சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா
கண்ணுக்குப் புலப்படா கருந்துளை
கதிரலை வீசிக்
கருவி களுக்குத் தெரிகிறது !
காலவெளிக் கருங்கடலில்
பிரபஞ்சங் களுக்குப்
பாலம் கட்டுவது கருந்துளை !
பிண்டம் சக்தி ஆவதும்
சக்தி பிண்ட மாவதும்
இந்த மர்மக் குகையில்தான் !
பிரபஞ்சக் குயவனின்
சுரங்கக் களிமண் !
புதிய பிரபஞ்சம்
உருவாகும்
எதிர்காலக் களஞ்சியம் !
விளைவுத் தொடுவானம்
ஒளி உறிஞ்சும் உடும்பு !
விண்மீன் விழுங்கிகள் !
காலாக்ஸிகள் பின்னலாம் !
எண்ணற்ற
விண்மீன்கள் உருவாகலாம் !
பிரபஞ்சம் இடும்
பலகோடிக் கரு முட்டைகள்
கருந்துளைகளா ?
ஒற்றைக் கரு முட்டையில்
உருவாவது
ஒரு பிரபஞ்சமா ?
பல பிரபஞ் சங்களா ?
ஸ்டீஃபென் ஹாக்கிங் (1970)
“சமீபத்திய ஹப்பிள் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் வானியல் விஞ்ஞானிகளுக்கு மாபெரும் பிரபஞ்சச் சவாலாகி விட்டன ! காரணம் அது ஒவ்வொரு காலாக்ஸியின் மையத்திலும் பூதகரமான கருந்துளை ஒன்று இருப்பைத் திறந்து காட்டி விட்டது !”
ஸ்டீவ் நாடிஸ், (Astronomy Science Editor)
“நமது பிரபஞ்சமே அடுத்தோர் பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள கருந்துளைக் குள்ளே இருக்கலாம். ஈர்ப்பியல் நியதியில் செய்யும் சிறிது மாற்றம் நமது பிரபஞ்சம் ஒரு கருந்துளையிலிருந்து தோன்றும் போது அதன் காலத் திசைப்போக்கை (Arrow of Time) வாரிசாகப் பெற்றது என்பதை மறைமுகமாய்க் காட்டும்.”
பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்வுச் சுற்று ஆயுள் முடிந்த பின் பெருநிறை விண்மீன்கள் (Massive Stars) ஒருவேளை சிதைந்து, ஒற்றைப் பூதநிறை வடிவுக் (Super Massive Object) கருந்துளைகள் நிலைபெறத் தோன்றியிருக்கலாம்.
ஆன்ரியா கீஸ், வானியல் பௌதிகப் பேராசிரியை (Andrea Ghez, UCLA)
“புதிய பொறிநுணுக்க முறை “விளைவுத் தொடுவானைத்” (Event Horizon) தெளிவாகக் காட்டுகிறது. அதுவே கருந்துளை இருப்பை நேரிடைச் சான்றாக நிரூபிக்கிறது.”
ஸ்டீவ் நாடிஸ், (Astronomy Science Editor)
பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தில் மர்மமான விசித்திரங்கள் ! ஆயினும் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பி யுள்ளன ! எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி வீசும் விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்துபோய் திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் சிதைந்து “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை ஆவது. அப்போது கருந் துளையின் அழுத்தம், திணிவு கணக்களவில் முடிவற்று மிகுந்து விடுகிறது (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !
நீண்ட காலம் தாமதமாகி விட்ட ரேடியோ விண்ணோக்கியை ரஷ்யா 2011 ஆகஸ்டு 15 ஆம் தேதி பூமியிலிருந்து ஏவி புவிமையச் சுழல்வீதியில் (Geocentric Orbit) சுற்ற வைத்தது. அதை அனுப்பியதின் முக்கிய குறிக்கோள் விண்வெளியில் உள்ள காலக்ஸி மையத்தில் இருக்கும் கருந்துளையை ஆழ்ந்து ஆராய்வது. மேலும் முறிந்து போன விண்மீன்களைப் படமெடுப்பது, அடுத்து கருஞ்சக்தியால் விரியும் பிரமஞ்சத்தின் பாதிப்பை அளப்பது. ரேடியோ தொலை நோக்கியின் பெயர் ஸ்கெப்டர்-ஆர் (Skeptr-R). அதைத் தூக்கிச் சென்ற ரஷ்ய ராக்கெட் ஸெனித் (Zenit -2 SB Rocket) காஸக்ஸ்தான் பைகோனூர் ஏவு தளத்திலிருந்து (Russian Baikonour Cosmodrome, Kazakhstan) ஏவப் பட்டது,
விண்ணுளவியில் இருபெரும் சூரியத் தட்டுகள் மின்சக்தி அளிக்க இணைக்கப்பட்டுள்ளன. ஸெனித் ராக்கெட் 20 மாடி உயரம் உள்ளது. முதற்கட்ட (First Stage) ராக்கெட்டின் எரிசக்தி கெரோசின் திரவம். பத்து நிமிடங்களில் இரண்டு கட்ட ஸெனித் ராக்கெட்கள் ஃபிரிகட் மேநிலை அமைப்பைப் (Fregat Upper Stage) பூமிக்கு மேல் ஒருசில நூறு மைல் உயரத்தில் ‘ஓய்வுச் சுற்று வீதியில்’ (Parking Orbit Around Earth) ஏற்றி விட்டது. இறுதியில் ஃபிரிகட் கட்ட ராக்கெட் இருமுறை சுட்டு ஸ்கெப்டர் விண்ணுளவியை நிலவுக்கருகில் 210,000 மைல் உயரத்தில் ஓர் புவிமையச் சுற்றுவீதியில் (Geocentric Orbit) நிலையாகப் போக உந்தியது.
பிரபஞ்சத்தில் கருந்துளைகள் என்பவை எவை ?
1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியின் அடிப்படையில் ஜெர்மன் வானியல் விஞ்ஞானி கார்ல் சுவார்ஸ்சைல்டு (Karl Schwarzschild), பிரபஞ்சத்தில் கருந்துளைகள் இருப்பதாக முதன்முதல் ஓரரிய விளக்கவுரையை அறிவித்தார். ஆனால் கருந்துளைகளைப் பற்றிய கொள்கை, அவருக்கும் முன்னால் 1780 ஆண்டுகளில் ஜான் மிச்செல், பியர் சைமன் லாப்பிளாஸ் (John Michell & Pierre Simon Laplace) ஆகியோர் இருவரும் அசுர ஈர்ப்பாற்றல் கொண்ட “கரும் விண்மீன்கள்” (Dark Stars) இருப்பதை எடுத்துரைத்தார்கள். அவற்றின் கவர்ச்சிப் பேராற்றலிலிருந்து ஒளி கூடத் தப்பிச் செல்ல முடியாது என்றும் கண்டறிந்தார்கள் ! ஆயினும் கண்ணுக்குப் புலப்படாத கருந்துளைகள் மெய்யாக உள்ளன என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள நூற்றி முப்பது ஆண்டுகள் கடந்தன !
(தொடரும்)
தகவல் :
Picture Credit : NASA, Russian Space Agency
1. Astronomy Today Chaisson & McMillan (1999)
2. Reader’s Digest – The Universe & How We See It By : Giles Sparrow (2001)
3. Universe By : Roger Freedman & William Kaifmann III (6th Edition) (2002)
4. Space Flight Now : Russian Satellite on Mission to Peer Inside Black Holes (July 18, 2011)
5. Space Flight Now : Russian Radio Telescope Deploys Huge Antenna (July 25, 2011)
6. Wikipedia Skeptr-R (Aug 26, 2011)
++++++++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) (September 1, 2011)
http://jayabarathan.wordpress.
- பல்லுயிரியம் (Bio-Diversity) : திரு.ச.முகமது அலி
- அப்பா…! அப்பப்பா…!!
- சொர்க்கமும் நரகமும்
- வண்ணார் சலவை குறிகள்
- ‘யாரோ’ ஒருவருக்காக
- காயகல்பம்
- ஆயுதங்களும், ஊழலும், மனித உரிமை மீறல்களும்
- குரூரமான சொர்க்கம்
- அன்னா ஹசாரே -ஒரு பார்வை
- திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2011
- எது சிரிப்பு? என் சிரிப்பா ?
- புதுச்சேரியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்
- பேசும் படங்கள்: ஐ..டி ஹைவேயில்.. ரெடியாகுது ”எலி 2011“ டின்னர்….
- கதையல்ல வரலாறு -2-3: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்
- நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழா
- மத்தியில் ஊழல் ஒழிப்பு, மாநிலத்தில் சமச்சீர் கல்வி
- ஊடகம் காட்டிய உண்ணாவிரதம்
- National Folklore Support Centre Newsletter September 2011
- முகம்
- வலியது
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 6
- எனது இலக்கிய அனுபவங்கள் – 14 எழுத்தாளர்கள் சந்திப்பு – 1 (அகிலன்)
- அடுத்த பாடல்
- பிணங்களை வெட்டுபவரின் குறிப்புக்கள்
- பிள்ளையார் சதுர்த்தி என்றாலே பயம்தான்!
- பீமாதாயி
- புவிமையச் சுழல்வீதியில் சுற்றிக் கருந்துளை ஆராயும் ரஷ்ய வானலை விண்ணோக்கி (Russian Satellite in Geocentric Orbit to Probe Black Holes )
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -3)
- அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைகள் பற்றிய அறிமுகம்
- குமார் மூர்த்தியின் பத்தாவது நினைவு ஆண்டு
- பரீக்ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் முனியன் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி
- காணாமல் போனவர்கள்
- அவன் …அவள் ..அது ..
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கருங்கல்லும், மதுக் கிண்ணமும்) (கவிதை -46)
- எங்கிருக்கிறேன் நான்?
- கருணையாய் ஒரு வாழ்வு
- ஜ்வெல்லோன்
- மானும் கொம்பும்
- திரும்பிப் பார்க்க
- அந்த ஒரு விநாடி
- மன்னிப்பதற்கான கனவு
- சில்லரை
- நிலா மற்றும்..
- காரும் களமும்
- கனவு
- குப்பைத்தொட்டியாய்
- தாகம்
- ஜென் ஒரு புரிதல் பகுதி 9
- சித. சிதம்பரம் அவர்களின் பூம்புகார்க் கவிதைகள் பரப்பும் புதுமணம்
- உன் இரவு
- கனவுகளின் விடியற்காலை
- முன்னணியின் பின்னணிகள் – 3 சாமர்செட் மாம்
- பஞ்சதந்திரம் தொடர் 7 – தேவசர்மாவும் ஆஷாடபூதியும்
- அசாரேயின் துவக்கமும் – கொள்ளையர்களின் பதட்டமும்.