, U are secular.

  Kavya is no exception.

 22. Avatar
  Kavya says:

  சுமிதா

  விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தமிழ்நாட்டில் ஏன் என்ற கேள்வியும் அதைப்பார்த்தே மீலாடி நபி ஊர்வலத்தை தமிழ் முசுலீம்கள் நடாத்தினார்கள் என்றும்தான் சொல்லப்பட்டது. கர்ன்நாடகா, மஹாராஷ்ட்ரா விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் இங்கே ஒப்பிடப்படவில்லை. தமிழ்நாடு மட்டுமே கட்டுரையில் பேசப்படுகிறது.

  தமிழ்முசுலீம்கள் ஜிஹாதிகள் கிடையா. அவர்கள் நடாத்திய ஊர்வலம் ஜிஹாதிகள் ஊர்வலம் என்று சொல்லல் குறும்புத்தனமானது. ஒரு சிலர் இருக்கலாம், தனிமரம் தோப்பாகாது. அப்படிப்பார்த்தால் இந்துக்களில் தாராசிங் போல பல கொடியவர்கள் உண்டு எப்போதும். கோட்சே இல்லையா ? உடனே அனைத்து இந்துக்களும் கோட்சே, தாராசிங் பக்கம் எனலாமா ? முடியாது.

  எனக்கு இரண்டு ஊர்வலங்களும் சமய நல்லிணக்கத்திற்கும் சமூக உறவுகளுக்கும் பங்கம் ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

  நீங்கள் சொன்னவண்ணம் மீலாடி நபி ஊர்வலம் முன்பே நடந்திருக்கலாம். ஆனால் 80 களில் அதன் தன்மை மாறியது. இந்து முன்னனியருக்கு தக்க பதில் சொல்ல‌ வேண்டுமென்று நோக்கத்திலேயே நடாத்தப்பட்டதை நான் கண்ணால் பார்த்தவன் சென்னை கடற்கரைச் சாலையில். ஒரு மணி நேரம். லாரி, லாரியாக இளைஞர் பட்டாளம்; இசுலாமியச்சின்னங்களை முரட்டுத்தனமாகக் காட்டியும் அசைத்தும் கொண்டு, போருக்குச் செல்லும் படைகளைப்போல வீர முழக்கங்கள் போன்று. அதன் உட்பொருள், ‘நாங்கள் இளிச்சவாயர்கள் அல்ல இந்து முன்னனியரே!’ என்பதுதான்.

  இந்து முன்னனி தமிழ்நாட்டில் உருவாக்கிக்கொண்டு வளர்த்துவரும் விநாயகர் ஊர்வலம் கெட்ட நோக்கம் கொண்டது. அதில் இந்துக்களுக்கு ஆன்மிகம் வளராது. நாம் இந்துக்கள் என்ற மத வெறி மட்டுமே உருவாகும். இந்து முன்னனியின் நோக்கம் கோவிந்த் கோச்சா என்பவர் சொன்னதுதான்: இந்துக்களுக்கு சகிப்புத்தன்மை கூடாது. சகிப்புத்தன்மையால் இசுலாமியரும் கிருத்துவரும் நம் நாட்டைப்பிடித்துக்கொண்டார்கள். அவர்களை வன்முறை கொண்டே தடுத்தி வெளியேற்ற வேண்டும்; அதற்கு இந்துக்களை ஒன்று சேர்த்து ஒரு பெரும் எதிர்ச்சக்தியாக்க வேண்டும்” என்பதே. இந்த நோக்கமே விநாயகர் ஊர்வலத்தின் அடிப்படை. இந்து முன்னனியின் தமிழ்நாட்டின் தலைவரை ‘வீரத்துறவி’ என்றுதான் அவர் ஆட்கள் அழைக்கிறார்கள். எந்த வீரம் ?

  ஜிஹாதிகள் ஒரு சிலரே. அவர்களைப்போல இவர்களும் ஒருசிலராக இருப்பின் சரி. மாறாக அனைத்து இந்துக்களுக்கு கிருத்துவரையும் இசுலாமியரையும் சமாளிக்க வன்முறை எடுத்தால் தவறல்ல என்று பிரச்சாரம் பண்ணுகிறார்கள். கோவிந்த கோச்சாவின் பதிலிலேயே இருக்கிறது அப்பிரச்சாரம். ஏன் தமிழ்மக்கள் அனைவரும் இவர்கள் வலையில் வீழ்ந்து மாள வேண்டும்? தமிழ்மக்களிடையே சாதிச்சண்டைகள் இருக்கலாம். ஆனால் மத நல்லிணக்கம் என்றுமே இருந்து வருகிறது.

