வலியது

This entry is part 20 of 54 in the series 4 செப்டம்பர் 2011

காற்றில் படபடக்கிறது

காலண்டர் தாள்..

கை நடுங்குகிறதா,

கிழித்தெடுக்கத் தயக்கமா-

கடந்துவிட்ட நேற்றை எண்ணி

நடுக்கமா !

 

கிழித்தெறி நேற்றை..

அழித்திடு நினைவில்,

அன்று பெற்ற அல்லலை..

நினைத்திடு நல்லதை..

நன்றாகிவிடும்

இன்று !

 

நம்பிக்கை-

தும்பிக்கையை விட

வலியதல்லவா !

 

-செண்பக ஜெகதீசன்..

Series Navigationமுகம்ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 6
author

செண்பக ஜெகதீசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *