அந்நியர்களின் வருகை…

அந்நியர்களின் வருகை…

பொ.மனோ முற்குறிப்பு :  இக்கட்டுரையில் உள்ளடங்கியிருக்கும் தகவல்கள் ஒருசாராருக்கு தமது வாழ்நாளில் கேள்விப்பட்டிராத, ஒரு சுத்தப் பைத்தியக்காரத்தனமான, நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விடயமாக தோற்றமளிக்கலாம். ஆனால் இது சம்பந்தமான ஆர்வமுள்ள மறுசாராருக்கு ஒரு புதுச்சிந்தனை ஓட்டத்தை தூண்டிவிடுவதாக இருக்குமென்பதுடன் இக்கட்டுரை ஒரு விருந்தாகக்கூட…

முன்னணியின் பின்னணிகள் – 11 சாமர்செம் மாம்

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் திரிஃபீல்ட் தம்பதியர் என்மேல் ஏன் இத்தனை பரிவு பாராட்டினார்கள் என்பதே புரியாப் புதிராய் இருந்தது. இயல்பான இதயத்தின் கனிவே அது. வேறு விளக்கம் இல்லை. சகஜமாய்ப் பேசாத சங்கோஜிதான் நான். என்மேல் டெட் திரிஃபீல்ட் ஆர்வப்பட்டார் என்றால்…

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 49

     இந்த வாரம் ल्यप्प्रत्ययः ( lyappratyayaḥ) பற்றித் தெரிந்து கொள்வோம்.  எப்போது ஒருவர் இரண்டு செயல்கள் செய்கிறாரோ அப்போது முதலில் செய்த காரியத்தின் வினைச்சொல்லுடன் क्त्वाप्रत्ययः (ktvāpratyayaḥ ) சேர்க்கவேண்டும் என்று படித்தோமல்லவா? அதே விதிமுறைதான் ल्यप्प्रत्ययः (…

பஞ்சதந்திரம் தொடர் 15 அன்னமும் ஆந்தையும்

அன்னமும் ஆந்தையும்   ''ஒரு காட்டில் பெரிய ஏரி ஒன்றிருந்தது. அங்கே மதரக்தன் என்கிற  அன்னப்பறவை ஒன்று இருந்தது. அது பலவிதமாய் விளையாடி ஆனந்தமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தது. இப்படி வெகு காலம் சென்றபிறகு,  ஒருநாள் அதற்கு யமனாக ஒரு ஆந்தை அங்கு வந்து…

அந்த இடைவெளி…

இரைதேடச் செல்லும் பறவை இரையாகிப்போகிறது எங்கோ.. இறைதேடிச் செல்பவன் இறையாகிவிடுகிறான் இறந்து.. தொடங்கிடும் பயணமெல்லாம் தொடுவதில்லை இலக்கை.. தெடக்கத்திற்கும் முடிவுக்குமுள்ள இடைவெளிதான் இயற்கையோ- இறையோ...! -செண்பக ஜெகதீசன்...

ஜீ வி த ம்

“தமிழு....தமிழு...” – பொழுது விடிந்தும் விடியாத வேளையில் படுக்கையில் இருந்தமேனிக்கே குரல் கொடுத்தான் மாரிச்சாமி. வாசலில் ‘சளப்...சளப்’ – எனத் தண்ணீர் தெளிக்கும் சத்தம். “ஏண்டா அதுக்குள்ளாறயும் தமிழு...தமிழுங்குறே...? ஒந்தங்கச்சி விடியங்காட்டி எப்டி வந்து உம்முன்னாடி நிக்கும்? சூரியன் உதிச்சு வெயிலு…

ஜயமுண்டு பயமில்லை

காற்றில் மிதந்து வருகிற மாதிரி பரவச நிலையில் வந்துகொண்டிருந்த கவிஞரை அவர்கள் எதிர்கொண்டனர். விடியிருளில் நிழலுருவாய்த்தான் அவரது வடிவம் புலப்பட்டது. ஆனால் அவரது நடை, உடை, பாவனைகள் வருவது அவர்களுடைய கவிஞர்தான் என்பத்தை வெகு எளிதாய்ப் புலப்படுத்திவிட்டது கவிஞர் அருகில் வந்த…

கைப்பேசி பேசினால்

”கவியன்பன்” கலாம் நான் செய்த புரட்சிகள்: தத்திச் சென்ற தந்தியை வென்றேன் குறுஞ்செய்தியால் குவலயம் ஆள்கின்றேன் ஆறாம் விரலாய் ஆட்கொண்டே ஆட்டுவிக்கின்றேன் கைக்குள் அடக்கமாய் ஹைக்கூ கவிதையாய் “நச்”சென்று பேச வைத்தேன் ஏபிசிடி தெரியாமலே ஏடேதும் படிக்காமலே மிஸ்டு கால் மெஸேஜ்…

பறவைகளின் தீபாவளி

குமரி எஸ். நீலகண்டன் தீபாவளிக் கோலாகலத்தில் புகை மூட்டமாய் வானம்... ஏவியவர்களின் உற்சாகங்கள் வானத்தில் ஒளிப் பொதிகளாய் வானத்தில் சிதறின... நிலத்திலிருந்து உருவான மின்னலும் இடியும் மேகத்தில் போய் விழுந்தன... நகரத்தின் ஒற்றை மரங்களில் கூடு கட்டியப் பறவைகள் பூகம்பமென்று கூட்டினை…

இதுவும் அதுவும் உதுவும் – 2

வேற்றுமொழிப் படைப்புகளுக்கு அறிமுகமும் விமர்சனமும் எழுதுவது எளிது. யாரையும் புருவத்தை உயர்த்த வைக்காமல், ‘This rambling novel by a defrocked gay French black priest about the intimacy of a bisexual revolutionary with his wife’s…