  பெருமாள் கோயில் ஊர்வலம் எப்படியோ அப்படித்தான் ஆன்மிக ஊர்வலங்கள் இருக்கவேண்டும். கோயிலைச்சுற்றி இருக்கும் சன்னதித் தெருக்களில் மட்டுமே பெருமாள் ஊர்வலம் வருவார். அவ்வூர்வலத்தின் நோக்கம் என்னவென்றால், வயதானவர்கள்; நடக்கவியலாமல் வீட்டினுள்ளே உறைவோர்; கோயிலுக்கு வரவியலா மாத விலக்குப் பெண்டிர்; நோயுற்றோர் – இவர்களுக்கும் பெருமாள் தரிசனம் இருக்கவேண்டுமெனக் கருதிய நம்முன்னோர் வகுத்த ஒரு நற்செயலே பெருமாள் ஊர்வலம்.

  இவ்வாறு, ஊர்வலம் முக்கியமல்ல; அதன் நோக்கமே முக்கியம். இதைப்புரிந்து கொண்டால் இருகருத்துக்களுக்கு இடமில்லை.

 23. Avatar
  Kavya says:

  Mr Chndramouli

  U shd comment on what s happening in TN, coz it s our immediate concern. When religion is practiced at homes, in places of worship, and also, in certain exclusive enclaves, rented for the purpose, with prior announcements, so as to have the audience of only that particular religious ppl, it s pure religion. All other kinds r malicious and motivated. V call it religio-politics esp. seeing from today Indian context. I said Tilak showed the way, willy-nilly. A bad model for TN.

  Gandhi did all u said. But he also said Muslims and Hindus r bros and sisters. For that, he was assassinated not by Muslims, but by Hindu fanatics. Bharathi wd have become communal if he had stopped short of his hindutva spewing essays. But he went beyond that and called for amity and brotherhood between religions. His poem linking all Gods worshipped by major religions in India was the assembly song in my college. The oration he delivered in the Kandhoori festival at Pottal Pudur Durga (Mosque) near his wife’s hometown Kadayam shd be read by u. It pays rich encomiums on the Prophet and the noble sentiments embedded in the Holy Quran. The said Mosque is the most famous one in Nellai dist. Luckily no fanatic Hindu had read it; or even read, v cd say Tamil Hindus r good ppl. So, he was not assassinated. He died naturally.

 24. Avatar
  anony says:

  நாடு என்பதற்கு நீங்கள் ஒரு வரையறையைச் சொல்ல மாட்டீர்கள். நான் என்ன சொன்னாலும் ‘நீங்கள் சொல்வது தவறு, நாடு, தேசம் என்பதற்கான பொருள் வேறு’ என்று உங்கள் எல்லைக் கோட்டை மாற்றிக்கொண்டே இருப்பீர்கள்.
  என்னுடைய கேள்வி இதுதான் எத்தனைப் பல்லாயிரம் ஆண்டுகளாக என் தமிழ்நாடு ‘உங்கள்’ தேசத்தின் ஒரு பகுதியாக இருந்துவருகிறது?

 25. Avatar
  GovindGocha says:

  ஆனால் எங்கள் தமிழ்நாடு இந்திய தேசத்தின் பகுதியாக இருப்பதில் எங்களுக்கு உடன்பாடே…
  ஆயிரம் உண்டிங்கு ஜாதி இதில் அந்நியர் புகுதல் என்ன நியதி…

 26. Avatar
  anony says:

  என்ன ஆனாலும் கேள்விக்குப் பதில் சொல்ல மாட்டீர்கள் இல்லையா?

 27. Avatar
  anony says:

  உங்கள் வார்த்தைக்கு நீங்கள் விளக்கம் கொடுக்கவேண்டும் என்று கேட்பது முரண்டுபிடித்தலா? என்ன விவாதம் ஐயா இது. நீங்கள் பொய்யர் என்பது தெரிகிறது.. நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *